பீர்க்கங்காய் தோல் சட்னி - Perkankai Skin Chutney - Side Dish for Idly and Dosaபீர்க்கங்காய் தோல் சட்னி
     பீர்க்கங்காய் தோல் சட்னியா?...ஆமாம் சட்னி தான். மிகவும் சுவையான சத்தான சட்னி.
இப்பொழுது இருக்கும் விலைவாசியில் எப்படி எல்லாம் சிக்கனாமாக இருக்க முடியுமோ அப்படி இருக்க வேண்டும். அதற்காக சிக்கனாமாக இருக்கிறோம் என்பதற்காக சத்து இல்லாத உணவினை சாப்பிடவும் கூடாது.

சில காய்களின் தோலினை நீக்கிவிட்டு தான் அதனை சமைப்போம். அப்படி சமைக்க கூடிய காய்கறிகளின் பட்டியலில் பீர்க்கங்காயும் கண்டிப்பாக இடம் பிடித்து இருக்கின்றது.

இப்படி காய்களினை அவ்வளவு விலை கொடுத்து வாங்கி வந்து தோலினை நீக்கி அதனை தூக்கி போட மனம் இல்லாமல் செய்த சட்னி தான் இந்த பீர்க்கங்காய் தோல் சட்னி.

நீங்களும் செய்து பாருங்கள்..இதனுடைய செய்முறையினை 

இப்பொழுது பார்ப்போம்வாருங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  பொடியாக வெட்டிய பீர்க்கங்காய் தோல் – 1 கப்
§  எண்ணெய் – 1/2 தே.கரண்டி
§  துறுவிய தேங்காய் – 1/4 கப்
§  பச்சை மிளகாய் – 3
§  எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி ( விரும்பினால் )
§  உப்பு – 1/2 தே.கரண்டி
தாளிக்க :
§  எண்ணெய் – 1 தே.கரண்டி
§  உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§  கடுகு – 1/4 தே.கரண்டி
§  கருவேப்பில்லை – 4 இலை
செய்முறை :
v  கடாயில் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் தோலினை போட்டு நன்றாக வதக்கிய் பின் சிறிது நேரம் ஆறவிடவும்.
v  வதக்கிய பீர்க்கங்காய் தோல் ஆறியவுடன் ,தேங்காய் + பச்சை மிளகாய் + எலுமிச்சை சாறு + உப்பு + சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
v  பின்னர் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலக்கவும்.
v  இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி ரெடி.
குறிப்பு :
வேண்டுமானால் இதில் கொத்தமல்லி, புதினா போன்றவை சேர்த்து அரைக்கலாம். ஆனால் இந்த சட்னியில் கொத்தமல்லியோ அல்லது புதினாவோ சேர்த்து அரைத்தால் பீர்க்கங்காயின் தோலில் செய்த சட்னி என்பதினை சாப்பிடும் பொழுது நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

அதனால் நான் பெரும்பாலும் எதையும் சேர்க்காமல் பீர்க்கங்காய் தோல் மட்டும் தான் சேர்த்து அரைப்பேன்.

6 comments:

Unknown said...

Romba payanulla samayal kurippugal. Peerkangai Chutneyil sirithu 1/2 spoon mulu kaintha kothamalli vithai, 2 spoon varutha vellai ellu, konjam perungayam, thengai kuraithu, karuveppillai matrum sirithu perungayam, vatral milagai serthu araithal innum suvai koodum, melum sathullathaga amaiyum

Fasna Farook
Dubai

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி Fasna Farook.

நீங்கள் சொல்வது போல செய்தால் கண்டிப்பாக சுவையாக இருக்கும். கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டியது தான்.

Nithu Bala said...

entha chutney nanum seiven..ana red chillies use pannuven..mathapadi same procedure..parka roombha azagha irukku..

Saranya said...

கீதா அவர்களுக்கு,உங்கள் ப்ளாக் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.நான் விதவிதமாக சமைத்து பார்க்கும் ஆர்வம் உள்ளவள்,உங்கள் ப்ளாக் எனக்கு உதவியாக உள்ளது,என் தோழிகளுக்கும் இதை பரிந்துரைத்து உள்ளேன்,நன்றி.உங்கள் சமையல் குறிப்புக்கள் தொடர வாழ்த்துகள்,
அன்புடன்,
நிலா.

syamala said...

super!!but red chilli is more suitable than green chilli

Raji said...

thanks for this recipe and excellent taste. my kids asked me to do it again and again

Related Posts Plugin for WordPress, Blogger...