இரால் தொக்கு - Prawn Thokku


இரால் தொக்கு
இரால் பிரபலமான கடல் வகை உணவு. இப்பொழுது எல்லாம் இரால் சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை அனைத்து வகையிலும் கடைகளில் கிடைக்கின்றது.
இந்த தொக்கிற்கு சிறிய அளவு இரால் இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
பெரும்பாலும் எங்கள் வீட்டில் என்னுடைய அம்மா இதனை இப்படி தான் இரால் தொக்காக செய்து கொடுப்பார்கள்.

இந்த தொக்கினை சாதம்,சாம்பார், ரசம், சாப்பாத்தி, இட்லி, தோசை என்று எதனுடன் சாப்பிட்டாலும் சுவை சூப்பராக இருக்கும்.

கவனிக்க : 3 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தோல், ஓடு இருக்கும் கடல் உணவினை கண்டிப்பாக கொடுக்க கூடாது என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர். (அதவது இரால், நண்டு போன்றவை..)

சமைக்க தேவைப்படும் நேரம் – 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  சுத்தம் செய்த சின்ன இரால் – 1/4 கிலோ
§  பச்சை மிளகாய் – 2
தாளிக்க :                  
§  எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§  கடுகு – 1/4 தே.கரண்டி
§  பூண்டு – 4 பல்   
      --------------------------------
§  வெங்காயம் – 2
§  கருவேப்பில்லை – 3 இலை
§  தக்காளி – 2
     பொடி வகைகள் :
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  மிளகாய் தூள் – 3/4 தே.கரண்டி
§  தனியா தூள் – 1 தே.கரண்டி
§  உப்பு தேவையான அளவு
     கடைசியில் தூவ :
§  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி  - சிறிதளவு

v  வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் பூண்டினை போட்டு வதக்கி அதன் பின் வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

v  பின் தக்காளி + பொடி வகைகள் சேர்த்து நன்றாக வதக்கி எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.

v  எண்ணெய் வெளியே வரும் சமயம் கீறி வைத்த பச்சை மிளகாய் + இராலினை போட்டு நன்றாக கிளறி வேகவிடவும்.

v  கடைசியில் கொத்தமல்லி தூவி கிளறிவிடவும். இப்பொழுது சுவையான இரால் தொக்கு ரெடி.

3 comments:

Asiya Omar said...

பார்க்கவே அருமையாக இருக்கு.

thekkadu mangutty said...

iral thokku super akka

thekkadu mangutty said...

iral thokku super akka

Related Posts Plugin for WordPress, Blogger...