கடலைமாவு மோர் குழம்புமோர் குழம்பு செய்வது மிகவும் சுலபம். எளிதில் செய்ய கூடிய குழம்பு. மோர் குழம்பின் சுவையோ தனி தான்.

பலரும் மோர் குழம்பிற்கு அரிசி + பருப்பினை  ஊறவைத்து அதனை அரைத்து தான் குழம்பில் சேர்த்து ஊற்றி கொதிக்கவிடுவோம். இப்படி தான் எங்கள் வீட்டிலும் மோர் குழம்பினை அம்மா செய்வாங்க.

சில சமயம் அரிசி பருப்பினை சிறிது நேரம் ஊறவைக்க மறந்துவிடுவேன்.அதனால் மோர் குழம்பு சாப்பிட ஆசையாக இருந்தாலும் அதனை செய்ய முடியாமால் போய்விடும்.

நான் pregnant ஆக இருந்த சமயம் இந்த மோர் குழம்பு என்றால் அவ்வளவு ஆசையாக சாப்பிடுவேன். அப்பொழுது தான் என்னுடைய தோழி திருமதி. ஸ்வேதா ,வட இந்தியாவை சேர்ந்தவர் இந்த கடலைமாவு மோர் குழம்பினை எனக்கு கற்று கொடுத்தார். மிகவும் சுவையான மோர் குழம்பு.

பொதுவாக, மோர் குழம்பு செய்யும் பொழுது நிறைய நேரம் கொதிக்கவிட மாட்டோம். ஆனால் இந்த வகையில் கடலைமாவுடன்  மோர் குழம்பினை செய்யும் பொழுது நிறைய நேரம் கொதிக்கவிட்டால் தான் சுவை..

சரி..வாருங்கள்..இதன் செய்முறையினை இப்பொழுது பார்ப்போம்  வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 20 நிமிடம்

தேவையான பொருட்கள் :

§  தயிர் – 1 கப்

§  கடலை மாவு – 2 தே.கரண்டி

§  மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

§  உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

§  எண்ணெய் – 1 தே.கரண்டி

§  கடுகு – 1/2 தே.கரண்டி

§  சீரகம் – 1 தே.கரண்டி

§  பச்சை மிளகாய் – 3

§  இஞ்சி – சிறிய துண்டு

§  கருவேப்பில்லை – 5 இலை

கடைசியில் சேர்க்க :

§  கொத்தமல்லி – சிறிதளவு

§  எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி (விரும்பினால்)

செய்முறை :

v  தயிரினை கடலைமாவுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும். கடலைமாவு கட்டி இல்லாமல்     நன்றாக தயிருடன் கலந்து இருக்க வேண்டும். இதுவே சரியான பக்குவம்.

v  பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து பின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

v  பிறகு கரைத்துவைத்துள்ள கடலைமாவு தயிர் கலவை + 2 - 3 கப் தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு அனைத்தும் சேர்த்து கடாயில் ஊற்றி நன்றாக 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

v  அதன்பின் கொத்தமல்லி + எலுமிச்சை சாறு  சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

v  இப்பொழுது சுவையான கடலைமாவு மோர்குழம்பு ரெடி. இத்துடன் உருளைகிழங்கு வறுவல் மிக பொருத்தமாக இருக்கும்.

கவனிக்க :

கடலைமாவு தயிருடன் நன்றாக கரைந்து இருக்கவேண்டும். எவ்வளவு நேரம் கொதிக்கவிடுகிறோமோ அவ்வளவு சுவையாக குழம்பு இருக்கும்.

11 comments:

Unknown said...

கீதா இந்த குழம்பு இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்துச்சு..ரொம்ப நன்றி புது குழம்பு செய்ய கற்றுத் தந்தர்க்கு

GEETHA ACHAL said...

தங்கள் செய்துவிட்டு பின்னுட்டம் அனுப்பியதை கண்டு மிகவும் மகிழ்ச்சி. இந்த மோர் குழம்பு மிகவும் வித்தியசமாக நன்றாக
இருக்கும். மிகவும் நன்றி பாயிஜா.

Viji said...

Geetha
naanum pregnant aaga ullen.Intha kuzlambu indru seyyalam endru ullen.Aanal thirinthu vidumo endru payamaga ullathu.ennaku moor kuzlambu,kadi ellame thirinthu vidum.ethavathu aalosanai koorungalen.

GEETHA ACHAL said...

//naanum pregnant aaga ullen.Intha kuzlambu indru seyyalam endru ullen.Aanal thirinthu vidumo endru payamaga ullathu.ennaku moor kuzlambu,kadi ellame thirinthu vidum.ethavathu aalosanai koorungalen.//விஜி பயப்படாமல் இந்த மோர்குழம்பினை செய்யுங்கள்..கண்டிப்பாக திரிந்துவிடாது..

அது தான் இந்த மோர்குழம்பின் ஸ்பெஷல்...கடலைமாவினை கட்டியில்லாமல் கரைத்து கொள்ளுங்கள்...சூப்பராக இருக்கும்.

இதனை எவ்வளவு நேரம் கொதிக்கவிட்டாலும் கண்டிப்பாக திரிந்துவிடாது...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்..நன்றி விஜி.

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் விஜி. உடம்பினை பார்த்து கொள்ளுங்கள்.

வடுவூர் குமார் said...

ஓ! திரியாதா? செய்துபார்த்திடுவோம்.த‌னியாக‌ இருக்கும் போது தான் இம்மாதிரியான‌ முய‌ற்சிக‌ளில் இற‌ங்க‌ முடியும்.ஊருக்கு போனா அம்மாவும் ம‌னைவியும் குசினி ப‌க்க‌மே விட‌மாட்டார்க‌ள்.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக திரியாது...இந்த குழம்பின் ஸ்பெஷலே இதனை அதிக நேரம் கொதிக்கவிட்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றி குமார்...

Anisha Yunus said...

கீதாக்கா,

வெகேஷன் எப்படி இருந்தது? அதைப் பற்றி பதிவே போடலை? இங்க என் பையனுக்கு 3 வாரமா காச்சலும் வயிற்றுப்போக்குமா சேர்ந்து படுத்திட்டிருக்கு. இன்னும் சரியாகலை. ஒன்னு நின்னா இன்னொன்னு. அதுலதான் உங்களுக்கு ஃபோனும் பண்ண முடியலை. இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் அவன் சரியாயிட்டா பண்றேன். இல்லைன்னா நான் யாரிடமாவது ஃபோன் பேசினாலும் பக்கத்துல விசும்பிட்டே நிப்பான். அதான்.

இன்னிக்கு இந்த மோர் குழம்பை செய்தேன். எனக்கு மோர் குழம்பு ரொம்ப பிடித்த ஒன்ரு. சீக்கிரம் செய்யலாம்னு ஒன்னு, லைட்டாக இருப்பதும், அந்த சுவைக்காகவுமே..சட்னி மிஞ்சினா மோர் குழம்புதான் எங்க வீட்டில. ஆனா இது புதுசா சீக்கிரம் செய்யக் கூடியதாகவும் அருமையா இருந்தது. டேஸ்ட்டும் சூப்பர். ரொம்ப நன்றி, பகிர்ந்ததுக்கு. :)

GEETHA ACHAL said...

குழந்தையினை பார்த்து கொள்ளுங்க...Mail அனுப்பி இருக்கேன்...பார்க்கவும்..

vanithagovindaraju said...

Hai Geetha,
Iam Vennila, new to your blogg.Morekuzhalumbu is today's recipe. It is so nice to see and so tasty.

vinikarthi said...

Hai geetha.. Inaiku na indha morekulamba seidhu pardhen migavum arumaiya ulladhu.. Pls simple kulambu vagaigal irundha sollungalen...

Related Posts Plugin for WordPress, Blogger...