பெசரட் (பச்சைபயிறு அடை)


பெசரட் என்பது பச்சைபயிறில் செய்கின்ற அடை. இந்த அடை ஆந்திரா மாநிலத்தில் மிகவும் பிரபலம். அவர்கள் இந்த அடைக்கு கார சட்னி, தேங்காய் சட்னி போன்றவையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த அடையிற்கு, பச்சை பயிறு மற்றும் அரிசியினை குறைந்தது 6 மணி நேரம் ஊறவைத்து அதனை கொர கொரப்பாக அரைத்து எடுத்து தேவையான பொருட்கள் சேர்த்து அடைகளாக சுட்டு எடுக்கிறோம்.

எங்கள் வீட்டில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது எதவாது ஒருவகை அடை செய்வேன். வீட்டில் அனைவருக்கும் அடை என்றால் மிகவும் விருப்பம். சிலர் அடையிற்கு வெல்லம் அல்லது சக்கரை வைத்து சாப்பிடுவார்கள்...ஆனால் எனக்கு அடையினை சட்னியோ அல்லது சக்கரையுடனே சேர்த்து சாப்பிடாமல், அதனை அப்படியே தனியாக சாப்பிட தான் பிடிக்கும்.

இந்த அடையுடன் கார சட்னி சேர்த்து சாப்பிட மிக ஜோராக இருக்கும்... அதனுடைய செய்முறை விளக்கத்தினை காண இங்கே க்ளிக் செய்யவும். கார சட்னி
சரி..சரிவாங்க இப்பொழுது பெசரடின் செய்முறையினை பார்ப்போம் வாருங்கள்….
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 6 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ வெங்காயம் – 1
§ தேங்காய் – 1 துண்டு
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
ஊறவைத்து அரைக்க :
§ பச்சைபயிறு – 1 கப்
§ அரிசி – 1/2 கப்
§ காய்ந்த மிளகாய் – 3
தாளித்து மாவில் சேர்க்க:
§ எண்ணெய் – 1/2 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ சீரகம் – 1/2 தே.கரண்டி
செய்முறை :
v முதலில் முழு பச்சைபயிறு மற்றும் அரிசியினை சேர்த்து குறைந்தது 6 மணி நேரம் ஊறவைக்கவும்.

v பிறகு ஊறவைத்துள்ள பொருட்களுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
v வெங்காயம் மற்றும் தேங்காயினை பொடியாக நறுக்கி அதனை அரைத்து மாவில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதனையும் மாவில் சேர்த்து கலக்கவும்.
v கலவையினை நன்றாக கலக்கி மிகவும் மெல்லிய அடைகளாக சுட்டு எடுக்கவும். இதற்கு கார சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு :
அரிசி + பச்சை பயிறினை அரைக்கும் பொழுது கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.
அடைகளாக சுடும் பொழுது மிதமான தீயில், ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு சிறிது நேரம் வேகவைக்கவும்.அதில் தான் சுவை.
அடைகளை சுட்டும் பொழுது தோசையினை சுட்டுவது போல உடனே எடுத்துவிட கூடாது…3 – 4 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
மாவினை அரைத்தவுடன் புளிக்கவைக்க தேவையில்லை. உடனே அடைகளாக சுட்டு சாப்பிடலாம்.

13 comments:

Mrs.Menagasathia said...

அடையின் கலர் பார்க்கவே சூப்பரா இருக்கு.

கீதா ஆச்சல் said...

ஆமாம் மேனகா...அடையின் கலர் மட்டும் இல்லாமல் அடையும் சூப்பராக இருக்கும்.
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்..

பொன்மலர் said...

good cooking blog. vaalthugal
http://ponmalars.blogspot.com

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்மலர்.

Anonymous said...

HI GEETHA

I AM MENAGASATHIA'S SISTER. I AM TRIED YOUR RECEIPE IT'S VERY TASTY AND NICE FOR LOOKING.THANKS FOR YOUR RECEIPE.

PUNITHAM

கீதா ஆச்சல் said...

மிகவும் சந்தோசம் புனிதா. எப்படி இருக்கிங்க?.போன வாரம் தான் உங்களை பற்றி மேனகா சொன்னாங்க. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிபா. செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதை கண்டு மகிழ்ச்சி.

Thamarai selvi said...

கீதா என்க்கு ரொம்ப பிடிச்சுருக்கு..சின்ன சந்தேகம் என்ன்னா மாவை அரைத்தவுடன் பயன்படுத்தலாம் இல்லையா?புளிக்கவைக்க தேவையில்லையே? நான் மாலை 6மணிக்கு அரைச்சு 8.30க்கு செய்துட்டேன்..அப்படிதான் பண்ணனுமா? இல்ல புளிக்கவைக்கனுமா?

sarusriraj said...

கீதா இன்னைக்கு காலை டிபன் பெசரட் , ரொம்ப நல்லா இருந்தது . ரொம்ப நன்றி புது விதமான சமையல் அறிமுக படுத்தியதற்கு

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா.

jeevitha jagadeesh said...

addai super....i made it today

jeevitha jagadeesh said...

i made it today...addai super

Babin Praise T said...

arisi pachai arisia? illa pulungal arisia mam?

Anonymous said...

Thanks for your receipies geetha..Can all the dosa receipies you have given can be grinded in mixie itself ?or should we only do with grinders?

Related Posts Plugin for WordPress, Blogger...