வெங்காயம் கார சட்னி - Onion Kara Chutney - Vengayam kara chutney- Side Dish for Idly and Dosaஇந்த சட்னி பெயருக்கு எற்றாற் போல மிகவும் காரமாக சுவையாக இருக்கும்.
இந்த சட்னியினை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இது என்னுடைய மாமியாரின் ஸ்பெஷல் சட்னி

குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது கொஞ்சம் எண்ணெயினை அதிகமாக சேர்த்து கொடுக்கவும்.

இதனை இட்லி, தோசை, தயிர் சாதம்,கலந்த சாதம் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
தேவையான பொருட்கள்:
v  வெங்காயம் – 1 பெரியது
v  காய்ந்த மிளகாய் – 12 – 15 மிளகாய்
v  எண்ணெய் – 1 தே.கரண்டி
v  புளி பேஸ்ட் – 1/2 தே.கரண்டி (அல்லது) புளி - நெல்லிக்காய் அளவு
v  உப்பு தேவைக்கு
தாளிக்க:
v  நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி (2 - 3 மேஜை கரண்டி)
v  கடுகு – 1/4 தே.கரண்டி
v  கருவேப்பில்லை – 4 இலை
v  பெருங்காயம் தூள் – 1/4 தே.கரண்டி
செய்முறை :
*       வெங்காயத்தினை சிறய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
*       கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.*       பின்பு 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு நன்றாக வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.

*       பிறகு வெங்காயம்+காய்ந்த மிளகாய்+ புளி +உப்பு சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.( தேவை எனில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்).


*       தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த கலவையில் சேர்த்து கலக்கவும். சுவையான வெங்காயம் கார சட்னி ரெடி. (கவனிக்க : மிகவும் காரமாக இருந்தால் எண்ணெய் அதிகம் சேர்த்து கொள்ளவும். காய்ந்த மிளகாயின் காரத்தினை பொருத்து சட்னி காரமாகவோ அலல்து காரம் குறைவாகவோ இருக்கலாம்.)17 comments:

Malini's Signature said...

நல்ல காரசாரமான சட்னி கீதா.... இனைக்கே பன்னி பாக்குறேன்..

உங்க எல்லா குறிப்புகளிலும் குடுக்கும் விளக்கம் நல்லா இருக்கு.. தொடருங்கள்....

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா. கண்டிப்பாக செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
குழந்தைக்கு கொடுக்கும் பொழுது கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
அதிலும் இந்த சட்னியினை செய்து 2 – 3 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.

Malini's Signature said...

கீதா உங்க வெங்காய சட்னி நல்லா இருந்தது ...ஆனா நான் 2 மிளகாய் தான் போட்டேன். :-)

GEETHA ACHAL said...

நன்றி ஹர்ஷினி அம்மா..

goma said...

இது காரச்சட்னி இல்லை ,
அதிகாரச் சட்னி ஒரு வெங்காயத்துக்கு 12-15 மிளகாயா!! ...நோ வே.

Unknown said...

என் மனைவிக்கு உங்கள் தளம் மிகவும் பிடிக்கும்....

செந்தில்குமார் said...

எங்க அம்மாகிட்ட சொல்லி நான் முயற்ச்சி பன்னபோரேன்
இப்பவே காரமா இருக்கு...அக்கா

இவன் செந்தில்குமர்.அ.வெ

http://naanentralenna.blogspot.com

GEETHA ACHAL said...

goma said...
//இது காரச்சட்னி இல்லை ,
அதிகாரச் சட்னி ஒரு வெங்காயத்துக்கு 12-15 மிளகாயா!! ...நோ வே//நீங்கள் சொல்வது உண்மை தான் கோமா...ஆனா இப்படி செய்து பார்த்தால் காரமாக இருந்தாலும் அதிக சுவையுடன் இருக்கும்...கண்டிப்பாக நல்ல எண்ணெய் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி குரு...உங்களுடைய மனைவியை மிகவும் விசரித்தாக சொல்லவும்....விரும்பினால என்னுடைய மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளசொல்லவும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி செந்தில்குமார்...கண்டிப்பாக அம்மாகிட்ட சொல்லி செய்து சாப்பிட்டு பாருங்க...

அப்பாதுரை said...

இன்றைக்கு செய்து சாப்பிட்டேன்; சட்னிக்காகவே அதிகம் சாப்பிட்டேன். நன்றாக வந்தது. செய்முறைக்கு நன்றி.

GEETHA ACHAL said...

ரொம்பவும் நன்றி அப்பாதுரை...

Unknown said...

oh super
endre sem.indirani chennaiikiren

Unknown said...

hwi
endre seikiren
indirani

Unknown said...

unaga chutni parkavay romba nala iruku.tastum super

Unknown said...

hi unga kathrika chutney super plus kara chutneyum super

Masthani Murukesan said...

Today I made this chutney & coconut chutney along with idli for dinner.
Superb.

Related Posts Plugin for WordPress, Blogger...