சரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்

        print this page Print


நீங்கள் பல வகை சாம்பார் சாப்பிட்டு இருப்பிங்க...ஒரு முறை இந்த சாம்பாரினை சாப்பிட்டால் திரும்ப திரும்ப அதே சாம்பாரினை தான் செய்வோம்...அவ்வளவு அருமையாக ருசியாக இருக்கும்.

சரவணபவன் ஹோட்டல் சாம்பார் மிகவும் பிரபலம். அதிலும் இந்த சாம்பாரினை சாதத்துடன் சாப்பிடுவதை விட இட்லி, தோசை, பொங்கலுடன் போன்ற சிற்றுண்டியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த சாம்பாரில் வேண்டுமானால் கத்திரிக்காய், முருங்கைக்காய், செள செள போன்றவை சேர்த்து சமைக்கலாம்.

எங்களுடைய வீட்டில் அனைவருக்கும் சரவணபவன் ஹோட்டல் சாப்பாடு என்றால மிகவும் விருப்பம். அதிலும் இந்த சாம்பாரின் சுவையே தனி தான்...

இந்த சாம்பார் செய்வது மிகவும் எளிது. அதனுடைய செய்முறையினை இப்பொழுது பார்ப்போம் வாங்க...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ துவரம் பருப்பு – 1 கப்
§ வெங்காயம் – 1
§ தக்காளி – 1
§ உப்புதேவையான அளவு
அரைக்க வேண்டியவை :
§ தக்காளி – 1
§ பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ தனியா தூள் – 1 தே.கரண்டி
§ தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி
கடைசியில் தாளித்து சேர்க்க :
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ வெந்தயம் – 1/4 தே.கரண்டி
§ சீரகம் – 1/2 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ வெங்காயம் – 1
§ கருவேப்பில்லை – 4 இலை
§ பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கடைசியில் தூவ :
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்
செய்முறை :
v வெங்காயம் + தக்காளியினை பொடியாக வெட்டி கொள்ளவும். முதலில் கொடுத்துள்ள துவரம் பருப்பு +3 கப் தண்ணீர் + வெங்காயம் + தக்காளியினை பிரஸர் குக்கரில் போட்டு 3 – 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
v அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தயையும் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
v விசில் அடங்கியதும் பிரஸர் குக்கரினை திறந்து வெந்த பருப்பு +வெங்காயம், தக்காளியினை நன்றாக மசித்து கொள்ளவும்.
v அத்துடன் அரைத்த கலவை + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
v ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் + சீரகம் +உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
v இப்பொழுது வதக்கிய பொருட்களை, கொதிக்கின்ற சாம்பாரில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
v கடைசியில் கொத்தமல்லி தூவி களறிவிடவும். இந்த சாம்பாரினை இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபன் ஐட்டம்ஸுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

70 comments:

Malini's Signature said...

நானும் பல முறைகளில் சாம்பார் பன்னி பாத்துட்டேன் ஆனா ஹோட்டல் சாம்பார் போல வரவே மாட்டேங்குது கீதா... இந்த முறையில் பன்னி பாக்கனும்.... அரைக்கும் பொருட்களை வருத்து அரைப்பேன் அதான் காரனனும்னு நினைக்குரேன்.

GEETHA ACHAL said...

இந்த சாம்பாருக்கு எதையும் வறுத்து அரைக்க தேவையில்லை. செய்வதும் சுலபம்..
செய்து பாருங்கள்...கண்டிப்பாக உங்களுக்கு ஹோட்டல் டேஸ்ட் கிடைக்கும்..சரவணபவன் டேஸ்டில் இருக்கும்...நன்றி ஹர்ஷினி அம்மா.

ayishashaban said...

i like this samiyaL. THIS IS VERY GOOD SITE WHICH OFFER GREAt recipies. thank u

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஆயிஷா.

Anonymous said...

துவரம் பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேக வைப்பது புதுமையாக உள்ளது.

GEETHA ACHAL said...

//துவரம் பருப்புடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வேக வைப்பது புதுமையாக உள்ளது//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி shridi.saidasan.
கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுங்கள்.

kavi.s said...

கீதா எப்படி இருக்கீங்க உங்க குட்டி பொண்ணு நல்லா இருக்காங்களா?
உங்க(????)சரவணபவன் சாம்பார் நேற்று செய்தேன் ரொமப நல்லா இருந்தது,சரணபவன்ல சாப்பிட்டது இல்ல ஆனா, நிறைய‌ ஹோட்டல இதே டேஸ்ட்லதான் இருக்கும். எங்க வீட்டுகாரருக்கு கொடுத்தேன் சாப்பிட ஆரபிச்சவுடனே ஹோட்டல வைக்கிற சாம்பார் மாதிரியே இருக்குனு சொன்னாரு.நல்லாயிருந்தது நன்றி.

கீதா இங்க தேவையான பொருட்களில் வெங்காயம்னு 1 நு சொல்லியிருக்கீங்க,என்ன வெங்காயம்? சின்ன வெங்காயமா இல்ல பெரிய வெங்காயமா?:))

உங்க ப்ளாக் நல்லாயிருக்கு.

GEETHA ACHAL said...

வாங்க கவி...உங்களை இங்கு பார்த்ததில் மிகவும் சந்தோசம் பா...
உங்கள் மகன் எப்படி இருக்கின்றாங்க...இங்கு அனைவரும் நலம்...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

இதில் பெரிய வெங்காயம் சேர்த்து கொள்ளுங்கள்....

உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பட்டது மிகவும் மகிழ்ச்சி பா..

Anonymous said...

hi சரவணபவன் சாம்பார் super madam

Anonymous said...

Hi சரவணபவன் சாம்பார் super Alagarjayakodi from chennai

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அழகர்..

Anonymous said...

dear geetha achal madam,
your site is very nice and very useful escpecially for a beginners like me.... i am going to try all your traditional recipes.. thank you very much...

soundra magesh..

Anonymous said...

DEAR MAM,

TO SEASONING HOW MUCH GREEN CHILLI WE HAVE TO USE. PLS CONFORM

REG
RADHA

GEETHA ACHAL said...

பச்சைமிளகாயினை உங்களுடைய காரத்திற்கு ஏற்றாற்போல சேர்த்து கொள்ளுங்கள்...2 பச்சை மிளகாய் போதுமனதாக இருக்கும்...நன்றி ராதா..

ஸாதிகா said...

தனியாக சாம்பார் பொடி சேர்க்கத்தேவை இல்லையா?பெருங்காயத்தை மறந்து விட்டீர்கள்?

Angel said...

geetha indha sambaril tambarind add seyya vendaama.thaks for lovely yummy sambar recipe

அப்பாதுரை said...

புளி கலக்காமல் சாம்பார் செய்யச் சொல்றாங்களேனு தயங்கித் தான் தொடங்கினேன்.
பிரமாதமாக வந்தது.
வெங்காயத்தோடு வெந்த பருப்பில் நல்ல மணம். கொஞ்சம் மிளகாய் அதிகம் சேர்த்து அரைத்து விட்டேன்; நெய் டப்பா காலி. அடுத்த முறை கவனமாக இருக்க வேண்டும்.
செய்முறைக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிகவும் அருமையாக உள்ளது.

Gayathri said...

அன்புள்ள தோழி,
இப்பொழுதுதான் உங்க சாம்பாரை செய்து ருசி பார்த்தேன்...என்ன ருசி..உங்க குறிப்பு அமோகமா இருக்கு...எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்ல. மிக்க நன்றி...நன்றி நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...நான் எப்பொழுதும் இதில் பெருங்காயம் சேர்ப்பதில்லை...ஆனால் சேர்த்தால் நன்றாக தான் இருக்கும்...சேர்த்துவிடுகிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

angelin said...
//geetha indha sambaril tambarind add seyya vendaama.thaks for lovely yummy sambar recipe//புளி சேர்க்க தேவையில்லை...தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கும், அதனை செய்து பார்த்து கருத்து தெரிவித்தர்க்கும் மிகவும் நன்றி அப்பாதுரை...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி புவனா...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கும், அதனை செய்து பார்த்து கருத்து தெரிவித்தர்க்கும் மிகவும் நன்றி காயத்ரி...

Anonymous said...

good recipes-u done a good job

mohan said...

good recipie
but i think saravanabavan sambar has some krammbu /pattai and also rice flour for thickness? can u pl comment?
thanks for the recipie,good

mohan said...

good recipie
but i think saravanabavan sambar has some krammbu /pattai and also rice flour for thickness? can u pl comment?
thanks for the recipie,good

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மோகன்..

இதில் கிராம்பு பட்டை எல்லாம் எதுவும் சேர்க்க வேண்டாம்...

இந்த சாம்பார் ஏற்கனே சிறிது திக்காக தன் இருக்கும்..அதனால் அரிசிமாவு சேர்க்க தேவையில்லை...

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு தங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்...நன்றி...

அப்பாதுரை said...

பத்து தடவை இதை செய்து பாத்தாச்சுங்க... அற்புதமா வருது... உங்களுத்தான் நன்றி சொல்லணும்- இதை என்னோடு சேர்ந்து சாப்பிட்டுத் தீர்த்த நண்பர்கள் சார்பிலும் நன்றி.

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அப்பாதுரை...உங்கள் அனைவரின் பாராட்டிற்கும் மிகவும் சந்தோசம்...உங்களுக்கும்,உங்கள் நண்பர்களுக்கும் எனது நன்றிகள்...

Anisha Yunus said...

கீதாக்கா...,

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. இன்னிக்கு நைட் இதுதேன். இது நாள் வரைக்கும் நாம செஞ்சது சாம்பார்தானான்னு கேக்க வெக்கிற அளவுக்கு சும்மா ஜம்முன்னு இருந்தது. உங்க வீட்டுல எல்லாரும் குடுத்து வச்சசவ்ங்க. ஒரு ஓட்டுதேன் அலவ் பண்றாங்க. இல்லின்னா 100 ஓட்டு போட்டிருப்பேன். ரெம்ப ரெம்ப தாங்க்ஸ்!!

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அன்னு...செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்ததில் மிகவும் சந்தோசம்...

Unknown said...

பூரி கிழங்கு ஹோட்டலில் செய்யும் முறை பற்றி எழுதவும்

GEETHA ACHAL said...

கூடிய சீக்கிரத்தில் பூரி கிழங்கு செய்வது எப்படி என்று பதிவு போடுகிறேன்...தங்கள் அன்பான கருத்து நன்றி செல்லதம்பி...

Anonymous said...

Hi,
Please share with us if you have recipe for hotel like Parota Chalna?

Thanks in advance.

Regards.
G

anilaradhu said...

i serve dosai with saravanabhavan sambar ... silently....my son asked me, why u buy sambar at hotel? ur not well??? credit goes to geetha achhal..

GEETHA ACHAL said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு ராது...உங்களுடைய மகனுக்கும் நன்றியினை தெரிவிக்கவும்...

குட்டிஸுற்கு பிடித்தால் ரொம்ப சந்தோசம்...

krishnaveni said...

saravanabavan sambar ennoda rendu pasangalum schoolkku kondu poona anga matra pasanga vangi kudichudaranga. superb aa irukku. thanks geetha.pasanga santhoshama kondu poraanga. again thank you very much

துளசி கோபால் said...

சாம்பாருக்கு இப்படி கூட்டம் அம்முது. நான் ரொம்ப லேட்டாவந்துருக்கேனே:(

புளி இல்லாத சாம்பாரா???? ஆஹா ஆஹா

செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன். பொட்டுக்கடலையைத் தேடிப்போகிறேன்.

வல்லியம்மா சுட்டி அனுப்பினாங்க.

Ashok D said...

இஞ்சி பூண்டு?

Packya said...

Saravana bavan sambar Enakku romba pidikkum.. Athe Tastil varuma.. Nichayam idhupola seikiren.. Romba easy-a irukku.. Sambar parthale taste theriyudhu. Congrats..

Packya said...

Saravana bavan sambar Enakku romba pidikkum.. Athe Tastil varuma.. Nichayam idhupola seikiren.. Romba easy-a irukku.. Sambar parthale taste theriyudhu. Congrats..

VASANTHA said...

AKKA

NAN UNGA BLOG PAKKAM IPPA KONCHA NALLATHAN VAREN . UNGA BLOG LA IRUKURA ELLAME NAN ELUTHI VACHURUKEN . SAMBAR VACHEN AKKA SUPERA IRUNTHUCHU. BUT KONCHAM KASAPA IRUNTHUKUA ENNA THAPPU PANNENU ENAKE THERIYAL BUT SUPER

joe said...

google search moolamaaga ungal website vanthen. En manavikki sambar samaithu kodukka , indha saravana bhavan sambar sei murai migavum elithaaga ulaathu. ungalukku migavum nanri.

Krupa said...

Geetha, Thanks so much for the recipe. I love love love Saravana Bhavan sambhar and was absolutely excited to see your recipe. I tried it out yesterday. It came out well but I would do a few tweaks, with all due respect to you. (1) I used 2 tomatoes - 1 in the cooker & the other in the paste. I found that the sambhar had less "pulippu" (tartness). Next time I would probably use a canned tomato (I typically buy the S&W canned diced tomatoes from Costco in the US). It will give that extra pulippu to round out the taste (2) I got the raw chilli powder taste - even though I boiled the paste+dhaal mixture for a while. Next time I may sautee the chilli powder along with onions instead of grinding it.

Again, your recipe is AWESOME !! The couple of tweaks I mention are more execution/ingredient related... thought it may be helpful for others.

Thanks so much !!

-K

Anonymous said...

priyathiyagarajkumar: saravana bhavan sambar enga erode idlyku rombave poruthama irunthuchu... nantri madam..

sathu said...

hi
Iam mrs sathya, USA, iam visiting this site for first time, came to know this from aval vikatan. seems to be intresting. will try it and post it.

senthil said...

hi mam.... ithan first unka site ku varathu... bachlors ku yarkittayavathu kettu panrathu kastam.. unka site photo voda varuthu.. romba use madam.. thank you by senthil

Kannan said...

I have tried it. Very very tasty. My daughter likes it very much. Thank you.

vasagan said...

மிகவும் நன்றாகவுள்ளன மிக்க நன்றி

ramesh said...

oats adai is great.

Tamil Movies Portal said...

sambar.. super thank you so much...
-Saravanan

Tamil Movies Portal said...

Sambar super, Thank you so much... :-)

GEETHA ACHAL said...

நன்றி சரவணன்..

Unknown said...

சாம்பார் அருமை கீதா. தாளிக்கும்போது சின்ன வெங்காயம் போடலாமா?.அப்படியே பூரி கிழங்கையும் சொல்லுங்களேன்

அம்பாளடியாள் said...

வணக்கம் தோழி இன்று உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது
அதற்க்கு என் வாழ்த்துக்கள் .அருமையான சாம்பாறு செய்து சாப்பிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது இதற்க்கு வலைசரத்துக்கும் உங்களுக்கும் என் நன்றிகள் .
அவசியம் இந்த சாம்பாறை நானும் செய்து பார்ப்பேன் .மேலும் மேலும் உங்கள் ஆக்கங்கள் சிறப்பாகத் தொடர மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள் தோழி !

Anonymous said...

i tried this recipe
my mom liked it
my bro ate many dosas just for this sambar
great recipe.
thanks geetha

HVL said...

இப்போது தான் தங்கள் வலைப்பக்கத்திற்கு வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பீன்ஸ் பொறியல் முயற்சித்துப் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. மீண்டும் வருவேன். நன்றி!

Anonymous said...

very supeb and useful site mam...thank u so much

Anonymous said...

how many gram is 1 cup? is it 200 gm?

Anonymous said...

haai geetha mam, naanum pala murai sambar pannirukkan indha sambar maari naan senjadhe kidayadhu apdi oru taste! naan than senjananu enakke oru dovt thanks mam

Babitha said...

i made this sambar,and it was very tasty,making it over and over again

Unknown said...

super akka.

Anonymous said...

super taste sambar i like it very much thanks for sambar recipe

Unknown said...

nallave illa akka.... thayavu seithu sariyaga sollavum.... enakku sumaraka than samaikka therium... megavum kulappamaga ullathu... akkka...

Premalatha said...

I tried your recipie Geetha, it came out well. Just added garlic and asafoetida extra. Thanks for your easy and tasty recipie. Got good comments from my family for this sambar..

Anonymous said...

I luv this recipe. Used many times. But I cud see following - http://www.indiantamilrecipe.com/vegetarian/sambar/Hotel-saravana-bhavan-tiffin-sambar-recipe

Do u know this?

sakila said...

very nice

Padmasri a said...

Am new to cooking..I tried ur recepie..it came out really good.thanq so much for posting tis recepie madam.

Padmasriappandairaj said...

Am new to cooking..I tried ur recepie..it came out really good madam..thanq for posting tis recepie..

Related Posts Plugin for WordPress, Blogger...