வெந்தயகீரை துவையல் - Methileaves Thuvayal


வெந்தயகீரையில் அனைத்து வித சத்துகளும் இருக்கின்றது. வெந்தயகீரையின் சிறப்பினை பல குறிப்புகளில் பார்த்துகொண்டுஇருக்கின்றோம்.

புதினா துவையல், பருப்பு துவையல், கொத்தமல்லி துவையல் என பல வகைகளில் துவையிலினை நாம் வீட்டில் செய்து இருப்போம். கொஞ்சம் வித்தியசாமாக ,வெந்தயகீரை துவையலினை செய்து பாருங்கள். ஒவ்வொரு கீரையினை பொருத்து கசப்பு தன்மை இருக்கும்.

எனக்கு இங்கு கடைகளில் கிடைக்கும் வெந்தயகீரையில் கசப்பே இருக்காது. ஆனால் என்னுடைய வீட்டில் சிறிய தொட்டில் நான் வளர்க்கும் வெந்தயகீரையில் கசப்பு தன்மை சிறிது இருக்கும்.

அவ்வாறு இருக்கும் பொழுது சிறிது தேங்காயினை சேர்த்து கொண்டால கசப்பு தெரியாது.
இந்த துவையலினை 2 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடால வயற்றுக்கு மிகவும் நல்லது.
சரி…வாங்க…இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ வெந்தயகீரை – 1 கட்டு
§ கொத்தமல்லி – 1/2 கட்டு
§ கருவேப்பில்லைசிறிய கொத்து
§ பச்சை மிளகாய்/ காய்ந்த மிளகாய் – 3
§ இஞ்சிசிறிய துண்டு
§ புளிகால் எலுமிச்சை அளவு
§ உப்புதேவையான அளவு
தனியாக வறுக்க வேண்டியவை :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 மேஜை கரண்டி
§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
கடைசியில் தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
v வெந்தயகீரை, கொத்தமல்லி மற்றும் கருவேப்பில்லையினை சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.
v தனியாக வறுக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
v அதன் பின் அதே கடாயில் வெந்தயகீரை + இஞ்சி + பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
v சிறிது நேரம் வதக்கிய பொருட்களை ஆறவைத்து அத்துடன் தனியாக வறுத்த பொருட்கள் + கொத்தமல்லி + கருவேப்பில்லை + புளி + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
v கடாயினை காயவைத்து அதில் கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அதில் அரைத்த விழுதினை சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கவும்.
v இப்பொழுது சுவையான சத்தான வெந்தயகீரை துவையல் ரெடி.
கவனிக்க :
கொத்தமல்லி + கருவேப்பில்லையினை பச்சையாக அரைக்கவும். வதக்க வேண்டாம்.
இந்த துவையிலினை 2 – 3 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.இதனை இட்லி, தோசை, சாப்பத்தி, சாத்தில் கலந்து சாப்பிட ,கலந்த சாதம் என்று எதனுடன் சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும்.
விரும்பினால் சிறிது நேங்காய் சேர்த்து கொள்ளலாம். (கசப்பாக இருக்குமொ என்று நினைப்பவர்கள்…)

7 comments:

ஹர்ஷினி அம்மா said...

நல்ல குறிப்பு கீதா ... எனக்கு வெந்தயகீரையே கிடைக்காது(பிடிக்காது)..... இப்பதான் வெந்தயகீரை முளைச்சுட்டுருக்கு கண்டிப்ப பன்னிபாக்கனும்.

Menaga Sathia said...

ரொம்ப நல்ல குறிப்பு.ஒருநாள் செய்து பார்த்து சொல்றேன் கீதா!!

GEETHA ACHAL said...

ஹர்ஷினி அம்மா எப்படி இருக்கின்றிங்க...//எனக்கு வெந்தயகீரையே கிடைக்காது(பிடிக்காது// ஹா..ஹா..

நானும் சில பல சமயம் எனக்கு எதவது காய் பிடிக்காது என்றால் என்னுடைய ஹஸ்யிடம் இந்த காய் கிடைப்பது இல்லை என்று சும்மா சொல்லிவிடுவேன்...
ஆனால் இப்பொழுது அவர் உஷ்ராகிவிட்டார்...அவரே அந்த காயினை வாங்கி வந்துவிடுகின்றார்.

கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள். செய்வதற்கு முன்னால் கீரையினை பச்சையாக சாப்பிட்டு பாருங்கள். அப்படி பார்த்தால் அதனுடைய கசப்பு தன்மையின் அளவு தெரியும். அதற்கு எற்றாற் போல தேவையானால் தேங்காயினை சேர்த்து கொள்ளலாம்.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

ஹர்ஷினி அம்மா said...

ஹி ஹி ஹி ஆமாம் கீதா எனக்கு கீரை பிடிக்கவே பிடிக்காது... இன்னும் அம்மாவிடம் திட்டுவாங்கிட்டே இருப்பேன் ஆனாலு்ம் இன்னும் எனக்கு இங்கு கீரை கிடைப்பதே இல்லைப்பா...:-)

டவுசர் பாண்டி said...

வணக்கம்மா !! நா டவுசர் பாண்டி , இன்னாடா பேரே ரொம்ப டெரரா கீதே , இன்னு நினைக்காதீங்கோ !! உங்க பதிவு பாத்தேன் , சொம்மா சோக்கா, கீது !! மொதல்ல
போட்டோ எட்து, அப்பால அத பதிவு போடணும் , இது எவ்ளோ கஷ்டம் இன்னு நெனைச்சி ரொம்ப ஆச்சரியமா !! கீது !! இது வேற நீங்க பதிவு போடும் போதுகண்டிப்பா , உங்க வீட்டுல அது தான் சமையலா இருக்கும் , வாழ்த்துக்கள் ,

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி டவுசர் பாண்டி.

//உங்க பதிவு பாத்தேன் , சொம்மா சோக்கா, கீது !! மொதல்ல
போட்டோ எட்து, அப்பால அத பதிவு போடணும் , இது எவ்ளோ கஷ்டம் இன்னு நெனைச்சி ரொம்ப ஆச்சரியமா// மிகவும் நன்றி.

அடிக்கடி அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

//இது வேற நீங்க பதிவு போடும் போதுகண்டிப்பா , உங்க வீட்டுல அது தான் சமையலா இருக்கும் , வாழ்த்துக்கள் // ஆமாம் நான் தினமும் சமைக்கும் சமையலினை தான் போட்டோ எடுத்து போடுகின்றேன்...நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...