கோழி தொக்கு - Chicken Thokku


எங்கள் வீட்டில் அம்மா செய்யும் இந்த தோழி தொக்கு அனைவரின் விரும்பம். இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்ற எதனுடன் சாப்பிடாலும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு சுவையே கடைசியில் தாளித்து சேர்க்கும் பொருட்களில் தான் இருக்கின்றது. அதிகம் மசாலா வகைகள் சேர்க்காமல் செய்வதால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


ஒருமுறை, என்னுடைய வெளிநாட்டு தோழிகளுக்கு இதனை செய்து கொடுத்தேன். இத்துடன் சேர்த்து சாப்பிட பூரியும் செய்தேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எப்பொழுதும் இதனை தான் செய்வேன்.


சரி வாங்க..இதனுடைய செய்முறையினை பார்போம்..வாங்க


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ கோழி – 1/2 கிலோ
§ வெங்காயம் – 100கிராம்
§ தக்காளி – 100 கிராம்
§ இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
§ எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
தேவையான தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/2தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1தே.கரண்டி
§ தனியா தூள் – 1தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
கடைசியில் தாளிக்க வேண்டிய பொருட்கள் :
§ எண்ணெய் – 1தே.கரண்டி
§ சோம்பு – 1 தே.கரண்டி
§ கருவேப்பில்லை – 5இலை


செய்முறை ;

  • கோழியினை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை பொடியாக வெட்டி கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம் + இஞ்சி பூண்டு விழுது + தக்காளி ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு கோழிகறியினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • இத்துடன் தூள் வகைகள் சேர்த்து நன்றாக பிரட்டி கறியினை வேகவிடவும்.
  • கோழிகறி நன்றாக வெந்தபிறகு, தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்த்து தாளித்து கறியுடன் சேர்த்து கிளறி 2 – 3 நிமிடம் வேகவிடவும்.

2 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

அக்கா பாக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுதே...
என் மனைவிய ஒரு நாள் செய்ய சொல்லனும்..

GEETHA ACHAL said...

//அக்கா பாக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுதே...
என் மனைவிய ஒரு நாள் செய்ய சொல்லனும்.//
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தம்பி . கண்டிப்பாக செய்து பார்க்கவும். மிகவும் அருமையாக இருக்கும்.
என்னுடைய வலைபகுதிக்கு வந்ததிற்கு மிக நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...