சிக்கன் பிரியாணி - Basic Chicken Dum Biryani


சிக்கன் பிரியாணி மிகவும் பிரபலம். எந்த ஒரு விசேஷமோ அல்லது விருந்து நிகழ்ச்சியோ பிரியாணி இல்லாமல் இல்லை.

பல வகை பிரியாணிகள் உள்ளன. அதில் வெஜிடேபுள் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்றவை அனைவராலும் பெரிதும் விரும்புகின்றனர்.

பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபம் என்றாலும் சரியான பதத்தில் சிக்கன், மசாலா மற்றும் அரிசி எல்லாம் இருக்க வேண்டும். அதிலும் பிரியாணியில் கண்டிப்பாக சாதம் உதிரியாக தனி தனியாக இருக்க வேண்டும். அதுவே பிரியாணியின் பதம்.

சிக்கன் பிரியாணியுடன் தயிர் பச்சடி, எண்ணெய் கத்திரிக்காய் ,சிக்கன் குழம்பு போன்றவை சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இப்பொழுது சிக்கன் பிரியாணியின் செய்முறையினை பார்ப்போம்வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 45 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  சிக்கன் – 1/2 கிலோ
§  பாஸ்மதி அரிசி – 3 கப்
§  இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
§  வெங்காயம் – 2
§  தக்காளி – 2
§  பச்சை மிளகாய் – 3
அரிசியுடன் சேர்த்து வேகவைக்க :
§  நெய் – 1 தே.கரண்டி
§  பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2
§  உப்பு – 1 தே.கரண்டி
சிக்கனுடன் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்க :
§  தயிர் – 1/2 கப்
§  மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
§  உப்பு – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§  தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§  கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
§  உப்பு – 1  தே.கரண்டி
தாளிக்க:
§  எண்ணெய் – 3 மேஜை கரண்டி
§  நெய் – 1 மேஜை கரண்டி
§  பட்டை – 1
§  ஏலக்காய் – 1
§  கிராம்பு – 2
§  பிரியாணி இலை – 1


இதர பொருட்கள் :
§  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி + புதினா – 1 கப்
§  எலுமிச்சை பழம் சாறு – 2 தே.கரண்டி
கடைசியில் பிரியாணியின் மேலே சேர்க்க:
§  நெய் – 1 மேஜை கரண்டி
§  கலர் – (ஆரஞ்சு, மஞ்சள் ) – சிறிதளவு


செய்முறை :

v  சிக்கனை சுத்தம் செய்து பிறகு சிக்கனை ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து ஊறவைக்கவும். அரிசியினை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.


v  வெங்காயம், தக்காளியினை நீட்டாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.


v  ஒரு பெரிய அடிகணமான பாத்திரத்தில்(நாம் பிரியாணி செய்ய போகின்ற பாத்திரம்) தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.v  பிறகு அதில் தக்காளி + பச்சை மிளகாய் + புதினா, கொத்தமல்லி + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

v  அரிசி வேகவைக்கும் பாத்திரம்: இப்பொழுது வேறு ஒரு பாத்திரத்தில்(அரிசியினை 3/4 பாகம் வேகவைக்க) 1 தே.கரண்டி நெய் ஊற்றி கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அதில் 2 – 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.v  பிரியாணி செய்கின்ற பாத்திரம் : தண்ணீர் கொதிவரும் வரை, பிரியாணி பாத்திரத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் வதங்கிய பிறகு அதில் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து வேகவைக்கவும்.
v  அரிசி வேகவைக்கும் பாத்திரம்: இதற்கிடையில் தண்ணீர்கொதிவந்தவுடன் அரிசியினை அதில் சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வைத்து பின் கஞ்சியினை வடிக்கட்டி சாதத்தினை தனியாக வைக்கவும்.


v  பிரியாணி செய்கின்ற பாத்திரம் : சிக்கன் நன்றாக வெந்து பிறகு அதன் மீது முக்கால் பாகம் வேகவைத்துள்ள சாதத்தினை சேர்த்து சமபடுத்தவும்.
கவனிக்க :1. சாதத்தினை சிக்கன் கலவையில் சேர்க்கும் பொழுது , சிக்கன் கலவையில் நிறைய தண்ணீர் இருக்க கூடாது. சிக்கன் வெளியே தெரியும் அளவு தண்ணீர் இருந்தால் போதும்.2. சாதத்தினை சிக்கன் கலவையில் சேர்க்கும் பொழுது கிளற கூடாது. அப்படியே சிக்கன் கலவையின் மேல் சேர்க்கவேண்டும்.


v  பிறகு அதன் மேலே நெய் சேர்த்து பெரிய கரண்டியால் பரவி விடவும். அத்துடன் புதினா + கலர் பொடிகளை  சிறிது தண்ணீரில் கரைத்து சாதத்தின் மீது ஊற்றிவும்.


v  இப்பொழுது இந்த பிரியாணி பாத்திரத்தினை நன்றாக அழுத்தமாக மூடிவும்(வேண்டுமனால் அலுமினியம் பாயில் சுற்றவும் அல்லது எதவது கணமான பொருளினை பிரியாணி பத்திர்த்தின் தட்டின் மீது வைக்கவும்) தோசை கல்லின் மீது வைத்து தோசை கல்லில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.


v  பிரியாணி அப்படியே இந்த தோசை கல்லின் மீது வைப்பதால் குறைந்த தணலில் தம்மில் வைத்து வேகவைப்பதில் தான் பிரியாணியின் சுவை அதிகமாக கூடுகின்றது.


v  15 – 20 நிமிடம் கழித்து அடுப்பினை அனைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து தட்டினை எடுத்து பிரியாணியை மிகவும் பக்குவமாக பெரிய கரண்டியால் கிளறிவிடவும்.v  இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.


குறிப்பு :
பிரியாணிக்கு நிறைய நெய் சேர்த்தால் திகட்டிவிடும். அதனால் அளவாக சேர்த்தால் சுவையாக இருக்கும்.

20 comments:

manjula said...

பார்த்தாலே சாப்பிடவேணும்போல் இருக்கு கலகுறிங்கே கீதா தமிழ் ட்ய்பிங் mistake இருந்தா மனிக்கவும்
அன்புடன்
மஞ்சுளா

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மஞ்சளா. கண்டிப்பாக செய்து பாருங்கள்..மிகவும் சுலபம். தமிழில் நன்றாக
டயிப் பன்னி இருக்கிங்க...நன்றி.நீங்கள் விரும்பினால் ஆங்கிலத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Menaga Sathia said...

எனக்கு இந்த மாதிரி சாதம் வடித்து தம போடுறது வரமாட்டேங்குது,நீங்க நல்லா செய்தீருக்கிங்க கீதா.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா. இந்த மாதிரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஹர்ஷினி அம்மா said...

Woww super...

கீதா எனக்கு ஒரு சந்தேகம் நான் ஹைதராபாத் பிரியாணி பன்னினப்ப மேலே கலர் ஊற்றியபின் எனக்கு 3 கலராக சாதம் இருந்தது... ஆனா உங்க பிரியாணி எல்லா கலரும் கலந்து இருக்கே எப்படி?

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா. நான் நினைக்கிறேன் ஒரு வேளை நீங்கள் அதிகமாக கலர் சேர்த்து இருப்பீங்க..அல்லது கலரின் அளவிற்கும் சாதத்தின் அளவிற்கு குறைவாக இருக்கலாம் அல்லது மேலோட்டமாக பிரியாணியை கரண்டியால் கலந்து இருப்பிங்கள்.. அப்படி இல்லை என்றால் தெரியவில்லையே..

Teejay said...

thanks frnd seimurai recipe elam superaa kudurukinga good

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெகநாதன்.

கண்டிப்பாக இந்த ப்ளாக் பக்கம் அடிக்கடி வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன். நன்றி

C 3 said...

good,

thank u for sharing ur recipie
kep it up

manimohan said...

good
thanks for sharing ur recipie

Ambethkar said...

Akka,biriyani seimurai romba kolappama(Because naa oru paiyan ippa thaan samaikka palagikittu irukean)irukku easya oru method sulabama,but taste-ta irukura mathiri solunnga akka,I'm Waiting for your Reply............

password123 said...

Madam

Ennai mathiri velinattil sontha samayal seithu sappidupavargalukku ungal Website Oru ATCHAYA PATHIRAM. sirantha vilakkam. thelivana sei muraigal.. Thodaratuumungal sevai....

Thank you.

senthilkumar.j

Unknown said...

HAI VERY USEFULL ONE...

Unknown said...

geetha mam

why we add in this briyani 2-3 litres i tryed it total briyani has spoiled.

swathi said...

Is coconut milk is not added? how was the taste .every time i had prepared biriyani i must add coco milk but your recipie is not add milk? how?pls reply

GEETHA ACHAL said...

Thanks swathi...Usually I used to add milk in special variety like chettinadu, dindugal biryani...

But i always make without coconut milk...It tastes good... Try without coconut milk...It will be tasty.

samy said...

Very nice madam...I will try tomorrow. ..

Unknown said...

hi mam.... i m manimalar ur briyani variety is very nice and looking beautiful... i will try my best...

lavanya said...

hai mam..super...i prepared briyani...its too good..

Unknown said...

Very nice

Related Posts Plugin for WordPress, Blogger...