சிக்கன் கார்ன் சூப் - Chicken Corn soup


சூப் குடிப்பதினால் உடலிற்கு புத்துணர்சியும், எளிதில் ஜீரணம் செய்யவும் முடிகின்றது. முன்பு எல்லாம் சூப்பினை காய்ச்சல், ஜுரம் வரும் பொழுது தான் செய்து குடிப்பாங்க. ஆனால், இப்பொழுது எந்த விருந்தானாலும் நாம் முதலில் சூப்பில் இருந்து தான் தொடங்கிறோம்.


சூப்பினை சாப்பிடும் முன் அருந்துவதினால், சாப்பாட்டினை சிறிதளவு தான் உட்கொள்ள முடியும். இது மிகவும் நல்லதொரு விஷயம். இதனால் விருந்துகளில் தேவைக்கு அதிகமாக சாப்பிடாமல் தேவையான அளவு மட்டும் சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு மிகவும் நல்லது.


மட்டன் சூப், வெஜிடபுள் சூப், கார்ன் சூப், தக்காளி சூப் , சிக்கன் சூப் என சூப்புகள் பல வகைப்படும்.
எங்களுடைய வீட்டில் அடிக்கடி சூப் செய்து குடிப்போம். என்னுடைய பொன்னுக்கு சிக்கன் சூப் என்றால் மிகவும் விருப்பம். காரம் எதுவும் சேர்க்காமல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்கள் சூப் அருந்தும் பொழுது அதன் மீது மிளகு தூள் சேர்த்து கொள்ளலாம்.


சரி..வாங்க..இப்பொழுது சிக்கன் கார்ன் சூப் செய்முறையினை பார்ப்போம்…

இதற்கு Boneless Skinless Chicken Breast பகுதி மிகவும் நன்றாக இருக்கும்.சூப் வகைகளுக்கு கருப்பு மிளகு தூளிற்கு பதிலாக வெள்ளை மிளகு தூளினை சேர்த்தால் சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  சிக்கன் – 1/4 கிலோ
§  கார்ன் – 1 கப்
§  பொடியாக நறுக்கிய பீன்ஸ், காரட், பச்சை பட்டாணி – 1 கப்
§  எதாவது ஒரு கீரை வகை – 1/2 கப் (விரும்பினால்)
§  மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
§  கார்ன் பவுடர் – 2 தே.கரண்டி
§  உப்பு – தேவையான அளவு


செய்முறை :
v  சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் + 4 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து வேகவிடவும்.


v  சிக்கன் 3/4 பாகம் வெந்த பிறகு வெட்டிய காய்கள், கார்ன் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.


v  கார்ன் பவுடரை 1/2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். இப்பொழுது கரைத்த கார்ன் பவுடர் + கீரை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிடவும்.


v  பரிமாறும் பொழுது மிளகு தூள் சேர்த்து பரிமாறவும். சுவையான சிக்கன் கார்ன் சூப் ரெடி.


குறிப்பு :
கார்ன் பவுடர் இல்லாத சமயம் மைதா மாவினை தண்ணீரில் கரைத்து சேர்த்து கொள்ளலாம்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...