கிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids tofu Sundal


டோஃபுவினை சோயா பன்னீர் என்று சொல்லலாம். பன்னீரை அதிகம் சாப்பிடுவது உடலிற்கு அவ்வளவு நல்லது இல்லை என்பதால் பன்னீருக்கு பதிலாக டோஃபுவினை சாப்பிடலாம். Sliken tofu, firm tofu என டோஃபுவில் பலவகை உள்ளது. Firm Tofu பன்னீர் மாதிரி கெட்டியாக இருக்கும். பன்னீருக்கு பதிலாக இந்த வகை டோஃபுவினை உபயோகிக்கலாம்.


எங்கள் வீட்டில் எப்பொழுதும் பன்னீருக்கு பதிலாக டோஃபுவினை தான் உபயோகிக்கிறேன். பக்கட்டில் கிடைக்கும் டோஃபுவினை தண்ணீரில் ஊறவைத்து இருப்பாங்க… அந்த தண்ணீரில் இருந்து டோஃபுவினை எடுத்து நீங்கள் விரும்பிய அளவில் வெட்டி கொள்ளவும்.


உங்கள் விருப்பத்திற்கு எற்றாற் போல இதில் என்ன வேண்டுமானால் சேர்த்து செய்யலாம். 
மிகவும் சுவையாக இருக்கும். இதனை என்னுடைய குழந்தைக்காக மிகவும் ஸ்பைசியாக இல்லாமல் செய்து இருக்கிறேன்.


எங்கள் வீட்டில் டோஃபுவினை வைத்து செய்யும் சுவையான ஸ்நாகினை ஒன்றினை பற்றி பார்ப்போம் வாருங்கள்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ டோஃபு – 1 பக்கட்
§ வேக வைத்த சுண்டல் – 1 கப் ( விரும்பினால்)
§ எண்ணெய் அல்லது பட்டர் – 2 தே.கரண்டி
§ துறுவிய பூண்டு – 2 பல்
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ உப்பு – சிறிதளவு
கடைசியில் தூவ :
§ பொடியாக நறுக்கிய வெங்காய தாள் – சிறிதளவு
செய்முறை :
v டோஃபுவினை விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
v நான் – ஸ்டிக் பானில் எண்ணெய் ஊற்றி பூண்டினை போட்டு வதக்கிய பிறகு வெட்டி வைத்துள்ள டோஃபுவினை போடவும்.
v அத்துடன் மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கிளறிவிடவும். (டோஃபு உடையாமல் பார்த்து கொள்ளவும். )
v அடிக்கடி கிளறிவிட தேவையில்லை…டோஃபு நன்றாக வறுவல் மாதிரி வெளியே கொஞ்சம் கிரிஸ்பியாக வரும் வரை சிறு தீயில் வைத்து வதக்கவும்.
v கடைசியில் வேக வைத்த சுண்டல் மற்றும் வெங்காய தாள் சேர்த்து பரிமாறவும்.
கவனிக்க :
இதற்கு Non-Stick Pan உபயோகித்தால் மிகவும் நல்லது இல்லை என்றால் அதிகம் எண்ணெய் ஊற்ற வேண்டும்…
குறைந்த தீயில் வைத்து டோஃபுவினை வதக்கவும்.

4 comments:

Menaga Sathia said...

ஸ்நாக்ஸ் பார்க்கவே சாப்பிடத் தோனுது,இதுவரை நான் சோயா பனீரை வாங்கியதில்லை.இனிதான் வாங்கி செய்து பார்க்கனும்.

ஹர்ஷினி அம்மா said...

நானும் பன்னீருக்கு பதிலாக டோஃபுவினை தான் உபயோகிக்கிறேன். ஆனா இந்த குறிப்பு ரொம்ப புதுசா இருக்கு கீதா..குழந்தைகளுக்கு பிடிக்கும்னா பன்னிடவேண்டியதுதான்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா. கண்டிப்பாக இந்த டோஃபுவில் செய்து பாருங்கள்.
மிகவும் சுவையாக நன்றாக இருக்கும்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா. இத்துடன் வேகவைத்த சுண்டல் அல்லது
எதவாது காய் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கண்டிப்பாக செய்து பாருங்கள்.குழந்தைக்கு பிடிக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...