பாகற்காய் பகோடா - Bittergourd Pakoda - Parkarkai Pakoda


பாகற்காய் பகோடா
பாகற்காய் என்றால் கசப்பாக இருக்குமே!…எங்கள் வீட்டில் அதனை வாங்க மாட்டோம்!...எங்கள் வீட்டில் செய்தால் நான் மட்டும் தான் சாப்பிடுவேன்!...வேறு யாரும் அதனை சாப்பிடுவது இல்லை………. இப்படி பலரும் கூற கேட்டு இருக்கிறோம்…

பாகற்காயினை இந்த செய்முறையின்படி பகோடா செய்து சாப்பிட்டால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவது மட்டும் இல்லாது அடுத்த முறை காய்கறி கடைக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக நம்முடைய லிஸ்டில் இடம் பெற்று இருக்கும்…

சக்கரை நோயளிகளுக்கு எற்ற பகோடா..
இதனுடைய செய்முறை மிகவும் எளிது…தீடீர் விருந்தினர்களை கூட இதனை செய்து அசத்தலாம்…வாங்க…

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
தேவையான பொருட்கள்:
v பாகற்காய் – 1/4 கிலோ
v பூண்டு – 2 பல்
v இஞ்சி – சிறிய துண்டு
-----------------------------
v கடலை மாவு – 1/2 கப்
v அரிசி மாவு – 1/4 கப்
v பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
v உப்பு – 1 தே.கரண்டி
v மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
v மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
v பட்டர் – 1 தே.கரண்டி(விரும்பினால்)
-----------------------------
v எண்ணெய் – பொரிப்பதற்கு

* பாகற்காயினை சிறிய சிறிய வட்ட வடிவமாக வெட்டி கொண்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து தனியாக வைக்கவும்.
* இஞ்சி, பூண்டுனை தோல் உரித்து கராட் துறுவியினால் துறுவி பாகற்காயுடன் சேர்க்கவும்.
* பாகற்காயுடன் (எண்ணெய் தவிர) கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* எண்ணெயினை காயவைத்து பாகற்காயினை போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பாகற்காய் பகோடா ரெடி.

10 comments:

Menaga Sathia said...

பாகற்காய் நிறைய இருக்கு,என்ன செய்யலாம்னு யோசித்து இருந்தேன்.எனக்காகவே இந்த குறிப்பு போட்ட மாதிரி இருக்கு.நாளை செய்துப் பார்த்து சொல்றேன்பா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா. கண்டிப்பாக செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

Menaga Sathia said...

இன்று இந்த பகோடா செய்தேன்,சூப்பரா இருந்தது.நன்றி கீதா!!

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா. செய்தவுடன் பின்னுட்டம் அனுப்பி என்னை மேலும் ஊக்கவிப்பதற்கு நன்றி.

GEETHA ACHAL said...
This comment has been removed by the author.
kavi.s said...

கீதா நேத்து பாகற்காய் பக்கோடா செய்தேன்,என் வீட்டுக்காரர் நல்லா சாப்பிட்டார் சாப்பாட்டுக்கு தொட்டுகிட்டார்,இந்த பக்கோடாவிற்க்காவே சாப்பாடு திரும்ப திரும்ப போட்டு சாப்பிடறேனு சொல்லி சாப்பிட்டார், பொதுவாவே அவருக்கு பாகற்க்காய் ரொம்ப பிடிக்கும், நான் பக்கோடா செய்ததும், நல்லா சாப்பிட்டார்.நன்றி கீதா.

Menaga Sathia said...

இன்னிக்கு மறுபடியும் இந்த பகோடா செய்தேன் கீதா.நன்றி உங்களுக்கு!!

GEETHA ACHAL said...

//பக்கோடாவிற்க்காவே சாப்பாடு திரும்ப திரும்ப போட்டு சாப்பிடறேனு சொல்லி சாப்பிட்டார்//மிகவும் சந்தோசம் கவி, அண்ணா நல்லா சாப்பிட்டாரா....

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கவி.

GEETHA ACHAL said...

//இன்னிக்கு மறுபடியும் இந்த பகோடா செய்தேன் கீதா// நன்றி மேனகா.

Anonymous said...

Hello Geetha Madam How Are you? Yesterday I prepared Bitterguard Pakoda.Really It was very nice dish. My Husband Likes this and ate very well. So Thanks Geetha Madam

Related Posts Plugin for WordPress, Blogger...