முள்ளங்கி துவையல்


முள்ளங்கியினை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது என்னுடைய தோழி திருமதி. மேனகா அவர்கள் எனக்கு சொல்லி தந்தது இந்த முள்ளங்கி துவையல். இது நாள் வரை முள்ளங்கியில், நான் துவையல் செய்தது இல்லை. இந்த துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.

முள்ளங்கியில் விட்டமின் சி மற்றும் இதில் நார்ச்சத்துகள் இருக்கின்றது முக்கியமாக ஃபோலிக் அசிட் (Folic Acid) அதிக அளவில் காணப்படுகின்றது. அதே போல முள்ளங்கி மட்டும் இல்லாமல், இதனுடைய இலைகளும் அதே அளவு சத்துகள் இருக்கின்றது.(அதனால்..இனிமேல் இலை பகுதியினை தூக்கி எறிய வேண்டாமே!!!!!). முள்ளங்கியினை சாப்பிடுவதால் இருமலில் இருந்து சீறுநிரக கல் வரை கட்டுபடுத்த வழிவகுக்கின்றது.

அதனால் இதனை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். முக்கியமாக 1 கப் முள்ளங்கியில் சுமார் 15 – 20 calories தான் இருக்கின்றது. (It is Low calorie vegetable and Low in cholesterol )

சரி…வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்

தேவையான பொருட்கள் :

§ முள்ளங்கி – 1/2 கிலோ

§ உப்புதேவையான அளவு

§ எண்ணெய் – 1 தே.கரண்டி

வறுக்க வேண்டிய பொருட்கள் :

§ எண்ணெய் – 1 தே.கரண்டி

§ கடுகு – 1/4 தே.கரண்டி

§ கடலை பருப்பு – 2 தே.கரண்டி

§ உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி

§ காய்ந்த மிளகாய் - 3

§ கருவேப்பில்லை – 5 இலை

§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

செய்முறை :

v முள்ளங்கியினை தோல் சீவி காரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.

v கடாயில் எண்ணெய் ஊற்றி துறுவிய முள்ளங்கியினை போட்டு தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

v வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

v வதக்கிய முள்ளங்கி + வறுத்த பொருட்கள் + உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான முள்ளங்கி துவையல் ரெடி.

கவனிக்க:

முள்ளங்கியில் இருந்து தண்ணீர் சுத்தமாக வற்றிவிட வேண்டும்.அப்பொழுது தான் துவையல் சுவையாக இருக்கும்.

சிலர் முள்ளங்கியினை தண்ணீர் பிழிந்து வதக்கி செய்வார்கள்.

2 comments:

செந்தழல் ரவி said...

முள்ளங்கி வாயுன்னு சொல்றாங்களே ?

கீதா ஆச்சல் said...

முள்ளங்கி சாப்பிடுவதால் கண்டிப்பாக வாயு தொல்லயினை குறைக்க
தான் உதவுகின்றது.
முள்ளங்கியினை பச்சையாக உப்பு + மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் சட்டென்று வாயுதொல்லை
காணாமல் போய்விடும்.
முள்ளங்கியினை பகல் பொழுதிகளில் சாப்பிடுவது தான் நல்லது..காரணம் அதில் நார்சத்து
அதிக அளவில் இருப்பது தான்.
முள்ளங்கியினை வெறுமனே சமைத்தால் கண்டிப்பாக வாயு தொல்லை இருக்காது.
முள்ளங்கியுடன் மற்ற காய்கள் சேர்த்து சமைத்தால் குறைந்த அளவில் உள்ள carbhohyrdrates
எல்லாம் அதிகமாகிவிடும். அப்பொழுது வேண்டுமானால் மற்ற காய்களினால் வாயு தொல்லை வரலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...