தக்காளி ஊறுகாய்
தக்காளி ஊறுகாய் என்றால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிக விருப்பம். இந்த தக்காளி ஊறுகாய் சென்னையில் Grand Sweets என்ற கடையில் கிடைக்கும் ஊறுகாயின் ருசியில் இருக்கும்.
நான் திருமணமான புதிதில் யூஸ்யிற்கு வந்த பொழுது இந்த ஊறுகாயினை 4 பாட்டில் வாங்க வந்தேன். அதன் பிறகு யார் வந்தாலும் இந்த ஊறுகாயினை வாங்கவர சொல்வேன்.
அதன் பிறகு இதனை வீட்டிலேயே எப்படி செய்வது…அதே சுவையினை எப்படி கொண்டு வருவது என்று மூயர்ச்சி செய்து அதில் வெற்றி பெற்றேன்…அதன் பிறகு என்ன… யாரிடமும் இந்த ஊறுகாயினை வாங்கி வர சொல்வது இல்லை…(அதற்கு பதிலாக வேறு பொருட்களை சொல்வது என்பது வேறு விஷயம்….!)
தக்காளியில் அதிக அளவில் விட்டமின் சி உள்ளது.
இந்த ஊறுகாயினை இட்லி, தோசை, கலந்த சாதம், தயிர் சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் என்னுடைய கணவருக்கும் இதனை சாதத்துடன் பிசைந்து அதற்கு அப்பளம் வைத்து சாப்பிட மிகவும் பிடிக்கும்.
சரி..வாங்க…இந்த ஊறுகாயினை எப்படி செய்வது என்பதினை பார்ப்போம்..வாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 45 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ தக்காளி – 1/2 கிலோ
§ நல்லெண்ணெய் – 1 கப்
§ பூண்டு – 10 பல்
§ புளிஎலுமிச்சை அளவு
§ மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
கடைசியில் தாளிக்க :
§ நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ கருவேப்பில்லை – 10 இலை
செய்முறை :
v தக்காளியினை கழுவி தண்ணிர் இல்லாமல் துடைத்துவைத்து கொள்ளவும். பூண்டினை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.(மிகவும் மைய அரைக்க கூடாது). புளியினை பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்.
v ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியினை போட்டு தட்டு மூடிவிடவும்.

v 5 நிமிடத்திற்கு ஒரு முறை தக்காளியினை திருப்பிவிட்டு நன்றாக வேகவிடவும்.
v நன்றாக வெந்தபிறகு அதனை கரண்டி அல்லது மத்துவைத்து மசித்துவிடவும்.

v அதன்பிறகு பூண்டு + புளி +மிளகாய் தூள் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடிவேகவிடவும்.

v எண்ணெய் பிரிந்து வரும் வரை சிறிய தீயில் வதக்கவும்.
v எண்ணெய் பிரிந்து வந்த பிறகு கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அதில் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.

v இப்பொழுது சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி.
கவனிக்க :
தக்காளியினை அடிக்கடி கரண்டியினை வைத்து நன்றாக மசித்துவிடவும்.
இந்த ஊறுகாய் 10 நாள் வரை வெளியில் வைத்தாலும் கெடாமல் இருக்கும். அதன் பிறகு இதனை ப்ரிஜில் வைத்து 1 மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

20 comments:

ஹர்ஷினி அம்மா - said...

தக்காளி தொக்கு தெரியும் ஆனா தக்காளி ஊருகாய் இப்பதான் தெரியும்... பார்த்தாலே சுவையாக இருக்கும்ன்னு தெரியுதே.:-)

Mrs.Menagasathia said...

உங்க தக்காளி ஊறுகாய் வித்தியாசமா இருக்கு.தக்காளி இருக்கு உடனே செய்திட வேண்டியது தான்.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா.தக்காளி ஊறுகாய் செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி மேனகா.கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும்.

Thamarai selvi said...

கீதா நான் ரொம்ப நாளா தேடினது,இப்போதான் என் கண்ணுக்கு தெரியுதுபோல..தேங்ஸ் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்..

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி தாமரை செல்வி.அடிக்கடி கண்டிப்பாக இந்த பக்கம் வர வேண்டும் என அன்புடன் உங்களை கேட்டு கொள்கிறேன்.

// நான் ரொம்ப நாளா தேடினது,இப்போதான் என் கண்ணுக்கு தெரியுதுபோல// மிகவும் சந்தோசம் பா...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

Mrs.Menagasathia said...

இன்னிக்கு இந்த தக்காளி ஊறுகாய் செய்தேன்.டாப் டக்கர்!!ரொம்ப சூப்பராயிருந்தது கீதா,நன்றி உங்களுக்கு..

கீதா ஆச்சல் said...

//டாப் டக்கர்!// மிகவும் நன்றி மேனகா.

என்னை தவறாமல் உற்சாகபடுத்தி ஊக்கம் அளிப்பதற்கு நன்றி.

sarusriraj said...

காலைல தக்காளி ஊறுகாய் செய்தேன் , சூப்பரா இருந்தது.

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா..

ramyavenkat said...

hi i tried this tomato pickle.very nice.thanks alot....

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ரம்யா.

Viji said...

geetha
ennakum grand sweets pickle,ready to eat mix ellam uyir.unga samyal kuripu ellame seyanum pola aasaya iruku.thanks.


neenga ennaku innoru pathivula reply panave illa ;-(

Geetha Achal said...

விஜி...சாரிபா...கொஞ்சம் பிஸியாக இப்பொழுது இருக்கிறோம்..இந்த வாரம் வீட்டில் ஒரு விசேஷம்..அதனால் பதில் எழுதமுடியவில்லை..

என்னுடைய மெயில் ஐடி...geethaacahl@gmail.com.

மேலேயே என்னை தெடர்பு கொள்ள விரும்பினால்..என்று என்னுடைய முகவரியினை எழுதி இருக்கின்றேன்..பாருங்கள்...

எனக்கு மெயில் அனுப்புங்க...கண்டிப்பாக பேசலாம். நன்றி.

Alagar jayakodi said...

தக்காளி ஊறுகாய் டாப் ....

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அழகர் ஜெயகொடி.

Anonymous said...

manjal thoolludan perungayammum serthu podalam nanraga irukkum..

Anonymous said...

geetha :clear description.. no need for video clippings.. very nice geetha achal akka

GEETHA ACHAL said...

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அனானி..

Arun Kumar Arun said...

hi geetha mam,
i m arun...i love to cook and serve to my family... they loved this tomato pickle which i prepared today... thanks to made smile on my family members face... thank you..

Related Posts Plugin for WordPress, Blogger...