பார்லி கொள்ளூ அடை(Barley Diet Adai)

பார்லி சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு சத்துகள் நீக்கபடுகின்றது(Lowers Cholestrol Level). இதில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. கோதுமையை விட பார்லியில் 3 மடங்கு அதிக நார்சத்து (Dietary Fiber) இருக்கின்றது. அதனால் பார்லியினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிக நல்லது.


அடுத்தபடியாக, இந்த அடையில் சேர்த்து இருக்கும் மற்றொரு பொருள் கொள்ளூ. இதுவும் உடலிற்கு நல்லது. கொள்ளூ பொருத்தவரை, “உணவே மருந்து, மருந்தே உணவு” (Food is Medicine and Medicine is Food).


இப்படி அனைத்து பொருட்களும் சேர்த்து செய்யும் அடை எவ்வளவு அருமையான டயட் அடை.
சரி..வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் ..


அடை ஊறவைக்க வேண்டிய நேரம் : 3 – 4 நேரம் (குறைந்தது)
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ பார்லி(Barley) – 1 கப்
§ ப்ராவுன் ரைஸ்(Brown Rice) – 1/2 கப்
§ பச்சை பயிறு – 1/2 கப்
§ கொள்ளூ – 1/2 கப்
§ காய்ந்த மிளகாய் – 3
§ எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§ உப்புதேவையான அளவு
தாளித்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ சீரகம் – 1/2 தே.கரண்டி
§ சின்ன வெங்காயம் – 5
§ கருவேப்பில்லை – 5 இலை
§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
செய்முறை :
பார்லி + ப்ரவுன் ரைஸ் + பச்சை பயிறு + கொள்ளினை தனி தனியாக குறைந்த்து 3 – 4 மணி நேரம் ஊறவைத்து அதனை காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளலாம்.


வெங்காயம் + கருவேப்பில்லையினை பொடியாக அரிந்து கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த கலவையில் சேர்க்கவும்.

தோசை கல்லினை காயவைத்து மெல்லிய அடைகளாக சுட்டு எடுக்கவும்.
குறிப்பு :
அடைகளை சுடும் பொழுது மிதமான தீயில் 3 – 4 நிமிடங்கள் வேகவிட்டால் சுவையாக இருக்கும்.
இந்த அடையுடன் காரசட்னி சேர்த்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.

3 comments:

இலா said...

Super Geetha.. i tried this and made onion/tomato chutney... amazing... You go girl...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...onion/tomato chutney உடன் சாப்பிட கண்டிப்பாக சுவையாக இருக்கும்...

செய்துவிட்டு பின்னுட்டம் அளித்து என்னை மேலும் ஊக்கமுட்டுவதற்கு நன்றிகள் பல இலா.

Anonymous said...

thanks geetha rombava nalla iruku na vitula panni pathan.

Related Posts Plugin for WordPress, Blogger...