ப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)ப்ரைட் ரைஸினை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை பொருத்தமாக பக்க உணவுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பெரும்பாலும் ப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது அஜினிமோட்டோ சேர்த்து தான் செய்வாங்க. ஆனால் அது உடம்பிற்கு அவ்வளவு நல்லது அல்ல.

இந்த செய்முறை படி செய்தாலும் அதே சுவை தான் கிடைக்கும். சரி, வாங்க ப்ரைட் ரைஸுடைய செய்முறையினை பார்ப்போம் வாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் – 15 – 20 நிமிடம்

தேவையான பொருட்கள் :

§ வடித்த ஆறவைத்த சாதம் – 2 கப்

§ முட்டை – 2

§ நறுக்கிய வெங்காயம் – 1

§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி

§ சோயா சாஸ் – 1 தே.கரண்டி

§ வினிகர் – 1/2 தே.கரண்டி

§ மிளகு தூள் – 1/2 தே.கரண்டி

§ பொடியாக நறுக்கிய கராட், பீன்ஸ், கார்ன் – 1/2 கப்

§ உப்புதேவையான அளவு

§ எண்ணெய் – 1 மேஜை கரண்டி

மேலே தூவ :

§ பொடியாக நறுக்கிய வெங்காய தாள் சிறிதளவு

செய்முறை :

முதலில் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதன் பின் இஞ்சி + பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு பொடியாக நறுக்கிய காய்கள் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் முட்டையினை ஊற்றி நன்றாக பிரட்டி முட்டையினை உதிரியாக பொடிமாஸாகி வேகவிடவும்.

அடுத்தாக சோயா சாஸ் + வினிகர் + மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடம் வேகவிடவும்.

கடைசியில் சாதத்தினை இதில் சேர்த்து நன்றாக கலக்கவும். சாதத்தின் மீது வெங்காயதாளினை தூவி பரிமாறவும்.

கவனிக்க :

ஆறவைத்த சாதம் பொலபொலவென ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனி தனியாக இருக்க வேண்டும்.

சாத்த்தினை கடைசியில் கடாயில் சேர்த்து கிளறும் பொழுது அழுத்தமாக கிளறமால் மேலேட்டமாக கிளற வேண்டும்.

அடுப்பினை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். தண்ணீர் ஊற்ற கூடாது. அதே போல தட்டு போட்டு மூடி காய்களை வேகவைக்க வேண்டாம். அப்படி செய்தால் காய்களில் சிறிது தண்ணீர் சேர்த்த்து போலாகிவிடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...