மேத்தி புலாவ் - Methi pulao / Venthayakeerai sadamமேத்தி புலாவ்(வெந்தயகீரை) மிகவும் அருமையான சிறந்த டயட் புலாவ் என்றே கூறலாம். வெந்தயகீரை உடலிற்கு மிகவும் நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் மற்றும் உடலில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க உதவுகின்றது.
இந்த புலாவிற்கு புதினா, கொத்தமல்லியை நான் சேர்ப்பது இல்லை. அப்படி சேர்த்தால் மேத்தியின் சுவை அவ்வளவாக புலாவில் தெரிவது இல்லை.
அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல இதனை செய்து கொள்ளலாம். இதனை செய்வது மிக சுலபம்.
இந்த புலாவிற்கு எண்ணெயோ அல்லது நெய்யினை அதிகம் சேர்க்க தேவையில்லை.
மேத்தி கொஞ்சம் கசப்பாக இருப்பதால் இத்துடன் தக்காளி அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பதால் சுவையாக இருக்கும். இந்த புலாவுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
சரி…வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ பாஸ்மதி அரிசி – 2 கப்
§ வெந்தயகீரை – 1 கட்டு
§ வெங்காயம் – 1
§ தக்காளி – 2
§ பச்சை மிளகாய் – 2
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§ சீரக தூள் – 1/4 தே.கரண்டி
முதலில் தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1
§ இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது – 1 தே.கரண்டி
கடைசியில் சேர்க்க :
§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி (விரும்பினால்)
§ நெய் – 1 தே.கரண்டி (விரும்பினால்)
செய்முறை :
கீரையினை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை பெரிய துண்டுகளாக நீட்டாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை கீறி கொள்ளவும்.

அரிசியினை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பிரஸர் குக்கரில் முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயகீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் தக்காளி மற்றும் சேர்க்க வேண்டிய தூள் வகைகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் ஊறவைத்த அரிசியினை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
விசில் அடங்கியதும் பாத்திரத்தினை திறந்து அதன் மீது நெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
கவனிக்க:
பிரஸர் குக்கரில் சமைக்கும் பொழுது – சாதம், பிரியாணி, புலாவ் என்று எதுவாத இருந்தாலும் செய்த உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி செய்வதால் சாதம் கெட்டியாக இல்லாமால் உதிரி உதிரியாக நன்றாக இருக்கும்.

10 comments:

Menaga Sathia said...

சத்தான ரெசிபி.செய்துவிட்டு சொல்றேன்பா எப்படி இருந்தது என்று?

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி.//சத்தான ரெசிபி// ஆமாம் மேனகா. மிகவும் சத்தான உணவு. கண்டிப்பாக செய்துவிட்டு சொல்லுங்க.

Anonymous said...

how much water is needed for this recipe? i am archana;s sister in law. she told me abt ur blog. love ur blog.. i am ur student as well :)

GEETHA ACHAL said...

உங்களை இங்கு பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி...ஒரு மாதம் Vacationயில் இருந்ததால் உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை...

1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வைத்தால் சரியாக இருக்கும்...

அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...

Geetha said...

hi.. from this month only i come to know about ur blog..
really superb..
daily without fail i will visit ur blog..
all ur dishes r superb.
ur thanks giving day is very nice.

GEETHA ACHAL said...

ரொம்ப மகிழ்ச்சி கீதா...எப்படி இருக்கின்றிங்க...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...

Unknown said...

It came out well thank u

Jagdeeshwari Hari said...

Hey am falling in love with your Blog. Wish I had known this long back. Now don't have much time. Anyway will surely try few at least. Have even forwarded this link to many friends here.good luck and best wishes for your new recipes.

Unknown said...

i like your blog receipies are superb. i will try in this week.

Anonymous said...

very very useful.we like your blog very much.

Related Posts Plugin for WordPress, Blogger...