வெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chaptathi


வெந்தயகீரை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. வெந்தகீரையினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,
o உடல் எடை குறைக்கின்றது
o சக்கரை அளவினை கட்டுபடுத்துகின்றது
o புற்றுநோய் வரமால் தடுக்க உதவுகின்றது
o கெட்ட கொழுப்பினை குறைக்கின்றது
o குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்களுக்கு அதிகம் பால் சுரக்க உதவுகின்றது


இதனால் வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தயகீரையினை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. வெந்தயகீரையினை நாம் வீட்டிலேயே ஒரு சிறிய தொட்டியில், வெந்தயத்தை போட்டால் உடனே 10 நாட்களிலே வளர்ந்துவிடும்.


பொதுவாக வெந்தயகீரை சிறிது கசப்பு தன்மை கொண்டு இருக்கும். அதனை நன்றாக வதக்கினால் கசப்பு தெரியாது. வெந்தயகீரை சப்பாத்தி மிகவும் சுவையாக இருக்கும்.


இந்த சப்பாத்திற்கு பொருத்தமாக தயிர் பச்சடி வகைகள் சேர்த்து சாப்படால் சுவையாக இருக்கும்.
சரி, வாங்க இதனுடைய செய்முறையினை பார்ப்போம் வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ கோதுமை மாவு – 2 கப்
§ வெந்தயகீரை – 1 கப்
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
§ பட்டர் – 1 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் + தனியா தூள் – 1/2 தே.கரண்டி
செய்முறை :
v வெந்தயகீரையினை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் வெந்தயகீரை + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
v வதக்கிய கீரை + .கோதுமை மாவு+பட்டர் + உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
v பிறகு இத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பத்த்திற்கு பிசைந்து கொள்ளவும்.
v இதனை சப்பாத்திகளாக தேய்த்து சுட்டு எடுக்கவும். சுவையான வெந்தயகீரை சப்பாத்தியினை தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
கவனிக்க:
கீரையினை வதக்கவும் பொழுது தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
பட்டர் Room Temperatureயில் இருக்க வேண்டும். முதலில் பட்டரை மாவுடன் கலந்து நன்றாக பிசைந்த பிறகு தான் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

2 comments:

viji said...

hi geetha,
ur blog is very nice & useful.
i want 2 try ur methi chapathi,but can i try with dry methi leaves.will it provide all the nutrients like fresh methi.

viji said...

hi geetha,
can i try this with dry methi leaves, will it provide all the nutrients

Related Posts Plugin for WordPress, Blogger...