கடலைமாவு மோர் குழம்புமோர் குழம்பு செய்வது மிகவும் சுலபம். எளிதில் செய்ய கூடிய குழம்பு. மோர் குழம்பின் சுவையோ தனி தான்.

பலரும் மோர் குழம்பிற்கு அரிசி + பருப்பினை  ஊறவைத்து அதனை அரைத்து தான் குழம்பில் சேர்த்து ஊற்றி கொதிக்கவிடுவோம். இப்படி தான் எங்கள் வீட்டிலும் மோர் குழம்பினை அம்மா செய்வாங்க.

சில சமயம் அரிசி பருப்பினை சிறிது நேரம் ஊறவைக்க மறந்துவிடுவேன்.அதனால் மோர் குழம்பு சாப்பிட ஆசையாக இருந்தாலும் அதனை செய்ய முடியாமால் போய்விடும்.

நான் pregnant ஆக இருந்த சமயம் இந்த மோர் குழம்பு என்றால் அவ்வளவு ஆசையாக சாப்பிடுவேன். அப்பொழுது தான் என்னுடைய தோழி திருமதி. ஸ்வேதா ,வட இந்தியாவை சேர்ந்தவர் இந்த கடலைமாவு மோர் குழம்பினை எனக்கு கற்று கொடுத்தார். மிகவும் சுவையான மோர் குழம்பு.

பொதுவாக, மோர் குழம்பு செய்யும் பொழுது நிறைய நேரம் கொதிக்கவிட மாட்டோம். ஆனால் இந்த வகையில் கடலைமாவுடன்  மோர் குழம்பினை செய்யும் பொழுது நிறைய நேரம் கொதிக்கவிட்டால் தான் சுவை..

சரி..வாருங்கள்..இதன் செய்முறையினை இப்பொழுது பார்ப்போம்  வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 20 நிமிடம்

தேவையான பொருட்கள் :

§  தயிர் – 1 கப்

§  கடலை மாவு – 2 தே.கரண்டி

§  மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

§  உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

§  எண்ணெய் – 1 தே.கரண்டி

§  கடுகு – 1/2 தே.கரண்டி

§  சீரகம் – 1 தே.கரண்டி

§  பச்சை மிளகாய் – 3

§  இஞ்சி – சிறிய துண்டு

§  கருவேப்பில்லை – 5 இலை

கடைசியில் சேர்க்க :

§  கொத்தமல்லி – சிறிதளவு

§  எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி (விரும்பினால்)

செய்முறை :

v  தயிரினை கடலைமாவுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும். கடலைமாவு கட்டி இல்லாமல்     நன்றாக தயிருடன் கலந்து இருக்க வேண்டும். இதுவே சரியான பக்குவம்.

v  பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து பின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

v  பிறகு கரைத்துவைத்துள்ள கடலைமாவு தயிர் கலவை + 2 - 3 கப் தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு அனைத்தும் சேர்த்து கடாயில் ஊற்றி நன்றாக 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

v  அதன்பின் கொத்தமல்லி + எலுமிச்சை சாறு  சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

v  இப்பொழுது சுவையான கடலைமாவு மோர்குழம்பு ரெடி. இத்துடன் உருளைகிழங்கு வறுவல் மிக பொருத்தமாக இருக்கும்.

கவனிக்க :

கடலைமாவு தயிருடன் நன்றாக கரைந்து இருக்கவேண்டும். எவ்வளவு நேரம் கொதிக்கவிடுகிறோமோ அவ்வளவு சுவையாக குழம்பு இருக்கும்.

சிக்கன் வடை - chicken vadai


சிக்கன் வடை
வடை என்பது மிகவும் பிரபலமான எண்ணெய் பலகாரம். எந்த ஒரு விசேஷம் என்றாலும் மாறி வரும் இந்த காலத்திலும் வடை கண்டிப்பாக நம்முடைய அன்றைய சமையலில் இடம் பெற்று இருக்கும்.


உளுந்து வடை, பருப்பு வடை, மசால் வடை, தவளை வடை, ஆமை வடை, சாம்பார் வடை போன்று பல வகைகளில் வடைகளினை செய்கின்றோம்.

அதே போல நாம் இப்பொழுது பார்க்க போவது சிக்கன் வடை. இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.


இந்த குறிப்பினை என்னுடைய நாத்தனார் திருமதி. அர்ச்சனா அவர்கள் தான் எனக்கு கற்று கொடுத்தார்கள். அவருடைய சமையல் மிகவும் வித்தியசமாக குழந்தைகளுக்கு விரும்பும் வகையில் இருக்கும்.


சரி..வாங்க..இப்பொழுது நாம் சிக்கன் வடையினை செய்வதினை பார்ப்போம்..


தேவையான பொருட்கள் :
§  எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ
§  வெங்காயம் – 1
§  பச்சை மிளகாய் – 3
§  பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
§  எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  உப்பு – 1 தே.கரண்டி
மற்ற பொருட்கள் :
§  மைதா மாவு – 1 கப்
§  பிரெட் தூள் – 1 கப்
§  எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
*       முதலில் சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.


*       வெங்காயம் + பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கவும்.


*       அரைத்த சிக்கன் + வெங்காயம் + பச்சை மிளகாய் +கொத்தமல்லி, புதினா,கருவேப்பில்லை + எலுமிச்சை சாறு + தூள் வகைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


*       மைதா மாவினை தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.


*       கடாயில் எண்ணெயினை காய வைக்கவும்.


*       இப்பொழுது சிக்கன் கலவையில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வடை போல தட்டி கரைத்து வைத்துள்ள மைதா மாவில் பிரட்டிய பின் பிரெட் தூளிலும் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


*       இப்பொழுது சுவையான சிக்கன் வடை ரெடி. இதனை சாதத்துடன் அல்லது ஸ்நாக்ககவோ சுடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தூள் வகைகள் சேர்க்கமால் அதற்கு பதில் மிளகு தூள் சேர்க்லாம்.


மைதா மாவிற்கு பதிலாக முட்டையின் வெள்ளை கருவினை உபயோகிக்கலாம்.

கீரை பொரியல் - Keerai Poriyal


கீரையினை தினமும் நம்முடைய சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவதன் மூலம் நம்முடைய உடலிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறோம். கீரையில் அனைத்து வித சத்துக்கள் இருக்கின்றன. அதனால் கீரையினை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிக அவசியம்.


பலரும் எனக்கு கீரை சாப்பிட பிடிக்கும் , ஆனால் அதனை ஆய்ந்த சுத்தம் செய்யும் நேரத்தில் வேறு எதவாது சுலபமான உணவினை தயரித்து விடலாம்…என பலர் கூற கேட்டு இருக்கிறேன்.


கீரையினை சுத்தம் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லை என்றே எனக்கு தோன்றும். கீரையின் வேர் பகுதியினை மட்டும் நீக்கி மற்ற பகுதியினை சமயலுக்கு உபயோகிக்கவும். 


ஆனால் பலரும் வெறும் கீரையின் இலைகளை மட்டும் எடுத்து சமையல் செய்வார்கள். இனிமேல் கீரையின் தண்டு பகுதியை தூக்கி எறியாமால் நாம் செய்யும் பொரியலிலோ அல்லது கூட்டு, குழம்பிலோ சேர்த்து செய்து பாருங்கள்…கண்டிப்பாக இனிமேல் எதையும் தூக்கி எறியமாட்டோம்..


சரி..இப்பொழுது கீரை பொரியலினை செய்வது எப்படி என்பதினை பார்ப்போம் வாருங்கள்…
இந்த கீரை பொரியலினை சாதத்துடன் கலந்து சாப்பிட, சாம்பார், ரசம், மோர். சாப்பத்தி போன்றவையுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ கீரை – 1 கட்டு
§ வெங்காயம் – 1
§ உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ காய்ந்த மிளகாய் – 2
§ நசுக்கிய பூண்டு – 2 பல்
செய்முறை :
v கீரையினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
v பிறகு கீரை + உப்பு , வதக்கிய பொருட்களுடன் சேர்த்து நன்றாக கிளறி தட்டு போட்டு மூடி 5 – 8 நிமிடம் வேகவிடவும்.
v இப்பொழுது சுவையான கீரை பொரியல் ரெடி.
குறிப்பு :
கீரை வேகவைக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற வேகவைக்க தேவையில்லை.

சிக்கன் பிரியாணி - Basic Chicken Dum Biryani


சிக்கன் பிரியாணி மிகவும் பிரபலம். எந்த ஒரு விசேஷமோ அல்லது விருந்து நிகழ்ச்சியோ பிரியாணி இல்லாமல் இல்லை.

பல வகை பிரியாணிகள் உள்ளன. அதில் வெஜிடேபுள் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்றவை அனைவராலும் பெரிதும் விரும்புகின்றனர்.

பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபம் என்றாலும் சரியான பதத்தில் சிக்கன், மசாலா மற்றும் அரிசி எல்லாம் இருக்க வேண்டும். அதிலும் பிரியாணியில் கண்டிப்பாக சாதம் உதிரியாக தனி தனியாக இருக்க வேண்டும். அதுவே பிரியாணியின் பதம்.

சிக்கன் பிரியாணியுடன் தயிர் பச்சடி, எண்ணெய் கத்திரிக்காய் ,சிக்கன் குழம்பு போன்றவை சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இப்பொழுது சிக்கன் பிரியாணியின் செய்முறையினை பார்ப்போம்வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 45 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  சிக்கன் – 1/2 கிலோ
§  பாஸ்மதி அரிசி – 3 கப்
§  இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
§  வெங்காயம் – 2
§  தக்காளி – 2
§  பச்சை மிளகாய் – 3
அரிசியுடன் சேர்த்து வேகவைக்க :
§  நெய் – 1 தே.கரண்டி
§  பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2
§  உப்பு – 1 தே.கரண்டி
சிக்கனுடன் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்க :
§  தயிர் – 1/2 கப்
§  மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
§  உப்பு – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§  தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§  கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
§  உப்பு – 1  தே.கரண்டி
தாளிக்க:
§  எண்ணெய் – 3 மேஜை கரண்டி
§  நெய் – 1 மேஜை கரண்டி
§  பட்டை – 1
§  ஏலக்காய் – 1
§  கிராம்பு – 2
§  பிரியாணி இலை – 1


இதர பொருட்கள் :
§  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி + புதினா – 1 கப்
§  எலுமிச்சை பழம் சாறு – 2 தே.கரண்டி
கடைசியில் பிரியாணியின் மேலே சேர்க்க:
§  நெய் – 1 மேஜை கரண்டி
§  கலர் – (ஆரஞ்சு, மஞ்சள் ) – சிறிதளவு


செய்முறை :

v  சிக்கனை சுத்தம் செய்து பிறகு சிக்கனை ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து ஊறவைக்கவும். அரிசியினை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.


v  வெங்காயம், தக்காளியினை நீட்டாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.


v  ஒரு பெரிய அடிகணமான பாத்திரத்தில்(நாம் பிரியாணி செய்ய போகின்ற பாத்திரம்) தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.v  பிறகு அதில் தக்காளி + பச்சை மிளகாய் + புதினா, கொத்தமல்லி + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

v  அரிசி வேகவைக்கும் பாத்திரம்: இப்பொழுது வேறு ஒரு பாத்திரத்தில்(அரிசியினை 3/4 பாகம் வேகவைக்க) 1 தே.கரண்டி நெய் ஊற்றி கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அதில் 2 – 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.v  பிரியாணி செய்கின்ற பாத்திரம் : தண்ணீர் கொதிவரும் வரை, பிரியாணி பாத்திரத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் வதங்கிய பிறகு அதில் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து வேகவைக்கவும்.
v  அரிசி வேகவைக்கும் பாத்திரம்: இதற்கிடையில் தண்ணீர்கொதிவந்தவுடன் அரிசியினை அதில் சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வைத்து பின் கஞ்சியினை வடிக்கட்டி சாதத்தினை தனியாக வைக்கவும்.


v  பிரியாணி செய்கின்ற பாத்திரம் : சிக்கன் நன்றாக வெந்து பிறகு அதன் மீது முக்கால் பாகம் வேகவைத்துள்ள சாதத்தினை சேர்த்து சமபடுத்தவும்.
கவனிக்க :1. சாதத்தினை சிக்கன் கலவையில் சேர்க்கும் பொழுது , சிக்கன் கலவையில் நிறைய தண்ணீர் இருக்க கூடாது. சிக்கன் வெளியே தெரியும் அளவு தண்ணீர் இருந்தால் போதும்.2. சாதத்தினை சிக்கன் கலவையில் சேர்க்கும் பொழுது கிளற கூடாது. அப்படியே சிக்கன் கலவையின் மேல் சேர்க்கவேண்டும்.


v  பிறகு அதன் மேலே நெய் சேர்த்து பெரிய கரண்டியால் பரவி விடவும். அத்துடன் புதினா + கலர் பொடிகளை  சிறிது தண்ணீரில் கரைத்து சாதத்தின் மீது ஊற்றிவும்.


v  இப்பொழுது இந்த பிரியாணி பாத்திரத்தினை நன்றாக அழுத்தமாக மூடிவும்(வேண்டுமனால் அலுமினியம் பாயில் சுற்றவும் அல்லது எதவது கணமான பொருளினை பிரியாணி பத்திர்த்தின் தட்டின் மீது வைக்கவும்) தோசை கல்லின் மீது வைத்து தோசை கல்லில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.


v  பிரியாணி அப்படியே இந்த தோசை கல்லின் மீது வைப்பதால் குறைந்த தணலில் தம்மில் வைத்து வேகவைப்பதில் தான் பிரியாணியின் சுவை அதிகமாக கூடுகின்றது.


v  15 – 20 நிமிடம் கழித்து அடுப்பினை அனைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து தட்டினை எடுத்து பிரியாணியை மிகவும் பக்குவமாக பெரிய கரண்டியால் கிளறிவிடவும்.v  இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.


குறிப்பு :
பிரியாணிக்கு நிறைய நெய் சேர்த்தால் திகட்டிவிடும். அதனால் அளவாக சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...