வெந்தயகீரை தர்பூசணி சாலட் - Methi Leaves Watermelon Salad


வெந்தயகீரை உடலிற்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவினை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது.


கொண்டைகடலையில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் நல்ல carbohydrate மற்றும் polyunsaturated fat காணபடுகின்றது. (பொதுவாகவே unsaturated fat என்பது இரண்டு வகைப்படும். ஒன்று monounsaturated fat மற்றொன்று polyunsaturated fat. .இவை இரண்டுமே உடலிற்கு நல்லது. ஆனால் தவிர்க்கவேண்டியது saturated Fat)


தர்பூசணியில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் டயட்டில் இருப்பவர்கள் இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம். (தினமும் சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை)


இந்த சாலடில் நான் இந்த முன்று பொருட்களை சேர்த்து செய்து உள்ளதால் நமக்கு தேவையான பெரும்பாலுமான சத்துகளும் கிடைத்துவிடுகின்றது.


இதில் வெந்தயகீரையில் இருந்து Freshness , கொண்டைகடலையில் இருந்து crunchness , தர்பூசணியில் இருந்து sweetness, எலுமிச்சை சாறில் இருந்து புளிப்பு தன்மை(tart Flavor) கிடைத்துவிடுகின்றது.இதனால் இந்த சாலடின் சுவை அதிகமாக தெரிகின்றது.


எங்கள் வீட்டு தொட்டியில் நான் வளர்ந்த வெந்தயகீரையினை வைத்து செய்த சாலட் இது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சுத்தம் செய்த வெந்தயகீரை – 2 கப்
§ வேகவைத்த கொண்டைகடலை – 1 கப்
§ தர்பூசணி – 1/4 பழம்
கலந்து கொள்ள :
§ ஆலிவ் ஆயில் – 1 தே.கரண்டி
§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
§ உப்பு – சிறிதளவு
§ மிளகு தூள் – 1/4 தே.கரண்டி
செய்முறை :
v ஆலிவ் ஆயில் + எலுமிச்சை சாறு + உப்பு + மிளகுதூள் சேர்த்து ஒரு பவுலில் கலந்து கொள்ளவும்.
v ஒரு பெரிய பவுலில் வெந்தயகீரை + கொண்டைகடலை + கலந்து வைத்துள்ள சாஸ் சேர்த்து கலக்கவும்.

v கடைசியில் தர்பூசணியினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அத்துடன் சேர்த்து கலக்கவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய சாலட் ரெடி.
குறிப்பு :
இதனை 2 -3 மணி நேரம் முன்னரே செய்து ப்ரிஜில் வைத்து பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


தர்பூசணி இல்லையெனில் 2 தே.கரண்டி தேன் சேர்த்து கொள்ளலாம்.

ரோஸ்டட் ஃஎக்பிளான்ட் (Roasted Eggplant/ கத்திரிக்காய்)


நான் ஊரில் இருந்தப்ப...அம்மா செய்யும் எண்ணெய் கத்திரிக்காய் மிகவும் விருப்பம்…ஆனால் இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்த ஊர் கத்திரிக்காய் அதாங்க பெரிசா உருட்டு கட்டை மாதிரி இருக்குமே அது…அது…….வந்ந்ந்ந்த்துதுது….ஆ……பெரிய கத்திரிக்காய்(EGGPLANT)…அதனை கண்டாலே அப்படி ஒரு கோபம் வரும் எனக்கு..இது எல்லாம் கத்திரிகாய் என்று சொல்லி இப்படி கொல்லுறாங்களே….

ஆனாலும் என்ன செய்ய முடியும் சொல்லுங்க….இதனை தான் கத்திரிக்காய் என்று நினைத்து கொண்டு சமைக்க வேண்டும்…(ஏன்னா…நம்மூர் குட்டி கத்திரிகாய் இந்தியன் கடையில் தான் கிடைக்கும்…அதும் விலையினை பார்த்தால் வாங்கவே மனசு இருக்காது…அவ்வளவு அதிகம்…)..அத வாங்குவதற்கு இந்த ஊர்கத்திரிக்காயினையே வாங்கி கொண்டு சமைத்துவிடலாம்…

இந்த பெரிய கத்திரிக்காயினை வைத்து நான் சாம்பார், சட்னி, துவையல், பச்சடி, கலந்த சாதம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்…(நம்மூர் கத்திரிகாய் போல் இதில் விதை அதிகமாக இருக்காது…..விலையும் கம்மி தான்…..)..ஆனால் என்னதான் சொல்லுங்க…எண்ணெய் கத்திரிகாய் விஷயத்தில் மட்டும் நான் எப்பொழுதும் குட்டி கத்திரிகாய் கட்சி தானுங்க…

கத்திரிகாயினை வாங்கும் பொழுது அது பலபலப்பாக(Shining) இருந்தால் இது புது கத்திரிகாய்…அதுவே கொஞ்சம் பலபலப்பு குறைந்தாலும் அது முத்தின கத்திரிகாயாம்…என்று அம்மா சொல்லி இருக்காங்க…

கத்திரிகாயில் அதிக அளவு நார்சத்து உள்ளது…, குறைந்த அளவில் Saturated Fat மற்றும் Cholestrol இதில் உள்ளது…ஆனால் என்ன..கத்திரிக்காயில் இருந்து கிடைக்கும் சக்திகள் பொரும்பாலும் சக்கரையாக மாறிவிடுகின்றது…

கத்திரிகாயினை பலரும் ஒவ்வொரும்விதமாக சமைப்பாங்க…ஒரு முறை இந்த முறையில் பெரிய கத்திரகாய் கிடைத்தால் செய்து பாருங்கள்… சாலடுடன் இந்த ரோஸ்டட் கத்திரிகாயினை சாப்பிட தான் பொருத்தமாக இருக்கும்...(விரும்பினால் இதனுடன் Baked Fish, Chicken கூட சாப்பிடலாம்…)

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

§ பெரிய கத்திரிக்காய் – 1

§ ஆலிவ் ஆயில் – 1 தே.கரண்டி

§ பெப்பர் – 1/2 தே.கரண்டி

§ உப்புதேவையான அளவு

§ புதினாசிறிதளவு (விரும்பினால்)

§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி (விரும்பினால்)

செய்முறை :

v அவனை 425 Fயில் மூற்சுடு செய்யவும். கத்திரிகாயினை 1 இன்ச் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

v வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய் + பெப்பர்+ உப்பு + ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

v இதனை அவனில் வைக்கும் ட்ரேயில் பரப்பி வைக்கவும்.

v மூற்சுடு செய்யபட்ட அவனில் 425 Fயில் 20 – 22 நிமிடங்கள் வைக்கவும். நன்றாக ரோஸ்ட ஆனவுடன் வெளியில் எடுக்கவும்.

v பரிமாறும் பொழுது எலுமிச்சை சாறு + புதினா இலைகள் (விரும்பினால்) சேர்த்து பரிமாறவும். சுவையான ரோஸ்டட் ஃஎக்பிளான்ட் ரெடி.

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் - KFC Style Fried Chickenஎன்ன தான் சொல்லுங்க…KFC சிக்கனுக்கு நிகர் KFC தான்…எப்படி தான் அவ்வளவு சுவையோ தெரியவில்லை…முன்பு எல்லாம் யோசிப்பேன்…எப்படி தான் இவ்வளவு சுவையாக செய்றாங்க…சிக்கனின் மேல்புறத்தில் மட்டும் இல்லாமல் உள்ளேயும் எப்படி சுவையாக இருக்கு என்று…


அதன் பிறகு என்னுடைய தேடுதல் வேட்டையில் நான் கண்டு அறிந்ததினை நீங்களும் செய்து பாருங்கள்..


நான் எப்பொழுதும் சிக்கனை ப்ரை செய்யும் பொழுது மசாலாவினை அப்படியே சிக்கனுடன் சேர்த்து பிரட்டி , அதனை 2 – 3 மணி நேரமாவாது ஊறவைத்து பிறகு பொரித்து எடுப்பேன்…ஆனால் வெளியில் சுவையாகவும் உள்ளே சுப்புனு இருக்கும்….எவ்வளவு நேரம் ஊறினாலும் இப்படி தான் இருக்கின்றது..


ஆனால் இந்த முறையில் சிக்கன் + மசாலா பொருட்கள் + சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைப்பதால் சிக்கனில் எல்லா பொருட்களும் சேர்த்துவிடுகின்றது. அதனால் சிக்கனை சாப்பிடும் பொழுது அதன் சுவையினை நம்மால் கண்டு அறியமுடிகின்றது..


அதே போல மைதா மாவுடன் பிரட்தூள் சேர்த்தால் மிகவும் க்ரிஸ்பியாக இருக்கும்..


உங்கள் விருப்பத்திற்கு எற்றாற் போல காரம், மசாலாவினை சேர்த்து கொள்ளவும்.
சிக்கனை 2 - 3 மணி நேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் 1 மணி நேரம் மிதமான சுடுதண்ணீரில் ஊறவைக்கவும்.(அதற்கு மேல் ஊறவைக்கவேண்டாம்....சிக்கனுக்கு (நமக்கும் தான்...) நல்லது இல்லை...)


வாங்க...நீங்களும் இந்த முறையில் சிக்கனை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்…


சிக்கனை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 – 3 நேரம் (குறைந்தது)
சமைக்க தேவைப்படும் நேரம்: 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சிக்கன் லெக் பிஸ்(Leg Piece) – 4
§ எண்ணெய் - பொரிப்பதற்கு
சிக்கனை ஊறவைக்க :
§ மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
§ இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
§ உப்பு – 3 தே.கரண்டி
§ எலுமிச்சைசாறு - 2 தே.கரண்டி
§ பார்ஸிலி இலை/கொத்தமல்லி இலை – சிறிதளவு (விரும்பினால்)
முட்டை கலவை :
§ முட்டை வெள்ளை கரு – 2
§ மிளகாய் தூள்/ மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
§ உப்பு – 1/4 தே.கரண்டி
மைதா கலவை :
§ மைதா மாவு – 1 கப்
§ பிரட் தூள் – 1/2 கப்
§ உப்பு – 1/2 தே.கரண்டி
செய்முறை :
§ சிக்கனை சுத்தம் செய்து லெக்பீஸுல் கத்தியினை வைத்து சிறிது கீறிவிடவும். (இப்படி கீறுவதால் மசாலா சிக்கன் உள்ளே சென்றுவிடும்)
§ ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கனை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றிவும்.
§ பிறகு சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் அந்த தண்ணீருடன் கரைத்துவிடவும். இதனை அப்படியே குறைந்தது 2 – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
§ முட்டையின் வெள்ளை கரு + மிளகாய் தூள்/மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
§ மைதா மாவு + பிரட் தூள் + உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலந்து வைக்கவும்.
சிக்கன் ஊறி 2 – 3 மணி பிறகு :
§ கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
§ சிக்கனை தண்ணீரில் இருந்த்து எடுத்து அதனை முட்டை கலவையில் தோய்த்து பிறகு அதனை மைதா மாவில் பிரட்டி எடுக்கவும்.

§ பிறகு அதனை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் 6 – 8 நிமிடங்கள் வேகவிட்டு பொரித்து எடுக்கவும்.

§ சுவையான KFC ஸ்டைல் சிக்கன் ரெடி.

எனக்கு கிடைத்த ப்ரெண்ட்ஸ் அவார்ட்..


எனக்கு கிடைத்த இன்னொரு அவார்ட்...
இதனை எனக்கு அளித்தது ஒன்று அல்ல இருவர்...
குறை ஒன்றும் இல்லை "ராஜ்குமார்" அண்ணா மற்றும் "Sashiga" மேனகா.
இவர்கள் இருவருக்கும், என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களுடைய இந்த அவார்டினை பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி.

அன்புடன்,
கீதா ஆச்சல்.

ஒட்ஸ் சுரைக்காய் தோசை - Oats Surakkai Dosai


வாங்கி வந்த சுரைக்காயினை எப்பொழுதும் கூட்டு, பச்சடி என்று சாப்பிட மிகவும் வெறுப்பாக இருக்கவே…. அதனால் நான் செய்த ஒட்ஸ் சுரைக்காய் தோசை…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ ஒட்ஸ் – 1 கப்
§ துறுவிய சுரைக்காய் – 1 கப்
§ தயிர் – 1/4 கப்
§ உப்புதேவையான அளவு
செய்முறை :
v ஒட்ஸ் + துறுவிய சுரைக்காய் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
v மாவு நன்றாக அரைப்பட்டவுடன், அரைத்த மாவு + தயிர் + உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
v தோசை கல்லினை காயவைத்து மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
v இத்துடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
தோசை சுடும் பொழுது எண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. விரும்பினால் எண்ணெய் ஊற்றி சுட்டு கொள்ளலாம்.
மாவினை தோசை மாவு பதத்திற்கு நன்றாக மைய அரைத்து வைக்கவும்.இந்த மாவில் தோசை மிகவும் மெல்லியாதாக வரும்.

வாழைப்பூ தயிர் பச்சடி


பெரும்பாலும் நிறைய வீட்டில் பார்த்து இருக்கின்றேன்…பச்சடி என்றால் பிரியாணி செய்யும் பொழுதுமட்டும் தான் செய்வாங்க… பச்சடியினை பிரியாணிக்கு மட்டும் இல்லாமல், ரொட்டி, சப்பாத்தி, கலந்த சாதம், சாம்பார் சாதம், காரகுழம்பு போன்றவையுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.
எங்கள் வீட்டில் தயிர் பச்சடி என்றால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவோம்…அதிலும் எனக்கு பச்சடி என்றால் மிகவிருப்பம். அதனை மட்டுமே சாப்பிட்டுவேன்…அவ்வளவு பிடிக்கும்…
நான் சின்னபொண்ணாக இருக்கும் பொழுது, நான் காரகுழம்பு, சாம்பார் சாப்பிடும் பொழுது அம்மா, என்னுடைய தட்டின் ஓரத்தில் ஒரு கரண்டி தயிரினை வைத்துவிடுவாங்க… காரமாக இருந்தால் தயிர் சாப்பிட… அதுவே இப்பொழுது வரை தொடர்ந்து வருகின்றது…(இப்பொழுது எல்லாம் எவ்வளவு காரம் இருந்தாலும் சாப்பிட்டுவிடுவேன்….என்பது வேறவிஷயம்….)… சாம்பார் சாதத்துக்கு கூட எனக்கு எதாவது பச்சடி இருந்தால் போதும்…அவ்வளவு பிடிக்கும்…
எப்பொழுதும் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், சுரைக்காய், பூசிணிக்காய் என்று எல்லாம் பச்சடி செய்து போராடித்து விட்டால் இந்த வாழைப்பூ பச்சடியினை செய்து பாருங்கள்…கண்டிப்பாக அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ வாழைப்பூ – 1 கப்
§ தயிர் – 1 கப்
§ கொத்தமல்லிசிறிதளவு
§ உப்புதேவையான அளவு
வாழைப்பூ வேகவைக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
அரைத்து கொள்ள :
§ பச்சை மிளகாய் – 2
§ தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
§ தயிர் – 1 தே.கரண்டி
செய்முறை :
v வாழைப்பூ சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு போட்டு வதக்கி வாழைப்பூ + உப்பு + 1/4 கப் தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
v கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைத்த கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்து வைக்கவும்.
v வேகவைத்த வாழைப்பூ + கொத்தமல்லி + அரைத்த விழுது + தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.
v இப்பொழுது சுவையான வாழைப்பூ தயிர் பச்சடி ரெடி.
குறிப்பு :
இந்த பச்சடியில் வாழைப்பூவினை நன்றாக வதக்கி சேர்க்கவேண்டும்.
இதில் தேங்காய் துறுவல் சேர்ப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். (தேங்காய் விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.)

சில்லி டோஃபு - Chilli Tofu


இந்த சில்லி டோஃபு ,சில்லி பன்னீர் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும். டோஃபுவினை சோயாவின் பாலில் இருந்து தயாரிக்கின்றனர். டோஃபுவில் Omega 3 Fatty Acid இருக்கின்றது.(மீன் சாப்பிடாதவர்கள் இதனை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது).


டோஃபுவில் அதிக அளவில் ப்ரோடின்(Protein) காணப்படுகின்றது. எங்கள் வீட்டில் பன்னீருக்கு பதில் டோஃபுவை தான் உபயோகிப்பேன். எப்பொழுதும் பஜ்ஜி, போண்டா என்று செய்யாமல் இப்படி செய்து சாப்படுவது உடலிற்கு மிகவும் நல்லது…(நம்முடைய பர்ஸுக்கும் தான்..)


தீடீர் விருந்தினருக்கு இதனை செய்து கொடுத்து அசத்தலாம். அவர்களுக்கு ஹெல்தியான உணவு சாப்பிட திருப்தி இருக்கும்…


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ Extra Firm டோஃபு – 1 Packet
§ குடைமிளகாய் – 1
§ வெங்காயதாள் – 2
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
சேர்க்க வேண்டிய சாஸ் வகைகள் :
§ சில்லி சாஸ் – 2 தே.கரண்டி
§ சோயா சாஸ் – 1 தே.கரண்டி
§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 2 தே.கரண்டி
செய்முறை :
v டோஃபுவினை சிறிய க்யூபுகளாக வெட்டி கொள்ளவும். குடைமிளகாயினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயதாளினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v ஒரு அடி அகலமான நாண்ஸ்டிக் பானில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
v பிறகு அதில் டோஃபுவினை போட்டு 5 - 6 நிமிடங்கள் வறுக்கவும். (கவனிக்க : இந்த சமயத்தில் அடுப்பினை Highயில் வைக்கவும். அப்பொழுது தான் வறுத்த மாதிரி இருக்கும்.ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை டோஃபுவினை திருப்பிவிடவும்.)
v டோஃபு நன்றாக வறுபட்டவுடன் அத்துடன் சில்லி சாஸ் + சோயா சாஸ் + உப்பு சேர்த்து மேலும் 4 - 5 நிமிடங்கள் வதக்கவும்.
v அதன்பின், டோஃபுவினை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
v அதே கடாயில் வெட்டி வைத்துள்ள குடைமிளகாயினை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
v குடைமிளகாய் சிறிது வதங்கியபின் வதக்கிவைத்துள்ள டோஃபு + வெங்காயதாள் சேர்த்து கிளறவும்.
v சுவையான எளிதில் செய்ய கூடிய சில்லி டோஃபு ரெடி.

கவனிக்க:
டோஃபுவினை வாங்கும் பொழுது அதனை தண்ணீரில் ஊறவைத்து இருப்பாங்க. தண்ணீரை உபயோகிக்க வேண்டாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...