பேக்டு வாழைப்பூ வடை (Baked vazhaipoo Vadai)
வாழைப்பூவில் அதிக அளவு விட்டமின் ஏ & சி (Vitamin A & C), இரும்புசத்து(Iron) , கல்சியம்(calcium) உள்ளது. நான் எப்பொழுதும் வாழைப்பூவில் பொரியல் ,கூட்டு, வடை என பலவகைகளில் செய்து இருக்கிறேன்.
ஒருமுறை இந்த முறையில் வாழைப்பூ வடை செய்து பார்த்தால் எப்பொழுதும் இந்த வடை தான். இனிமேல் கடாயில் எண்ணெய் வைக்கும் வேலையும் இல்லை.
இந்த வடை எண்ணெயில் பொரிக்கும் வடை போல வெளியில் மொருமொருப்பாகவும் உட்புறம் மிருதுவாக இருக்கும்.
சரி..வாங்க…இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ வாழைப்பூ – 1 சிறியது
§ முழு பச்சை பயிறு – 1 கப்
§ கொள்ளு – 1 கப்
§ காய்ந்த மிளகாய் – 3
§ வெங்காயம் – 1 ( விரும்பினால்)
§ கொத்தமல்லி, கருவேப்பில்லை – சிறிதளவு
§ உப்பு – தேவையான அளவு
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
செய்முறை :
பச்சை பயிறு மற்றும் கொள்ளினை 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
வாழைப்பூவினை சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கருவேப்பில்லையினை வெட்டி வைக்கவும்.

அவனை(Oven) 350 F மூற்சூடு செய்யவும்.
பச்சை பயிறு + கொள்ளூ + காய்ந்த மிளகாய் + வாழைப்பூ சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்த கலவையுடன் வெங்காயம் + கொத்தமல்லி + கருவேப்பில்லை + உப்பு சேர்த்து கலக்கவும்.
அவனில் வைக்கும் ட்ரேயில்(Tray) 1 தே.கரண்டி எண்ணெய் போட்டு தடவிவிடவும்.
இப்பொழுது வடைகளாக தட்டி ட்ரேயில் வைக்கவும். ஒவ்வொரு வடைகள் மீது 1 துளி எண்ணெய் விடவும்.

இதனை மூற்சுடு செய்த அவனில் 10 – 12 நிமிடம் வைக்கவும்.

அதன் பிறகு ட்ரேயினை வெளியில் எடுத்து வடைகளை திருப்பிவிட்டு திரும்பவும் அவனில் 8 – 10 நிமிடம் வைக்கவும்.

இப்பொழுது சுவையான சத்தான வடை ரெடி.

குறிப்பு :
அவனில் வைக்கும் ட்ரேயில் அலுமினியம் ஃபாயில் சுற்றினால் ட்ரேயினை அதிகம் கழுவ வேண்டிய அவசியம் இல்லை. வேலையும் மிச்சம்.


இதே போல கடலைபருப்புலும் வடை செய்யலாம்.

10 comments:

Menaga Sathia said...

ம்ம் சூப்பர்ர்ர் மொரு மொறு வடை.எனக்கும் கொஞ்சம் குடுங்க சாப்பிட..

GEETHA ACHAL said...

என்ன மேகனா உங்களுக்கு இல்லாததா ...வாங்க எங்க வீட்டிக்கு கண்டிபாக சூடாக செய்து தருகிறேன்..

Priya Suresh said...

Wow Geetha, ithu innum supera irruku, kollu, vazhaipoo rendume romba healthy ache..athulayum baked vadai, definitely i'll try out..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும். நன்றி

SITA NATARAJAN said...

WONDERFUL RECIPE. COULD YOU PLS TELL ME WHICH OVEN YOU ARE HAVING. I WANT TO BUY ONE FOR A FAMILY OF 4 MEMBERS. I WANT TO MAKE BREAD COOKIES PIRRA AND ALSO THE LOW CAL BAKING

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சீதா...

நீங்க எந்த ஊரில் இருக்கின்றிங்க...வெளிநாடுகளில் இருந்தால் பெரும்பாலும் வீட்டில் oven இருக்கும்....நான் இங்கு USயில் இருக்கின்றேன்...இங்கு அனைத்து வீடுகளிலுமே oven இருக்கும்...ஆனால் அது மிகவும் பெரியதாகவும் அடிக்கடி அதிகம் உபயோகிப்பதால் current அதிகம் ஆகின்றது...

அதனால் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சிறிய Oven வாங்கி கொள்ளுங்க...Happy cooking...

Anonymous said...

Geetha, thankyou for all the healthy recipes. You have such wonderful mind to share it all.
I dont find kollu in indian stores here. Do you bring it from india. which indian stores(name) do you get it from ? Thanks

GEETHA ACHAL said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி..

கொள்ளு எல்லா இந்தியன் கடைகளிலும் கிடைக்கும்...Horsegram என்று போட்டு இருக்கும்...தேடி பாருங்க...கண்டிப்பாக கிடைக்கும்.

Kanchana Radhakrishnan said...

சூப்பர் வடை.

Asiya Omar said...

பேக்ட் வடை சூப்பர்,ப்ரெசெண்டேஷன் அருமை கீதா.

Related Posts Plugin for WordPress, Blogger...