கேபேஜ் ப்ரான் ப்ரை( Cabbage Prawn Fry)

கேபேஜினை சாப்பாட்டில் அடிக்கடி சேர்த்து கொள்வது உடலிற்கு மிகவும் நல்லது. அதிலும் டயட்டில் இருப்பவர்கள் இதனை சேர்த்து கொள்வதால் உடல் இளைக்க மிகவும் உதவுகின்றது. காரணம் கேபேஜ் Negative Calorie Vegetable மற்றும் இதில் விட்டமின் சி(Vitamin C) சத்து அதிகம் உள்ளது.


எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமால் இப்படி எதேவது சேர்த்து செய்தால் சாப்பிட ஆசையாக இருக்கும்.


சரி..இதன் செய்முறையினை பார்போம் வாங்க..
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடம்


தேவையான பொருட்கள்:
§ முட்டைகோஸ் – 1
§ எண்ணெய் – 1/2 தே.கரண்டி + 2 தே.கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
ப்ரான் மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
§ பெரிய இரால் – 1/4 கிலோ(சுமார் 15 – 20 இரால்)
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி
§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
செய்முறை :
இரால் சுத்தம் செய்து கொடுத்துள்ள மசாலா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.


முட்டை கோஸினை 2 x 1 இன்ஞ் அளவிற்கு பெரிய பெரிய நீட்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


பெரிய அகலமான பனில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊறவைத்துள்ள இராலினை போட்டு வதக்கவும்.


இரால் நன்றாக வெந்த பிறகு பனில் இருந்து எடுத்துவிடவும்.

அதே பனில் மீதம் உள்ள 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் + உப்பு சேர்த்து வதக்கவும்.


முட்டைகோஸில் உள்ள தண்ணீர் எல்லாம வற்றிய பிறகு இராலினை சேர்த்து கலந்து பரிமாறவும்.

சுவையான கேபேஜ் ப்ரான் ப்ரை ரெடி.

5 comments:

Malini's Signature said...

வலைப்பூக்களில் அழகிய பூக்கள்.... அருமை :-)

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா.

SUFFIX said...

முட்டைக் கோஸ் சலட்டில் விரும்பி சாப்பிடுவேன் ஆனால் சமைத்தது:::)), புதுசா சொல்லி இருக்கிங்க, தங்கமணியிடம் கன்ஸல்ட் பண்ணிட்டு, சமைத்து பார்த்துடுவோம்!!

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ஷஃபிக்ஸ்...சுவையாக வித்தியசமாக இருக்கும்.

Asiya Omar said...

arumai geetha.

Related Posts Plugin for WordPress, Blogger...