கோதுமை ரவா பூசிணிக்காய் அடை - Wheat Rava Pumpkin Adai


பூசிணிக்காய் - அதிக அளவு விட்டமின் சத்துகள் காணப்படுகின்றது. அதே போல உடல் குறைக்க விரும்புபவர்கள் இதனை சாப்பிடால் உடனே பலனை காணலாம். காரணம் இதில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber) மற்றும் குறைந்த அளவு Calorie தான் உள்ளது.


உலர்ந்த சருமம்(Dry Skin) உள்ளவர்கள் இதனை அரைத்து முகத்திற்கு பூசினால் சருமம் மிருதுவாக பொலிவாக இருக்கும்.


இவ்வளவு சத்துகள் உள்ள பூசிணிக்காயினை வைத்து அடை செய்தால் எவ்வளவு சத்துகள் அந்த அடையில் இருக்கும்.
சரி..வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..


சமைக்க தேவைபடும் நேரம் : 20 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ கோதுமை ரவை – 1 கப்
§ கோதுமை மாவு – 1/4 கப்
§ வெள்ளை பூசிணிக்காய் துறுவியது – 1 கப்
§ உப்புதேவையான அளவு
§ எண்ணெய்சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ சீரகம் – 1/2 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
§ கருவேப்பில்லை – 5 இலை
§ பச்சை மிளகாய் – 3
§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
செய்முறை :
v கருவேப்பில்லை + பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v கோதுமை ரவையினை கடாயில் போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v வறுத்த கோதுமை ரவை + கோதுமை மாவு + வெள்ளை பூசிணிக்காய் துறுவல் + தாளித்த பொருட்கள் + தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
v தோசை கல்லினை காயவைத்து மெல்லிய அடைகளாக ஊற்றவும்.
v அடைகளை சுற்றி 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சிறிய தீயில் 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு அடுத்த பக்கம் திருப்பிபோட்டு 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான கோதுமை ரவை பூசிணிக்காய் அடை ரெடி.

v இதனுடன் தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
கோதுமை ரவையிற்கு பதிலாக Ordinary ரவையினை உபயோகிக்கலாம்.
இந்த அடையினை சிறிய தீயில் வேகவைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

1 comments:

Priya Purush said...

Geetha, I made this dosai for breakfast today. This is the first recipe i tried from your blog. I liked the dosa very much, very different from the dosas i had tasted till now, but my hubby told it smells of Poosinikai. So funny, Poosinikai dosai le poosinkai smell varama vera enna varum. Thanks for the recipe

Related Posts Plugin for WordPress, Blogger...