பிஸி பேளா பாத் (Bisebela Bath - Brown Rice)


நான் பிரவுன் ரைஸில் செய்த பிஸிபோளா பாத்தினை பற்றி இந்த பதிவில் எழுதி உள்ளேன்.


பொதுவாக பிஸி பேளா பாத்திற்கு கடைசியில் நிறைய நெயினை சேர்ப்பார்கள். நான் இதில் 1 தே.கரண்டி நெய் மட்டும் சேர்த்து இருக்கின்றேன். இதன் சுவையும் அப்படியே தான் இருக்கும். இப்படியும் ஒருமுறை செய்து பாருங்கள்.


தேங்காய் துறுவலினை 1 தே.கரண்டி சேர்த்து இருந்தாலும் அதன் சுவையில் மாறுதல் இல்லை. அதற்கு பதிலாக வேர்கடலையினை சேர்த்து இருக்கின்றேன். நீங்கள் நினைக்கலாம்..வேர்கடலையா?..வேர்கடலையில் குறைந்த அளவு சக்கரை தன்மை + அதிக அளவு ப்ரோடின் (protein) + நார்சத்து + கொளஸ்ட்ராலினை குறைக்கவும் உதவுகின்றது. அதனால் தேங்காயினை குறைத்து வேர்கடலையினை சேர்த்து இருக்கின்றேன்.


தேங்காய் , தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் அதிக அளவு Saturated Fat இருக்கின்றது. அதனால் இதனை உணவில் இருந்து தவிர்பது நல்லது. பொதுவாக Fat – saturated, Unsaturated Fat என்று வகைப்படும். அதில் நாம் உட்கொள்ளும் உணவில் Unsaturated Fat (May Helps in Lowering Cholesterol Levels) எடுத்து 
கொள்ளலாம். ஆனால் Saturated Fatயினை உணவில் தவிர்த்துவிட வேண்டும்.


இந்த Fatயினை பற்றி விளக்கமாக வேறு ஒரு பதிவில் கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்து உள்ளேன்.


சரி…வாங்க…இதன் செய்முறையினை பற்றி பார்ப்போம்…வாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ ப்ரெவுன் ரைஸ் – 1 கப்
§ துவரம் பருப்பு – 3/4 கப்
§ சின்ன வெங்காயம் – 10
§ கருவேப்பில்லை – 5 இலை
§ உப்புதேவையான அளவு
§ நெய் – 1 தே.கரண்டி
சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டிய காய்கள் :
§ குடைமிளகாய் – 2 கப் (பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் இருப்பதினை நான் எடுத்து கொண்டேன்.)
§ நூல்கோல் – 1 (நார்சத்து அதிகம் இருக்கின்றது)
இதில் நீங்கள் விரும்பிய காய்களை சேர்த்து கொள்ளலாம். பொதுவாக காரட், கத்திரிகாய் போன்றவையினை இதில் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.


வறுத்து அரைத்து கொள்ள :
§ நல்லெண்ணெய் – 1/2 தே.கரண்டி
§ காய்ந்த மிளகாய் – 5
§ தனியா – 2 தே.கரண்டி
§ பட்டை – 1
§ கிராம்பு - 2
§ கடலை பருப்பு – 2 தே.கரண்டி
§ துவரம் பருப்பு – 2 தே.கரண்டி
§ வேர்கடலை – 2 தே.கரண்டி
§ காய்ந்த தேங்காய் துறுவல் – 1 தே.கரண்டி
§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
கரைத்து கொள்ள :
§ புளிசிறிய எலுமிச்சை பழம் அளவு
§ தண்ணீர் – 1 கப்
தாளிக்க தேவையான பொருட்கள் :
§ நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ வெந்தயம் – 1/4 தே.கரண்டி
§ கடலை பருப்பு – 2 தே.கரண்டி
§ காய்ந்த மிளகாய் - 2
செய்முறை :

ப்ரவுன் ரைஸ் + துவரம் பருப்பு + 5 கப் தண்ணீர் சேர்த்து Pressure Cookers போட்டு 5 – 6 விசில் வரும் வரை வேகவிடவும். புளியினை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.


வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக் எண்ணெயில் போடு வறுத்து கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளிக்கவும்.
அதன் பின் சின்ன வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

பிறகு வெட்டி வைத்துள்ள காய்கள் சேர்த்து தட்டு போட்டு மூடி 5 – 6 நிமிடம் வேகவிடவும்.

காய்கள் பாதி வெந்த பிறகு புளி கரைசலினை சேர்த்து 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.

இப்பொழுது அரைத்த விழுது + தேவையான அளவு உப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து இந்த கலவையில் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

வேகவைத்த ப்ரெவுன் ரைஸினை இந்த கலவையில் சிறிது சிறிது சேர்த்து கட்டிபடாமல் கிளறி 5 நிமிடம் வேகவிடவும் .கடைசியில் நெயினை சேர்த்து கிளறிவிடவும்.

இப்பொழுது சுவையான ப்ரெவுன் ரைஸ் பிஸி பேளா பாத் ரெடி.

கவனிக்க :
ப்ரெவுன் ரைஸ் வேக நேரம் எடுக்கும். அதனால் குறைந்தது 5 – 6 விசில் விடுவது நல்லது.

16 comments:

Menaga Sathia said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கீதா!!.ரெசிபி நல்லாயிருக்குப்பா!!

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்து்க்கள்.. படம் அருமை...

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி அண்ணா...

இளமதி said...

அன்புள்ள சகோதரி!
இன்று இந்த பிஸிபோளா பாத் செய்து சாப்பிட்டோம். சுவையோ சுவை. பிறவுண் ரைஸ் அதற்கு பதிலாக இங்கு கிடைக்கும் Bulgur parboil குறுணையில் செய்திருந்தேன். இந்த குறுணை ஒருவகை கோதுமை அரிசி. டயடில் இருப்பவர்களுக்கு உகந்தது என கேள்விப்பட்டு அரிசிக்குப் பதிலாக சமைப்பதுண்டு. அதில்தான் உங்கள் குறிப்பின்படி செய்திருந்தேன். நல்ல சுவை. மிக்க நன்றி!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி இளமதி.

Bulgurயில் செய்தீங்களா...கண்டிப்பாக சூப்பராக இருக்கும்.
இதனை நானும் உபயோகிப்பேன்..இதில் உப்புமா செய்வேன்..அருமையாக இருக்கும்..

இந்த உணவினை செய்துவிட்டு பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி..நன்றிகள்.

NIDHYA said...

Lovely dish..would like to give a try.1st time here and you have a wonderful collection of recipes. Happy to follow you.

Check me at
http://aaha-oho.blogspot.com/

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நித்யா...

Unknown said...

படிக்கவே சுவையாக இருக்கிறது, இன்று அவசியம் செய்து பார்க்கிறேன் சகோதரி.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பார்ங்க அண்ணா...ரொம்ப நல்லா இருக்கும்...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

Anonymous said...

hi madam, dis is mehala.... i have a doubt.... which is called brown rice? is kerala rice? like big size brown color kerala rice or any other one........ pls clarify....... thank u..........

Geetha6 said...

அருமை...வாழ்த்து்க்கள்.

Asiya Omar said...

arumaiyaaka irukku.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வித்யாசமா நல்லா இருக்கு... செய்து பாக்கலாம்.

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேகலா...இது கொஞ்சம் பெரிய அரிசி மாதிரி தான் இருக்கும்...கேரளா அரிசி மாதிரி தான்..

இது தோல் நீக்காத நம்மூர் அரிசி தான்.....

GEETHA ACHAL said...

நன்றி கீதா..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி எண்ணங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...