வெஜிடேபுள் கட்லட் - Vegetable cutlet

கட்லட் என்பது காய்களிலோ அல்லது சிக்கன், மீன் போன்றவைகளில் செய்யபடும் ஸ்நாக் வகை. பொதுவாக இதனை appetizerஆக பரிமாற சிறந்தது..


வெஜ் கட்லட்டிற்கு மிக முக்கியமான தேவையான பொருள் வேகவைத்த உருளைகிழங்கு. உருளைகிழங்கினை சாப்பிடுவதால் வாயு தொல்லை அதிகம் இருக்கும். அதனால் உருளைகிழங்கினை தோல் நீக்கிய பிறகு வேகவைத்தால் வாயு தொல்லை இருக்காது.


நீங்கள் விரும்பும் காய்களை சேர்த்து வெஜ் கட்லட் செய்யலாம். இன்று நான் இந்த வெஜ் கட்லட்டிற்கு சேர்த்து இருக்கும் காய் – உருளைகிழங்கு, காரட், பின்ஸ், கார்ன்.
என்னுடைய குழந்தைக்காக சமைத்த்தால் இதில் நிறைய காரம் சேர்க்கவில்லை. காரத்தினை விரும்புவர்கள் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போன்றவை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.


சரி வாங்க இதனுடைய செய்முறையினை பார்ப்போம் வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 45 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ உருளைகிழங்கு – 1/4 கிலோ
§ கராட், பின்ஸ், கார்ன் – 1 கப்
§ பச்சை மிளகாய் – 3 அல்லது மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ கொத்தமல்லி, புதினா சிறிதளவு(விரும்பினால்)
§ எண்ணெய் – 3 மேஜை கரண்டி
§ உப்புதேவையான அளவு
கட்லடை பிரட்டி எடுக்க தேவையான பொருட்கள் :
· மைதா மாவு – 1/2 கப்
· பிரெட் தூள் – 2 கப்
செய்முறை :
உருளைகிழங்கினை தோல் நீக்கிய பிறகு அது முழ்கும் அளவு தண்ணீரில் போட்டு வேகவைத்து கொள்ளவும். உருளைகிழங்கி நன்றாக வெந்த பிறகு தண்ணீரை வடித்து அதனை மசித்து கொள்ளவும்.
கராட்,பின்ஸ், கார்னை சிறிது வதக்கி கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கவும்.
மசித்த உருளைகிழங்கு + வதக்கிய காய்கள் + பச்சை மிளகாய் + கொத்தமல்லி, புதினா + உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.


மைதா மாவினை தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
செய்து வைத்துள்ள கட்லடினை மைதா மாவு கரைசலில் தோய்த்து பிறகு பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்.

தோசை கல்லினை காயவைத்து அதில் இந்த கட்லடினை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான வெஜ் கட்லட் ரெடி, இதனை சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
குறிப்பு :
இது வெஜ் கட்லட் என்பதால் மைதா மாவு கரைசலில் செய்தோம். நீங்கள் விரும்பினால் முட்டையின் வெள்ளை கருவில் செய்யலாம்.

2 comments:

Anonymous said...

mam karam masala poodi appadina enna podi ?

plz sollunga appathan naa seithu parkka mudium

GEETHA ACHAL said...

கரம் மசாலா பொடி என்பது தனியாக கடைகளில் கிடைக்கும்...பட்டை, கிராம்பு என்று எல்லாத்தின் கலவை தான் அது...

கரம் மசாலா பொடி இல்லை என்றாலும் பராவாயில்லை...நீங்கள் விரும்பிய தூள் வகைகள் சேர்த்து கலந்து செய்து பாருங்க...நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...