மஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ( Mushroom Barley Risotto)ரிஸோட்டா என்பது இத்தாலியர்களின் விரும்பமான அரிசி உணவு வகை. இத்தாலியில் கிடைக்கும் அதிக கஞ்சி தன்மை உள்ள அரிசியில் செய்வது தான் இந்த ரிஸோட்டா. அதிலும் மஷ்ரூம் ரிஸோட்டா மிக பிரபலம்.

அவர்களின் செய்முறையில் முதலில் 1 கப் அரிசியினை 1 தே.கரண்டி பட்டர் சேர்த்து வறுத்து கொண்டு அத்துடன் wine சேர்த்து வேகவைத்து அத்துடன் எதாவது காய்கள்/ சிக்கன் சேர்த்து சமைத்து உண்பார்கள். இதனை சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

அதே மாதிரி நம்முடைய ஸ்டைலில் நான் இந்த பார்லி ரிஸோட்டாவினை செய்தேன். சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்கண்டிப்பாக சுவையாக இருக்கும்….

இதற்கு நான் பார்லியினை கொரகொரவென மிக்ஸியில் அரைத்து கொண்டேன். நான் Wine/ chicken brothயிற்கு பதிலாக தண்ணீரினை சேர்த்து இருக்கின்றேன்.. chicken broth/vegetable brothயில் அதிக அளவு சோடியம் இருக்கின்றதால் அதனை உபயோகிப்பது அவ்வளவு நல்லது இல்லை. (வேண்டுமானால் சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதனை வேகவைத்தால் – வீட்டிலேயே சுலபமாக chicken broth தயார்- இந்த செய்முறையினை poaching என்று கூறுப்பிடுவார்கள். இந்த வகையில் சமைக்கும் சிக்கனை சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.)

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ பார்லி – 1 கப்
§ மஷ்ரூம் – 1 கப்
§ உப்புதேவையான அளவு
§ பட்டர் – 1 தே.கரண்டி
செய்முறை :
v பார்லியினை சிறிது கொர கொரவென மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
v மஷ்ரூமை சிறிதாக வெட்டி கொள்ளவும்.
v முதலில் பட்டரினை போட்டு மஷ்ரூமை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
v அத்துடன் பார்லியினை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து 25 – 30 நிமிடங்கள் வேகவிடவும். (பார்லி வேக கொஞ்சம் நேரம் அதிகமாக எடுக்கும்.)
v சுவையான மஷ்ரூம் பார்லி ரிஸோட்டா ரெடி.

4 comments:

Menaga Sathia said...

புது ரெசிபியா இருக்கு,நல்லாயிருக்கு கீதா!!

ஹர்ஷினி அம்மா said...

இத்தாலியன் சமையல் நல்லா இருக்கு கீதா... எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சியை தமிழில் பார்த்த மாதிரி இருக்கு. :-)

கீதா மெயில் அனுப்பினேன் கிடைத்ததா!!!!

GEETHA ACHAL said...

ஆமாம்..மேனகா..இது பிரபலமான இத்தாலியன் உணவு. ஒரு முறை இதனை சாப்பிட்டால் அதன் சுவை நாவிலேயே இருக்கும்...அதிலும் இத்தாலியன் சமையலுனா சும்மாவா...

GEETHA ACHAL said...

//எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சியை தமிழில் பார்த்த மாதிரி இருக்கு.// மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா.

இப்படி உங்களை போன்றோர்கள் என்னை ஊக்கபடுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

உங்கள் மெயில் கிடைத்து. டைம் கிடைக்கும் பொழுது போன் பேசுங்கள்.

நானும் Food Networkயில் Everyday Italian நிகழ்ச்சியினை மிகவும் விரும்பி பார்ப்பேன்..இப்பொழுது எல்லாம் அக்ஷ்தாவினை வைத்து கொண்டு தான் பார்க்க முடிவதில்லை...வாலு அதிகமாகிவிட்டது....

Related Posts Plugin for WordPress, Blogger...