கேபேஜ் ப்ரான் ப்ரை( Cabbage Prawn Fry)

கேபேஜினை சாப்பாட்டில் அடிக்கடி சேர்த்து கொள்வது உடலிற்கு மிகவும் நல்லது. அதிலும் டயட்டில் இருப்பவர்கள் இதனை சேர்த்து கொள்வதால் உடல் இளைக்க மிகவும் உதவுகின்றது. காரணம் கேபேஜ் Negative Calorie Vegetable மற்றும் இதில் விட்டமின் சி(Vitamin C) சத்து அதிகம் உள்ளது.


எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமால் இப்படி எதேவது சேர்த்து செய்தால் சாப்பிட ஆசையாக இருக்கும்.


சரி..இதன் செய்முறையினை பார்போம் வாங்க..
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடம்


தேவையான பொருட்கள்:
§ முட்டைகோஸ் – 1
§ எண்ணெய் – 1/2 தே.கரண்டி + 2 தே.கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
ப்ரான் மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
§ பெரிய இரால் – 1/4 கிலோ(சுமார் 15 – 20 இரால்)
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி
§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
செய்முறை :
இரால் சுத்தம் செய்து கொடுத்துள்ள மசாலா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.


முட்டை கோஸினை 2 x 1 இன்ஞ் அளவிற்கு பெரிய பெரிய நீட்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


பெரிய அகலமான பனில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊறவைத்துள்ள இராலினை போட்டு வதக்கவும்.


இரால் நன்றாக வெந்த பிறகு பனில் இருந்து எடுத்துவிடவும்.

அதே பனில் மீதம் உள்ள 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் + உப்பு சேர்த்து வதக்கவும்.


முட்டைகோஸில் உள்ள தண்ணீர் எல்லாம வற்றிய பிறகு இராலினை சேர்த்து கலந்து பரிமாறவும்.

சுவையான கேபேஜ் ப்ரான் ப்ரை ரெடி.

கப்ஸிகம் துவையல்


கப்ஸிகம்(குடைமிளகாய்) நிறைய சத்துகள் இருக்கின்றது. இதில் விட்டமின் ஏ & சி (Vitamin A & C ) சத்துகள் அதிக அளவில் இருக்கின்றது. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல நிறங்களில் கப்ஸிகம் கிடைகின்றது.

இந்த துவையல் மிகவும் அருமையாக இருக்கும்.

சரி..வாங்கஇதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..

தேவையான பொருட்கள் :

§ குடைமிளகாய் – 1

§ நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி + 1/2 தே.கரண்டி

§ கடுகு – 1 தே.கரண்டி

§ சீரகம் – 1/2 தே.கரண்டி

§ கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி

§ உளுத்தம் பருப்பு – 1 மேஜை கரண்டி

§ காய்ந்த மிளகாய் - 3

§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

§ புளிசிறிதளவு

§ உப்புதேவையான அளவு

§ தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி

செய்முறை :

குடைமிளகாயினை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சீரகம்+ காய்ந்த மிளகாய் + கடலை பருப்பு + உளுத்தம் பருப்பு + பெருங்காயம் சேர்த்து வதக்கி கொண்டு கடைசியில் குடைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

இத்துடன் தேங்காய் துறுவல் + உப்பு சேர்த்து கொரகொரவேன அரைத்து கொள்ளவும்.

கடாயில் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை போட்டு 2-3 நிமிடம் வதக்கவும். சுவையான கப்ஸிகம் துவையல் ரெடி.

குறிப்பு:

டயடில் இருப்பவர்கள் தேங்காய துறுவலினை சேர்க்க வேண்டாம்.

விரும்பினால் கடைசியில் அரைத்த துவையிலினை கடாயில் போட்டு வதக்கவும்.இல்லையெனில் கடைசியில் வதக்காமல் சாப்பிடலாம்.

ஸ்பைசி காளிஃப்ளவர்(Spicy Cauliflower)

காளிஃப்ளவரினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. காளிஃப்ளவரில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருக்கின்றது. இதில் நார்சத்து(Dietary Fiber) மற்றும் விட்டமின் சி (Vitamin C) அதிகமாக இருக்கின்றது. காளிஃபளவரினை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் கன்சர் வருவதை தடுக்க உதவுகின்றது.


நாம் பலவிதமாக பொரியல் செய்வோம். இந்த முறையில் செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
சரி..வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ காளிஃப்ளவர் – 1
§ வெங்காயம் - 1
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
அரைக்க தேவையான பொருட்கள் :
§ மிளகு – 2 தே.கரண்டி
§ சீரகம் – 1 தே.கரண்டி
§ இஞ்சிசிறிய துண்டு
§ பூண்டு – 3 பல்
§ மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
கடைசியில் சேர்க்க :
§ கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை :
காளிஃப்ளவரினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக வெட்டி வைக்கவும்.


அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கிங்கிய பிறகுகாளிஃப்ளவரினை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.அதன் பிறகு அரைத்த விழுதினை சேர்த்து கிளறவும்.

பின்னர் இதனை தட்டு போட்டு மூடி வேகவைக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி சேர்த்து கிளறவும். சுவையான ஸ்பைசி காளிஃப்ளவர் ரெடி.

ஸ்டஃப்டு வெண்டைக்காய் (Stuffed Okra)ஸ்டஃப்டு வெண்டைக்காய் என்றதும் நாம் அனைவருக்கும் தோன்றுவது- இதனை செய்ய நிறைய நேரம் எடுக்கும், இதற்கு நிறைய எண்ணெய் தேவைப்படும், அதே போல சில சமயம் ஸ்டஃப்டு செய்த காய்கள் சீராக வெந்து இருக்காது. அப்படி நீங்கள் நினைத்தால் இதனை பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை மாற்றி கொள்ளதான் வேண்டும்.


நானும் முதன்முறையாக செய்யும் பொழுது இப்படி தான் நினைத்தேன். அதன் பின் என்னுடைய வடமாநில தோழியிடன் இதன் இரகசியத்தினை அறிந்த பின் அதன் வழி ஸ்டஃப்டு வெண்டைக்காய் செய்து வெற்றி பெற்றேன்.


இந்த வெண்டைகாயிற்கு ஸ்டஃபிங் நம்முடைய விருப்பத்திற்கு எற்றாற்போல செய்யலாம். நான் ரசப்பொடி வைத்து செய்தேன். இதனை சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லிமிளகாய் பொடி, கருவேப்பில்லை பொடி என எதை வைத்து செய்தாலும் சுவையோ சுவை தான் போங்க..


இந்த வெண்டைக்காயில் நிறைய எண்ணெய் சேர்க்காமால் செய்வதால் அனைவரும் சாப்பிடலாம்.


இந்த செய்முறையில் வெண்டைக்காயில் எண்ணெய் சேர்க்காமல் அடிக்கடி தண்ணீரை தெளித்து தட்டு போட்டுமூடி குறைந்த தீயில் வேகவிடவேண்டும். இதற்கு அகலமான நாண்-ஸ்டிக் பன்(Non-Stick Pan) உபயோகிப்பது மிகவும் சிறந்தது.


சரி..வாங்க.இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..


சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடம்
தேவையான பொருட்கள்:
§ வெண்டைக்காய் – 1/2 கிலோ
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
§ கொத்தமல்லி- மேலே தூவ
ஸ்டஃப்பிங் செய்ய தேவையான பொருட்கள் :
§ கடலை மாவு – 2 தே.கரண்டி
§ சாம்பார் பொடி() ரசப்பொடி – 2 தே.கரண்டி
§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
§ உப்பு – 1/2 தே.கரண்டி
செய்முறை :
வெண்டைகாயினை கழுவி கொள்ளவும். வெண்டைக்காயின் காம்பினை வெட்டவும். அதன் நடுவில் சிறிதாக கீறிவிடவும்.(இதில் தான் ஸ்டஃப்பிங் வைக்கபோகிறோம்.)


ஸ்டஃப்பிங் பொருட்களை அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.(ஸ்டஃப்பிங் கொழுக்கட்டை பிடிப்பது போல வர வேண்டும் . இல்லையெனில் 1 – 2 தே.கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.)


ஸ்டஃப்பிங்கை வெண்டைக்காயின் நடுவில் அடக்கி வைக்கவும்.

பெரிய நாண்-ஸ்டிக் பனில் ஸ்டஃப்பிங் செய்த வெண்டைக்காயினை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும்.


வெண்டைக்காயின் மீது எண்ணெய் ஊற்றி தட்டு போட்டு மூடி சிறிய தீயில் வேகவிடவும்.
4 - 5 நிமிடம் கழித்து வெண்டைக்காயினை திருப்பிவிட்டு அதன் மீது 2 தே.கரண்டி தண்ணீரினை தெளித்துவிடவும்.

5 நிமிடத்திற்கு ஒரு முறை வெண்டைக்காயினை திருப்பிவிட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். கடைசியில் வெண்டைக்காய் வறுவல் மாதிரி வரும் வரை வைத்து பொடியாக வெட்டி வைத்துள்ள கொத்தமல்லியினை தூவவும்.

சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.


கவனிக்க :
வெண்டைக்காயில் சரியாக ஸ்டஃபிங் வைக்கவும்.
ஸ்டஃப்டு செய்த வெண்டைக்காயினை பனில் வைக்கும் பொழுது ஸ்டஃபிங் பகுதி மேல் நோக்கி வைக்க வேண்டும்.


மிகவும் குறைந்த தண்ணீர் (அதவாது 1 – 2 தே.கரண்டி தண்ணீர்) தான் ஒவ்வொரு முறையும் தெளிக்க வேண்டும்.

மேத்தி புலாவ் - Methi pulao / Venthayakeerai sadamமேத்தி புலாவ்(வெந்தயகீரை) மிகவும் அருமையான சிறந்த டயட் புலாவ் என்றே கூறலாம். வெந்தயகீரை உடலிற்கு மிகவும் நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் மற்றும் உடலில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க உதவுகின்றது.
இந்த புலாவிற்கு புதினா, கொத்தமல்லியை நான் சேர்ப்பது இல்லை. அப்படி சேர்த்தால் மேத்தியின் சுவை அவ்வளவாக புலாவில் தெரிவது இல்லை.
அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல இதனை செய்து கொள்ளலாம். இதனை செய்வது மிக சுலபம்.
இந்த புலாவிற்கு எண்ணெயோ அல்லது நெய்யினை அதிகம் சேர்க்க தேவையில்லை.
மேத்தி கொஞ்சம் கசப்பாக இருப்பதால் இத்துடன் தக்காளி அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பதால் சுவையாக இருக்கும். இந்த புலாவுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
சரி…வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ பாஸ்மதி அரிசி – 2 கப்
§ வெந்தயகீரை – 1 கட்டு
§ வெங்காயம் – 1
§ தக்காளி – 2
§ பச்சை மிளகாய் – 2
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§ சீரக தூள் – 1/4 தே.கரண்டி
முதலில் தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1
§ இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது – 1 தே.கரண்டி
கடைசியில் சேர்க்க :
§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி (விரும்பினால்)
§ நெய் – 1 தே.கரண்டி (விரும்பினால்)
செய்முறை :
கீரையினை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை பெரிய துண்டுகளாக நீட்டாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை கீறி கொள்ளவும்.

அரிசியினை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பிரஸர் குக்கரில் முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயகீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் தக்காளி மற்றும் சேர்க்க வேண்டிய தூள் வகைகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் ஊறவைத்த அரிசியினை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
விசில் அடங்கியதும் பாத்திரத்தினை திறந்து அதன் மீது நெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
கவனிக்க:
பிரஸர் குக்கரில் சமைக்கும் பொழுது – சாதம், பிரியாணி, புலாவ் என்று எதுவாத இருந்தாலும் செய்த உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி செய்வதால் சாதம் கெட்டியாக இல்லாமால் உதிரி உதிரியாக நன்றாக இருக்கும்.

உருளை வறுவல் - Potato Varuval


உருளைகிழங்கு வறுவல் பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சமைப்பாங்க. எங்கள் வீட்டிலும் உருளைகிழங்கினை பல வகைகளில் சமைப்போம். அதில் விருந்தினர்கள் வரும் சமயம் நான் சமைப்பது இந்த முறையில் தான். இதனை செய்வது மிகவும் சுலபம்.


பெரும்பாலும் உருளைகிழங்கினை சமைக்கும் பொழுது தோலினை நீக்கிவிடுவதினால் வாயு தொல்லை அதிகமாக இருக்காது. ஆனால் இந்த வறுவலுக்கு உருளைகிழங்கினை தோலுடன் சேர்த்து சமைப்பது தான் சுவையே. (அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல தோலினை வேண்டுமானால் நீக்கி கொள்ளலாம்.)வளரும் குழந்தைகளுக்கு எற்ற வறுவல்.


இந்த வறுவலுடன் கலந்த சாதம், சாம்பார், குழம்பு, ரசம் என்று சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க...


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ உருளைகிழங்கு – 1/4 கிலோ
§ நசுக்கிய பூண்டு – 3 பல்
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
கடைசியில் தூவ :
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லிசிறிதளவு
செய்முறை :
முதலில் உருளைகிழங்கினை ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
அடிகணமான அகலமான பனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பின் நசுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கவும்.


பிறகு உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறிவும்.


மிக குறைந்த தீயில் உருளைகிழங்கினை வேகவிடவும். (தட்டு போட்டு முடி வேண்டாம். தண்ணீர் ஊற்ற கூடாது.ஊற்றினால் சுவை மாறுபடும்)


உருளைகிழங்கு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


கவனிக்க:
இதனை செய்ய அகலமான கடாயினை தேர்ந்து எடுக்கவும். இதனால் உருளைகிழங்கு நன்றாக வெந்து, வெளிபுறத்திலும் கிரிஸ்பியாக இருக்கும். அதே போல நாம் பிரட்டிவிடும் நேரத்திலும் உடையாமல் இருக்கும்.


இந்த முறை வறுவலுக்கு தண்ணீர் சேர்க்க கூடாது.

கோழி தொக்கு - Chicken Thokku


எங்கள் வீட்டில் அம்மா செய்யும் இந்த தோழி தொக்கு அனைவரின் விரும்பம். இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்ற எதனுடன் சாப்பிடாலும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு சுவையே கடைசியில் தாளித்து சேர்க்கும் பொருட்களில் தான் இருக்கின்றது. அதிகம் மசாலா வகைகள் சேர்க்காமல் செய்வதால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


ஒருமுறை, என்னுடைய வெளிநாட்டு தோழிகளுக்கு இதனை செய்து கொடுத்தேன். இத்துடன் சேர்த்து சாப்பிட பூரியும் செய்தேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எப்பொழுதும் இதனை தான் செய்வேன்.


சரி வாங்க..இதனுடைய செய்முறையினை பார்போம்..வாங்க


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ கோழி – 1/2 கிலோ
§ வெங்காயம் – 100கிராம்
§ தக்காளி – 100 கிராம்
§ இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
§ எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
தேவையான தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/2தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1தே.கரண்டி
§ தனியா தூள் – 1தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
கடைசியில் தாளிக்க வேண்டிய பொருட்கள் :
§ எண்ணெய் – 1தே.கரண்டி
§ சோம்பு – 1 தே.கரண்டி
§ கருவேப்பில்லை – 5இலை


செய்முறை ;

  • கோழியினை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை பொடியாக வெட்டி கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம் + இஞ்சி பூண்டு விழுது + தக்காளி ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு கோழிகறியினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • இத்துடன் தூள் வகைகள் சேர்த்து நன்றாக பிரட்டி கறியினை வேகவிடவும்.
  • கோழிகறி நன்றாக வெந்தபிறகு, தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்த்து தாளித்து கறியுடன் சேர்த்து கிளறி 2 – 3 நிமிடம் வேகவிடவும்.

ப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)ப்ரைட் ரைஸினை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை பொருத்தமாக பக்க உணவுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பெரும்பாலும் ப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது அஜினிமோட்டோ சேர்த்து தான் செய்வாங்க. ஆனால் அது உடம்பிற்கு அவ்வளவு நல்லது அல்ல.

இந்த செய்முறை படி செய்தாலும் அதே சுவை தான் கிடைக்கும். சரி, வாங்க ப்ரைட் ரைஸுடைய செய்முறையினை பார்ப்போம் வாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் – 15 – 20 நிமிடம்

தேவையான பொருட்கள் :

§ வடித்த ஆறவைத்த சாதம் – 2 கப்

§ முட்டை – 2

§ நறுக்கிய வெங்காயம் – 1

§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி

§ சோயா சாஸ் – 1 தே.கரண்டி

§ வினிகர் – 1/2 தே.கரண்டி

§ மிளகு தூள் – 1/2 தே.கரண்டி

§ பொடியாக நறுக்கிய கராட், பீன்ஸ், கார்ன் – 1/2 கப்

§ உப்புதேவையான அளவு

§ எண்ணெய் – 1 மேஜை கரண்டி

மேலே தூவ :

§ பொடியாக நறுக்கிய வெங்காய தாள் சிறிதளவு

செய்முறை :

முதலில் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதன் பின் இஞ்சி + பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு பொடியாக நறுக்கிய காய்கள் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் முட்டையினை ஊற்றி நன்றாக பிரட்டி முட்டையினை உதிரியாக பொடிமாஸாகி வேகவிடவும்.

அடுத்தாக சோயா சாஸ் + வினிகர் + மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடம் வேகவிடவும்.

கடைசியில் சாதத்தினை இதில் சேர்த்து நன்றாக கலக்கவும். சாதத்தின் மீது வெங்காயதாளினை தூவி பரிமாறவும்.

கவனிக்க :

ஆறவைத்த சாதம் பொலபொலவென ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனி தனியாக இருக்க வேண்டும்.

சாத்த்தினை கடைசியில் கடாயில் சேர்த்து கிளறும் பொழுது அழுத்தமாக கிளறமால் மேலேட்டமாக கிளற வேண்டும்.

அடுப்பினை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். தண்ணீர் ஊற்ற கூடாது. அதே போல தட்டு போட்டு மூடி காய்களை வேகவைக்க வேண்டாம். அப்படி செய்தால் காய்களில் சிறிது தண்ணீர் சேர்த்த்து போலாகிவிடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...