ஒட்ஸ் அடை (Oats Adai)


இந்த ஒட்ஸ் அடை டயட்டில் இருக்கின்றவர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


பலரும் ஒட்ஸ் ஒரு வகை தானியம் என்று தெரியாமல் இருக்கின்றனர். ஒட்ஸும் கோதுமை போன்ற ஒரு வகை தானியம் தான்.


ஒட்ஸுனை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலினை(Cholesterol) குறைக்க உதவுகின்றது. இதிலும் அதிக அளவு நார்சத்து காணப்படுகின்றது.
நாம் சூப் செய்யும் பொழுது சிறிது ஒட்ஸுனை சேர்த்து வேகவைத்தால் சூப் திக்காக இருக்கும். (Instead of Corn Flour).


சரி..வாங்க…ஒட்ஸ் அடையினை எப்படி செய்வது என்று பார்ப்போம்…


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ ஒட்ஸ் – 2 கப்
§ கோதுமை மாவு – 1/4 கப்
§ காய்ந்த மிளகாய் - 2
§ உப்புதேவையான அளவு
§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
§ எண்ணெய்சிறிதளவு
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 தே.கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள் :
§ எண்ணெய் – 1/2 தே.கரண்டி
§ வடகம் – 1/2 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)
§ கருவேப்பில்லை – 5 இலை
§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
§ இஞ்சிசிறிய துண்டு
செய்முறை :
v ஒட்ஸினை வெறுமனே கடாயில் போட்டு 2 நிமிடங்கள் வறுத்து எடுத்து கொண்டு ஒன்று பாதியுமாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் எல்லாம சேர்த்து தாளித்து வெங்காயத்தினை போட்டு வதக்கி கொள்ளவும்.

v உடைத்த ஒட்ஸ் + தாளித்த பொருட்கள் + கோதுமை மாவு + கொத்தமல்லி + எலுமிச்சை சாறு + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
v கல்லினை காயவைத்து சிறிய அடைகளாக ஊற்றி குறைந்த தீயில் சுட்டு எடுக்கவும். சுவையான ஒட்ஸ் அடை ரெடி.

v இத்துடன் எதவாது ஒரு சட்னி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க :
இந்த அடைக்கு அதிக அளவு எண்ணெய் ஊற்றி சுதேவையில்லை.இந்த அடையில் நான் வடகத்தினை சேர்த்து இருக்கிறேன். வடகம் இல்லை என்றால் சீரகம், வெந்தயம், கடுகு என விருப்பம் போல சேர்த்து தாளித்து கொள்ளலாம்.
இதே போல வெறும் ஒட்ஸ் + கோதுமை மாவு + உப்பு சேர்த்து தோசைகளாக சுட்டும் எடுக்கலாம்.

11 comments:

Menaga Sathia said...

அடையில் வடகம் சேர்த்து செய்வது புதுசா இருக்கு.நிச்சயம் சுவையாக தானிருக்கும்.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

பொன் மாலை பொழுது said...

மேனகா மட்டும்தான் என்று நினைத்தேன். நான் அம்பேல். மேனகா அவர்களுக்கு எழுதின
எல்லா கமெண்ட்ஸ் களும் உங்களுக்கும் பொருந்தும் போல. உங்கள் Blog க்கும் மிகச்சிறப்பாகவும் அழகாகவும் உள்ளது.
அது சரி, நீங்களும் மேனகாவும் ஏதாவது கங்கணம் கட்டிக்கொண்டு அள்ளி விடுகிறீர்களா ?
நாங்கள் எல்லாம் கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரிகள் தாய்மார்களே!
"சோறு தின்னு நாளாச்சி,நல்ல சோறு தின்னு நாளாச்சி " என பாடும் கூட்டம்.
ஸ்லைடு ஷோ பிரமாதமான ஐடியா.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி மாணிக்கம்.

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்..

Unknown said...

I made this Adai today. It came out really well. Thanks for sharing such a great diet food. Keep on Posting :-)))

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சரஸ்வதி. மிகவும் மகிழ்ச்சி.

Anonymous said...

very innovative recipies, i came to your blog from arusuvai....most of the recipies r very healthy and also delicious..very useful for the people in diet.....

aaa said...

ur blog is very interesting and useful.i did most of the recepies in ur blog.all are in very good taste and healthy.thanks a lot -Logeswari

Anonymous said...

Thanks geetha for tasty recipes

Unknown said...

oru cup enpathu entha alavu athanai gram il koorinaal nanraha irukkum

Unknown said...

oru cup enpathu entha alvu ulla cup athanai gram il koorinaal nandraha irukkum

Related Posts Plugin for WordPress, Blogger...