கொள்ளூ சுண்டல் - Horsegram sundal


கொள்ளூ சுண்டல்
நாம் அன்றாடம் எதவாது ஒரு பயறு வகைகளை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு மிகவும் நல்லது.

கொள்ளூற்கு உள்ள தனிதன்மை அதனை சாப்பிடுவதால் உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்பதற்காக  கொள்ளினை தினமும் சாப்பிட்டாலும் உடல் சூடினை எற்படுத்துவிடும். அதனால் தான் என்னவே நம்முடைய முன்னோர்கள் அளவுக்கு மிச்சினால் அமிர்தமும் நஞ்சுஎன்று கூறியிருக்கின்றாகள்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அளவோடு செய்வது நல்லது.
சரி..சரி கொள்ளூ சுண்டல் வருவோம்.  இப்பொழுது நம்முடைய சுண்டல் செய்முறையினை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
§  கொள்ளூ – 1 கப்
§  பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1(விரும்பினால்)
§  நசுக்கிய பூண்டு – 2 பல்
§  காய்ந்த மிளகாய் – 1
§  கருவேப்பில்லை – 3 இலை
§  எண்ணெய் – 1 தே.கரண்டி
§  கடுகு – 1/4 தே.கரண்டி
§  உப்பு தேவையான அளவு
செய்முறை :
v  முதலில் கொள்ளினை குறைந்தது 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
v  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து காய்ந்த மிளகாய் + பூண்டினை போட்டு வதக்கவும்.
v  பின் வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
v  பிறகு அதில் ஊறவைத்த கொள்ளூ + உப்பு சேர்த்து நன்றாக கிளறி தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் 10 – 15 நிமிடம் வேகவிடவும்.
v  இப்பொழுது சுவையான கொள்ளூ சுண்டல் ரெடி.
குறிப்பு :
ü  தேவையானால் தேங்காய் துறுவல் சேர்த்து கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
ü  விரும்பினால் சாப்பிடும் முன் அதில் 1 தே.கரண்டி எலுமிச்சை சாறினை கொள்ளூ சுண்டலுடன் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிடலாம்.
ü  கொள்ளினை வேகவைக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற தேவையில்லை. குறைந்த தீயில் மூடி வைத்தே வேகவிடவும்

1 comments:

Anonymous said...

super tips for health

Related Posts Plugin for WordPress, Blogger...