உருளை வறுவல் - Potato Varuval


உருளைகிழங்கு வறுவல் பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சமைப்பாங்க. எங்கள் வீட்டிலும் உருளைகிழங்கினை பல வகைகளில் சமைப்போம். அதில் விருந்தினர்கள் வரும் சமயம் நான் சமைப்பது இந்த முறையில் தான். இதனை செய்வது மிகவும் சுலபம்.


பெரும்பாலும் உருளைகிழங்கினை சமைக்கும் பொழுது தோலினை நீக்கிவிடுவதினால் வாயு தொல்லை அதிகமாக இருக்காது. ஆனால் இந்த வறுவலுக்கு உருளைகிழங்கினை தோலுடன் சேர்த்து சமைப்பது தான் சுவையே. (அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல தோலினை வேண்டுமானால் நீக்கி கொள்ளலாம்.)வளரும் குழந்தைகளுக்கு எற்ற வறுவல்.


இந்த வறுவலுடன் கலந்த சாதம், சாம்பார், குழம்பு, ரசம் என்று சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க...


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ உருளைகிழங்கு – 1/4 கிலோ
§ நசுக்கிய பூண்டு – 3 பல்
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
கடைசியில் தூவ :
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லிசிறிதளவு
செய்முறை :
முதலில் உருளைகிழங்கினை ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
அடிகணமான அகலமான பனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பின் நசுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கவும்.


பிறகு உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறிவும்.


மிக குறைந்த தீயில் உருளைகிழங்கினை வேகவிடவும். (தட்டு போட்டு முடி வேண்டாம். தண்ணீர் ஊற்ற கூடாது.ஊற்றினால் சுவை மாறுபடும்)


உருளைகிழங்கு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


கவனிக்க:
இதனை செய்ய அகலமான கடாயினை தேர்ந்து எடுக்கவும். இதனால் உருளைகிழங்கு நன்றாக வெந்து, வெளிபுறத்திலும் கிரிஸ்பியாக இருக்கும். அதே போல நாம் பிரட்டிவிடும் நேரத்திலும் உடையாமல் இருக்கும்.


இந்த முறை வறுவலுக்கு தண்ணீர் சேர்க்க கூடாது.

6 comments:

Viji said...

Geetha
Ennaku oru doubt.Thanneer otravillai endral kai eppadi vegum?

GEETHA ACHAL said...

//nnaku oru doubt.Thanneer otravillai endral kai eppadi vegum?//ஆமாங்க விஜி. இதற்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்தால் சுவை மாறுபடும்.

தட்டு போட்டு முடி, மிதமான சூடில் வேக வைத்தால்,காய்கள் வெந்துவிடும்.

Viji said...

naalai thaan seya pogiren geetha.Romba nandree.
naalai unga moor kuzlambum ,intha poriyalum ;-)

ennaku inge padathil ullathu pola mele morugalaga seyya romba naala aasai.seythu parthu solgiren.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் விஜி...பாவம் புள்ளதாச்சி பொன்னு..எங்க வீட்டின் அருகில் இருந்தால் நானே உங்களுக்கு செய்து கொடுத்துவிடுவேன்...இந்த சமயத்தில் தான் விதவிதமாக சாப்பிட ஆசை வரும்...

இது எத்தையாவது மாதம்...நீங்கள் எங்கே இருக்கின்றிங்க...விரும்பினால் சொல்லுங்க..

உங்கள் அன்பு தோழி.

Viji said...

ஹலோ கீதா
நான் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவள் தன.
அறுசுவையில் இருக்கிறேன்.உங்களுக்கு பக்கத்தில் தன இருக்கிறேன்.connecticutil .எப்பொழுது வருகிறீர்கள் என்னகு இது செய்து தருவதற்கு.
என்னகு இது இரண்டாவது பிரசவம்.முதல் பெண் குழந்தை.இன்று தன அவளுக்கு இரண்டாவது பிறந்தநாள்.இப்பொழுது 6 மாதம் ஆகிறது.இன்னமும் வாந்தி,மயக்கம் உள்ளது.உங்க மெயில் id விர்ருபம் இருந்த குடுங்கள்.freeya இருகுர்ப பேசலாம்.உங்க சமையல் குறிப்பு எல்லாமே செய்து சாப்டனும் போல உள்ளது ;-).
சூப்பரா செயறீங்க.

Unknown said...

netru iravu ithuthaan samaithom.arumai.unkalin thelivana kurippukal&photos ellamae enkalukku samayalai easy&tasty aaki vittathu.oru small request.unkalin recipies( kurippil(seimuraiyil) ethanai perukku yendru kurippittal nandraga irukkum.because naangal 10 per irukkuirom, athanalthaan.thk u so much akka!

Related Posts Plugin for WordPress, Blogger...