மிளகு குழம்புமிளகு குழம்பினை குளிர் காலத்தில் சாப்பிட உடலிற்கு புது தெம்பினை தருவது போல இருக்கும். பொதுவாக இந்த குழம்பினை காய்ச்சல், ஜுரம், சளி இருக்கும் சமயத்தில் சாப்பிடால் உடலிற்கு புத்துணர்சியை அளிக்கும். அந்த சமயத்தில் வாய்கும் ருசியாக இருக்கும். இந்த குழம்பினை மாதத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவது உடலிற்கு நல்லது.

இந்த குழம்பினை எங்கள் வீட்டில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது செய்துவிடுவேன். இந்த குழம்புடன் , சுட்ட அப்பளம் + சாதம் மிக பொருத்தமாக இருக்கும்.

இந்த குழம்பினை குறைந்தது 2 - 3 நாள் வரை வைத்து சாப்பிடலாம்.இந்த குழம்பினை நல்லெண்ணெயில் செய்தால் தான் மிக சுவையாக இருக்கும்.

இந்த குழம்பிற்கு தேவையான 5 பொருட்கள்கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, சீரகம் மற்றும் மிளகு.

சரி..வாங்க இந்த மிளகு குழம்பின் செய்முறையினை பார்ப்போம் வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடம்

தேவையான பொருட்கள் :

§ வெங்காயம் – 1

§ தக்காளி – 1

§ பூண்டு – 10 பல்

§ கருவேப்பில்லை – 5 இலை

§ நல்லெண்ணெய் – 3 மேஜை கரண்டி

§ கடுகு – 1/2 தே.கரண்டி

§ வெந்தயம் – 1/2 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி

§ உப்பு – 2 தே.கரண்டி

கரைத்து கொள்ள :

§ புளிசிறிய எலுமிச்சை அளவு

§ தண்ணீர் – 4 கப்

வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் :

§ கடுகு – 1/2 தே.கரண்டி

§ வெந்தயம் – 1/2 தே.கரண்டி

§ மிளகு – 1 தே.கரண்டி

§ சீரகம் – 1 தே.கரண்டி

§ துவரம் பருப்பு – 2 தே.கரண்டி

செய்முறை :

வெங்காயம், தக்காளியினை பொடியாக வெட்டி வைக்கவும். புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் கடுகு + வெந்தயம் போட்டு தாளித்து பூண்டு போட்டு வதக்கவும்.

இத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.

கரைத்து வைத்துள்ள புளி கரைசலில் பொடி செய்துள்ள வறுத்த பொடி + கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

இப்பொழுது கரைத்த புளி கரைசலினை கடாயில் உள்ள வதக்கிய பொருட்களுடன் சேர்த்து நன்றாக 10 – 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

இப்பொழுது சுவையான மிளகு குழம்பு ரெடி.

23 comments:

Anonymous said...

hi thanks....

kino said...

hi geethaa........superbaa irukku.....milagu kulambu...

Anonymous said...

Geetha Achal .... மிளகு குழம்பு very taste ya ..... Alagar JayaKodi Chennai

Geetha Achal said...

நன்றி அழகர் ஜெயகொடி. என்னுடைய குறிப்பிகளை பார்த்து தவறமால் செய்து பின்னுட்டமும் கொடுத்து மேலும் என்னை ஊக்கம் அளிப்பதற்கு மிகவும் நன்றி.

ramyavenkat said...

hi akka i tried this dish also .very tasty.thanks.....

Geetha Achal said...

மிகவும் நன்றி ரம்யா. நீங்கள் செய்து பார்த்து பின்னுட்டம் அளிததில் மிகவும் மகிழ்ச்சி.நன்றி.

kaveri said...

hi akka in this rainy season i want some hot kulambu thanks for urs milagu kulambu

GEETHA ACHAL said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி காவேரி...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...

LK said...

ஹ்ம்ம் சிலிக்கும் தொண்டை வலிக்கும் இதம் அளிக்கும்

மதுரை சரவணன் said...

மதுரைக் குளிருக்கு உங்களின் மிளகு குளம்பு சூப்ப்ர்... வாழ்த்துக்கள்

asiya omar said...

குழம்பு சூப்பர்.

நிலாமதி said...

காலத்துக்கேற்ற மிளகுக் குழம்பு செய்தபின் சொல்கிறேன்.

angelin said...

i saw this recipe post yesterday.
today i made this for lunch .
it was very nice and tasty esp for my sore throat .
thanks for sharing this recipe geetha.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..ஆமாம் மழை காலத்திற்கு ஏற்ற குழம்பு...

நன்றி சரவணன்...

நன்றி ஆசியா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி நிலா...கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுங்க...

நன்றி ஏஞ்சலின்...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...நன்றிகள் பல...

Bharathi Mohan said...

hi this is bharathi. i came to know about ur website through Aval Vikatan magazine. i tried milagu khuzhambu it came out really good. thanks.

sathiya seelan said...

very thanks my siss

sathiya seelan said...

thanks my siss

sathiya seelan said...

thanks my siss

GEETHA ACHAL said...

நன்றி சத்யா...

Chithru Sindhu said...

inime dhan kulambu vaikanum akka, but indha page epdi download panradhu, konjam sollunga.... idhu madiri neraya kulambu na unga kitta irundhu kathukanum

Chithru Sindhu said...

kulambu nalla irukum nu nenaikiren... but indha page a epdi download panradhunu sollunga,... naa unga kitta irundhu neraya kathukanum pa

Book Trichy said...

THANK YOU MADAM...

Related Posts Plugin for WordPress, Blogger...