பீன்ஸ் பூண்டு பொரியல் - Beans Poondu Poriyal Recipe / Beans Garlic Poriyal


print this page PRINT

எப்பொழுதும் பீன்ஸ் பொரியலுடன் துறுவிய தேங்காய் சேர்ப்பதற்கு பதிலாக அதில் பூண்டு சேர்த்து செய்வோம்.

மிகவும் நன்றாக இருக்கும். நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பீன்ஸ் - 1/4 கிலோ
  .  பூண்டு - 4 -5 பல் தோலுடன்
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .  கருவேப்பிலை - 5 இலைசெய்முறை :
  .  பீன்ஸியினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

  .  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.


  .  அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பீன்ஸ் + மஞ்சள் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து தட்டு போட்டு மூடி மிதமான தீயில் வேகவிடவும். 

(விரும்பினால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடலாம். நான் எப்பொழுதும் அப்படியே தட்டு போட்டு மூடி சிறிய தீயில் வேகவிடுவேன். )


  .  பூண்டினை அப்படியே தோலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு 2 - 3 முறை Pulse Modeயில் அடித்து கொள்ளவும்.


  .  பீன்ஸ் வெந்த பிறகு, அதில் பூண்டினை சேர்த்து நன்றாக கிளறி மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.


  .  சுவையான சத்தான பீன்ஸ் பூண்டு பொரியல் ரெடி. இதனை சாம்பார், ரசம், குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.எப்படி வெள்ளி பாத்திரம் சுத்தம் செய்வது - How to Clean Silver Vessels / Pooja Itemsprint this page PRINT

To view the Post in English , Please Scroll down the page.

இது மிகவும் குறைந்த நேரத்தில் புத்தம் புதுசு போல எளிதாக சுத்தம் செய்ய கூடிய முறை .

இதற்கு மிகவும் முக்கியமாக இரண்டு பொருட்கள் (Cooking Soda / Baking Soda & Aluminium Foil) இருந்தால் போதுமானது.

வெள்ளி பாத்திரங்கள் வைக்க தேவையான ஒரு பெரிய பாத்திரம் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

தேவையான பொருட்கள் :
  .  பெரிய பாத்திரம் - 1
  .  தண்ணீர் - தேவையான அளவு
  .  சோடா உப்பு - 4 மேஜை கரண்டி
  .  Aluminium Foil - 2 sheets

(இதில் நான கொடுத்துள்ள அளவு என்னுடைய பாத்திரங்களை சுத்தம் செய்த பொழுது பயன்படுத்தியது.

அவரவர் சுத்தம் செய்யும் பாத்திரத்தின் அளவினை பொருத்து Cooking Soda & Aluminium Foil அதிகம் / குறைத்து சேர்த்து கொள்ளவும். )


செய்முறை :
  .  சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளி பாத்திரங்களை எடுத்து கொள்ளவும்.


  .  பெரிய பாத்திரத்தில் 3/4 அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

  .  தண்ணீர் கொதிக்கும் நேரம், Aluminium Foilயினை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக கிழித்து வைத்து கொள்ளவும். (கவனிக்க : இப்படி சிறிய துண்டுகளாக கிழித்து வைப்பதால் வெள்ளி பாத்திரத்தின் அனைத்து பகுதியிலும் Aluminium Foil படும். இல்லை என்றால் கூடுதலாக Aluminium Foil பயனபடுத்தி கொள்ளலாம். )  .  தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது, aluminium foil pieces + Baking Soda + வெள்ளி பாத்திராங்கள் சேர்த்து மேலும் 3 - 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


  .  5 நிமிடங்கள் கழித்து வெள்ளி பாத்திரங்களை வெளியில் எடுத்தால் புதுசு போல பளிச்சிடும்.


கவனிக்க :
விரும்பினால் மேலும் பளிச்சிட Dishsoap வைத்து கழுவி கொள்ளலாம். ஆனால் நான் எதுவும் செய்யவில்லை. அப்படியே கொதிக்கும் தண்ணீரில் இருந்து எடுக்கும் பொழுதே சூப்பராக இருந்தது.

Things Needed for Cleaning :
  .  Big Vessel to fit all the Silver items
  .  Water
  .  Cooking Soda / Baking Soda - 4 Table Spoons 
  .  Aluminium Foil - 2 sheets

(The  quantity of Cooking Soda & Aluminium Foil given above are, which I used for cleaning Items Showed in picture.

 You can increase / Decrease the amount used depending upon the silver items you plan to clean.) 


Method :

  .  First take the big pot and pour 3/4 of water and bring it to  rolling boil.

  .  When the water is boiling, take the aluminium foil and tear it into small pieces. (Note: You can also add full aluminium sheets. But when you add small pieces it gets attached with all parts of the silver items. )

  .  When the water is boiling well, add the aluminium foil pieces + Baking Soda + Silver Items into it.

  .  Let it boil for another 3 - 5 minutes. 

  .  Carefully take the silver items from the water when hot. You will see sparkling silver vessels. 

Note:
Repeat the process when needed. But when you clean this method the vessels will stay good & sparkle like new for atleast a month or so...


சிக்கன் கீமா தோசை - Chicken Keema Dosai Recipe - Non-Veg Dosai Recipe


print this page PRINT
இதில் நான் சிக்கனை அரைத்து சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் கடைகளில் Grounded / Minced Chickenனே கிடைக்கும். அதனை சேர்த்தும் செய்யலாம்.

எப்பொழுது கீமாவிற்கு அரைக்கும் பொழுது எலும்பு /Bone இல்லாத துண்டுகளை தான் பயன்படுத்த வேண்டும்.

அதே மாதிரி சிக்கன் கீமா செய்தவுடன், மிகவும் சூடாக இருக்கும்பொழுதே, முட்டை சேர்க்க கூடாது. கீமாவினை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு தான் முட்டையில் சேர்க்க வேண்டும்.

இதில் நான் இரண்டு முட்டையின் வெள்ளை கருவினை பயன்படுத்தி இருக்கின்றேன் அதற்கு பதில் 1 முழு முட்டையினை மஞ்சள் கருவோடு சேர்த்து கொள்ளலாம்.

கண்டிப்பாக முட்டையின் அளவு, கீமா கலந்த பிறகு அதிகம் இருப்பதாக பார்த்து கொள்ளவும். அப்பொழுது தான் தோசையினை திருப்பி போட்டு வேகவைக்கும் பொழுது கீமா தோசையுடன் ஒட்டி இருக்கும். இல்லை என்றால் தோசையில் ஒட்டாமல் தோசையினை எடுக்கும் பொழுது கீழே விழுந்துவிடும்.

தோசையினை திருப்பி போடாமல், தட்டு போட்டு முடி வேகவைத்தும் செய்யலாம்.

இதே மாதிரி சிக்கனிற்கு பதில் மட்டனிலும் செய்யலாம். 

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கலாம்....சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  தோசை மாவு - 2 கப்
   .  எண்ணெய் - சிறிதளவு

சிக்கன் கீமா மசாலா செய்ய :
   .  சிக்கன் - 100 கிராம்
   .  எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி 
   .  முட்டை வெள்ளை கரு - 2 முட்டையில் இருந்து

அரைத்து கொள்ள :
   .  வெங்காயம் - 1/2 சிறியது
   .  பூண்டு - 4 பல்
   .  கருவேப்பிலை - 5 இலை
   .  கொத்தமல்லி - சிறிதளவு
   .  பச்சை மிளகாய் - 3

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1/2  தே.கரண்டி (காரத்திற்கு ஏற்ப)
   .  கரம் மசாலா தூள் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
   .  வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். சிக்கனை சுத்தமாக கழுவி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். 

   .  நறுக்கிய வெங்காயத்துடன், பச்சைமிளகாய் + பூண்டு + கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


   .  கடாயில் 1 மேஜை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அரைத்த் விழுதினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.


   .  அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கிளறிவிடவும்.


   . அதில், அரைத்த சிக்கனை சேர்த்து நன்றாக அடிக்கடி கலந்து 3 - 4 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். இது நன்றாக வெந்து முட்டை பொடிமாஸ் மாதிரி இருக்கும்.


 . இப்பொழுது சிக்கன் கீமா ரெடி. அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும். 

 .  முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் மஞ்சள் கருவினையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் நான் எப்பொழுதுமே வெரும் வெள்ளை கருவினை மட்டுமே சேர்ப்பேன். )

   .  இப்பொழுது கீமாவினை இதில் சேர்த்து Spoon வைத்து கலந்து கொள்ளவும்.


 .  தோசை கல்லினை காயவைத்து கொள்ளவும். கல் சூடானதும், அதில் தோசை மாவினை ஊற்றி தோசையினை சூடவும்.

 . மாவு ஊற்றிய பிறகு அதில் கலந்து வைத்துள்ள முட்டை கீமா கலவையினை மேலே 2 - 3 Spoon அளவு ஊற்றி பரவி விடவும்.

   .  தோசையின் மீது சிறிது எண்ணெயினை ஊற்றி 1 நிமிடம் வேகவிடவும்.


   .  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும். (குறிப்பு : தோசையினை திருப்பி போடாமல், தட்டு போட்டு முடி வேகவைத்தும் செய்யலாம். )

   .  இப்பொழுது சுவையான சிக்கன் கீமா தோசை ரெடி.


வெற்றிலை சாதம் - Vetrilai Sadam - Betel Leaves Rice - Lunch Box Recipes


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய சத்தான கலந்த சாதம்...

செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வெற்றிலை - 5 
   .  வேகவைத்த சாதம் - 3 கப்
   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  கடலைபருப்பு, வேர்க்கடலை - சிறிதளவு
   .  காய்ந்த மிளகாய் - 2

வறுத்து பொடிக்க : (விரும்பினால் இந்த பொடியினை சேர்க்கவும். )
   .  கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
   .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
   .  தேங்காய் துறுவல் - 1 தே.கரண்டி
   .  எள் - 1/4 தே.கரண்டி
   .  காய்ந்த மிளகாய் - 2


செய்முறை :
 . வெற்றிலையினை சுத்தமாக கழுவி அதனை பொடியாக வெட்டி கொள்ளவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடித்து கொள்ளவும்.

 . கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு + வேர்க்கடலை சேர்த்து வறுத்து கொள்ளவும். அத்துடன் காய்ந்த மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.


 .  பிறகு வெற்றிலை + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்,

   .  இத்துடன் பொடித்த பொடியினை சிறிது சேர்த்து கொள்ளவும்.


   .  அதில் வேகவைத்த சாதத்தினை சேர்த்து கிளறிவிடவும்.


   .  சுவையான சத்தான வெற்றிலை சாதம் ரெடி. இத்துடன் எதாவது வறுவல், பொரியலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


வாங்கிபாத் - Vangi Bath Recipe - Brinjal Rice - No onion No Garlic Recipe


print this page PRINT
இதில் வெங்காயம் , தக்காளி சேர்க்க தேவையில்லை. இது No onion No Garlic Recipe.

இதற்கு பச்சை கத்திரிக்காயினை பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். அதே மாதிரி பச்சை கத்திரிக்காய் நன்றாக வெந்த பிறகும் மசிந்துவிடாமல் இருப்பதால் சாதத்தினை கலந்த பிறகு நன்றாக இருக்கும்.

இதில் புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கத்திரிகாயுடன் சேர்த்து வேகவிடவேண்டும்.முதலில் கத்திரிக்காயினை கண்டிப்பாக 1 - 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு புளி தண்ணீர் சேர்க்கவும்.  

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  பச்சை கத்திரிக்காய் - 1/4 கிலோ
   .  வேகவைத்த சாதம் - 3 கப்
   .  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
   .  கருவேப்பிலை - 10 இலை
   .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடித்து கொள்ள :
   .  கடலைப்பருப்பு - 1 மேஜை கரண்டி
   .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
   .  காய்ந்த மிளகாய் - 2 , தனியா - 1 தே.கரண்டி
   .  வேர்க்கடலை - 1 மேஜை கரண்டி

தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு, கடலைப்பருப்பு - தாளிக்க


செய்முறை :
   .  வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு வறுத்து ,சிறிது நேரம் ஆறவைத்த பிறகு பொடித்து கொள்ளவும்.

   .  கத்திரிகாயினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். புளியினை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

  .  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைப்பருப்பு தாளித்து அத்துடன் நறுக்கிய கத்திரிக்காயினை போட்டு 1 நிமிடம்  நன்றாக வதக்கவும்.


  .  இத்துடன் மஞ்சள் தூள் + சிறிது உப்பு சேர்த்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.

   .  பிறகு இதில் கரைத்து வைத்து இருக்கும் புளி கரைசலினை ஊற்றி நன்றாக தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.


 .  கத்திரிகாயில் தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு, அதில் பொடித்து வைத்துள்ள பொடி + கருவேப்பிலை சேர்த்து 1 முறை கிளறிவிடவும்.


 .  இதில், வேகவைத்த சாதத்தினை சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். ( அவரவர் காரத்திற்கு ஏற்ப பொடியினை சேர்த்து கொள்ளவும். )


  .  சுவையான சத்தான வாங்கிபாத் ரெடி. இதனை வறுவல், சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

மஷ்ரூம் பிரியாணி - Mushroom Biryani Recipe - Simple Dum Biryani Recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய சத்தான பிரியாணி..

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  மஷ்ரூம் - 2 கப்
   .  பாஸ்மதி அரிசி - 2 கப்
   .  வெங்காயம் - 1
   .  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜை கரண்டி
   .  புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
   .  தயிர் - 2 மேஜை கரண்டி
   .  எலுமிச்சை  - 1/2 பழம்
   .  நெய் - 1 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  பட்டை - 1, கிராம்பு , ஏலக்காய் - தலா 1 , பிரியாணி இலை -1

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
   .  கரம் மசாலா தூள் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
   .  பாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 15 - 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயத்தினை நீளமாக வெட்டி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 

   .  மஷ்ரூமை நான்காக வெட்டி அதனை கடாயில் போட்டு 2 - 3 நிமிடங்கள் முதலில் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும். (கவனிக்க : இந்த Step Optional தான்.  விரும்பினால் தாளித்த பிறகு சேர்த்து கொள்ளலாம்..)


   .  பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து மேலும் நன்றாக வதக்கி கொள்ளவும்.

   .  வெங்காயம் வதங்கியவுடன் அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 . அத்துடன் வதக்கிய மஷ்ரூம் + புதினா, கொத்தமல்லி சேர்த்து கலந்துவிடவும்.


   .  அதில் 4 கப் தண்ணீர் + ஊறவைத்த பாஸ்மதி அரிசியினை சிறிய தீயில் வைத்து தட்டு போட்டு மூடி வேகவிடவும். (இதே மாதிரி செய்த வெஜ் பிரியாணி / Veg Biryani பார்க்க க்ளிக் செய்யவும். )


   .  பாஸ்மதி வெந்த பிறகு அதில் 1 தே.கரண்டி நெய் + 1/2 மேஜை கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.


   .  சுவையான மஷ்ரூம் பிரியாணி ரெடி.


கவனிக்க :
நான் இதில் தக்காளி சேர்க்கவில்லை. விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி காரத்திற்கு மிளகாய் தூளிற்கு பதிலாக பச்சை மிளகாயினை பயன்படுத்தலாம்.

இதனை நான் கடாயிலேயே செய்து இருக்கின்றேன். இதனை பிரஸ்ர் குக்கரில் 1 விசில் வரும் வரை சிறிய தீயில் வைத்தும் செய்யலாம்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

Related Posts Plugin for WordPress, Blogger...