சிக்கன் வடை - chicken vadai


சிக்கன் வடை
வடை என்பது மிகவும் பிரபலமான எண்ணெய் பலகாரம். எந்த ஒரு விசேஷம் என்றாலும் மாறி வரும் இந்த காலத்திலும் வடை கண்டிப்பாக நம்முடைய அன்றைய சமையலில் இடம் பெற்று இருக்கும்.


உளுந்து வடை, பருப்பு வடை, மசால் வடை, தவளை வடை, ஆமை வடை, சாம்பார் வடை போன்று பல வகைகளில் வடைகளினை செய்கின்றோம்.

அதே போல நாம் இப்பொழுது பார்க்க போவது சிக்கன் வடை. இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.


இந்த குறிப்பினை என்னுடைய நாத்தனார் திருமதி. அர்ச்சனா அவர்கள் தான் எனக்கு கற்று கொடுத்தார்கள். அவருடைய சமையல் மிகவும் வித்தியசமாக குழந்தைகளுக்கு விரும்பும் வகையில் இருக்கும்.


சரி..வாங்க..இப்பொழுது நாம் சிக்கன் வடையினை செய்வதினை பார்ப்போம்..


தேவையான பொருட்கள் :
§  எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ
§  வெங்காயம் – 1
§  பச்சை மிளகாய் – 3
§  பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
§  எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  உப்பு – 1 தே.கரண்டி
மற்ற பொருட்கள் :
§  மைதா மாவு – 1 கப்
§  பிரெட் தூள் – 1 கப்
§  எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
*       முதலில் சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.


*       வெங்காயம் + பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கவும்.


*       அரைத்த சிக்கன் + வெங்காயம் + பச்சை மிளகாய் +கொத்தமல்லி, புதினா,கருவேப்பில்லை + எலுமிச்சை சாறு + தூள் வகைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


*       மைதா மாவினை தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.


*       கடாயில் எண்ணெயினை காய வைக்கவும்.


*       இப்பொழுது சிக்கன் கலவையில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வடை போல தட்டி கரைத்து வைத்துள்ள மைதா மாவில் பிரட்டிய பின் பிரெட் தூளிலும் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


*       இப்பொழுது சுவையான சிக்கன் வடை ரெடி. இதனை சாதத்துடன் அல்லது ஸ்நாக்ககவோ சுடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தூள் வகைகள் சேர்க்கமால் அதற்கு பதில் மிளகு தூள் சேர்க்லாம்.


மைதா மாவிற்கு பதிலாக முட்டையின் வெள்ளை கருவினை உபயோகிக்கலாம்.

10 comments:

ஹர்ஷினி அம்மா - said...

/அவருடைய சமையல் மிகவும் வித்தியசமாக குழந்தைகளுக்கு விரும்பும் வகையில் இருக்கும். /

அவருடையது மட்டும் இல்லை ... உங்க எல்லா குறிப்பும் குழந்தைகளுக்கு எற்ற் மாதிரி தான் இருக்கும். :-)

சிக்கன் வடை புதுமையா இருக்கே ... பாக்க சின்னன் நக்கெட்ஸ் போல இருக்கு.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா. என்னுடைய பொன்னுக்காகவே அனைத்தும் பார்த்து பார்த்து சமைப்பதால் இப்படி ஆகிவிடுகின்றது.

ஆமாம் இதனை சாப்பிடும் பொழுது சிக்கன் நக்கட்ஸ் போலவே தான் இருக்கும்.

Mrs.Menagasathia said...

//அவருடைய சமையல் மிகவும் வித்தியசமாக குழந்தைகளுக்கு விரும்பும் வகையில் இருக்கும். //

உங்களுடையதும் குழந்தைகள் மட்டுமிலாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் சமையல் தான்பா.நான் சிக்கனை வதக்கிவிட்டு தான் வடை செய்திருக்கேன்பா.உங்களுடையது ஈஸியா இருக்கு.அப்படியே எனக்கும் ஒரு பார்சல் கீதா...

manjula said...

interesting recipes geetha

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. ஆமாம் மேனகா இதனை செய்வது மிகவும் சுலபம். சமைக்கும் நேரமும் மிக குறைவு. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி மஞ்சளா. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இதனை செய்து கொடுங்கள்
விரும்பி சாப்பிடுவாங்க.

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் விட்ஜெட் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய Add-தமிழ் பட்டன் விட்ஜெட் உங்கள் தளத்தில் இணையுங்கள் !

மேலதிக தகவல்களுக்கு www.findindia.net

பொன்மலர் said...

super and amazing. i will try this dish tommorrow. wow.

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி பொன்மலர். கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சுலபமாக செய்துவிட முடியும்.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்

Related Posts Plugin for WordPress, Blogger...