கேபேஜ் பொரியல் - Cabbage Poriyal


முட்டைகோஸில் Vitamin C சத்து நிறைய உள்ளது. முட்டைகோஸினை மிக்ஸியில் அரைத்து அந்த சாறினை அருந்தினால் அல்சர் சீக்கிரம் குணமடையும். முட்டைகோஸினை வேகவைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.


முட்டைகோஸினை நாம் செய்யும் எந்தவித சமையலுக்கும் சேர்த்து செய்யலாம். முட்டைகோஸ் பொரியல் செய்வது மிகவும் சுலபம் தான். இந்த பொரியலினை எங்கள் வீட்டில் செய்தால் நான் பொரியலினை மட்டுமே சாப்பிட்டு எழுந்துவிடுவேன்…அவ்வளவு நன்றாக இருக்கும்.


இதனை நாம் சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிடால் தேங்காய் சாதம் மாதிரி சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் எங்க அம்மா , எனக்கு இதனை சாதத்துடன் போட்டு பிசைந்து அதன் மீது அப்பளத்தினை பொடித்து கொடுப்பாங்க…சுவையாக இருக்கும்…
சரி வாங்க, இதனுடைய செய்முறையினை பார்ப்போம் வாங்க…


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ முட்டைகோஸ் – 1/4 கிலோ
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ பச்சை மிளகாய் – 1
§ கடுகு – 1/2 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ தேங்காய் துறுவல் – 1/4 கப்
§ உப்புதேவையான அளவு
செய்முறை :
v முட்டைகோஸினை பொடியாக அரிந்து கொள்ளவும்.பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பினை போட்டு வறுக்கவும்.
v அதன் பின் முட்டைகோஸ் + பச்சை மிளகாய் + உப்பு சேர்க்கவும். இதனை தட்டு போட்டு முடி வேகவிடவும். (தண்ணீர் ஊற்ற தேவையில்லை.)
v கடைசியில் தேங்காய் துறுவல் சேர்த்து நன்றாக கிளறி மேலும் 2 நிமிடம் வைக்கவும்.இப்பொழுது சுவையான கேபேஜ் பொரியல் ரெடி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...