வாழைக்காய் வறுவல்

எங்கள் வீட்டில் அம்மா அடிக்கடி செய்வது இந்த வாழைக்காய் வறுவலினை தான். அதுவும் அம்மா சமையலில் எனக்கு பிடித்ததில் இதுவும் ஒன்று. அம்மா எனக்காக காரகுழம்பு + வாழைக்காய் வறுவல் + பொட்டு கடலை துவையல் செய்து கொடுப்பாங்க. இதனை சாப்பிடால் அப்படி ஒரு திருப்தி எனக்கு. எனோ அதனை சாப்பிவதில் எதே கல்யாணவீட்டில் சாப்பிட மாதிரி ஒரு சந்தோசம்.


அது ஒரு காலம். இப்பொழுது எல்லாம் என்னத்த சொல்ல…நம்மூர் காய் மாதிரியா இங்கே இருக்கு..வாழைக்காயுக்கு எல்லாம் அரை மணி நேரம் கார் ஓட்டி கொண்டு போய் வாங்கி வர வேண்டி இருக்கு…இதுவே நம்மூர் என்றால் பக்கத்து அண்ணாச்சி கடை இருக்கும்.. அதிலே பேரம் பேசி வாங்கும் சுகமே தனி தான் போங்க…


பலரும் பலவிதமாக வாழைக்காயினை சமைப்பாங்க…ஒவ்வொருத்தருக்கும் ஒரு கைபக்குவம். வாழைக்காயில் நிறைய நார்சத்து , விட்டமின்கள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பது மிக நல்லது.


இந்த செய்முறையில் முதலில் வாழைக்காயினை தோலுடன் சேர்த்து தண்ணீரில் வேகவைத்து கொள்ள வேண்டும். பிறகு அதனை தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்த மசாலாவினை இதில் பிரட்டி தோசைகல்லில் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். செய்வது சுலபமாக இருந்தாலும் சுவை அதிகம்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ வாழைக்காய் – 2
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ கடுகு – 1/2 தே.கரண்டி
§ கருவேப்பில்லை – 5 இலை
அரைத்து கொள்ள :
§ சின்ன வெங்காயம் – 5
§ பூண்டு தோலுடன் – 4 பல்
§ மிளகு – 1/2 தே.கரண்டி
§ சீரகம் – 1/2 தே.கரண்டி
செய்முறை :
v தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு வாழைக்காயினை தோலுடன் போட்டு 5 – 6 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.( வாழைக்காய் தோலில் பிளவு எற்படும் வரை)
v சிறிது நேரம் ஆறியபிறகு தோலினை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
v அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
v வாழைக்காய் துண்டுகள் + அரைத்த கலவை + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
v தோசைகல்/ அகலமான கடாயினை காயவைத்து எண்ணெய் ஊற்றி கடுகு + கருவேப்பில்லை போட்டு தாளித்து இந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வறுக்கவும்.

v சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.

கவனிக்க:
தோசைகல்லில் வாழைக்காய் துண்டுகளை போடும் பொழுது சிறிது இடைவெளிவிட்டு போடவும்(அதவாது மீன் வறுப்பது போல..). அப்பொழுது தான் அனைத்து பக்கமும் நன்றாக வறுபடும்.


வாழைக்காயினை வேகவைக்க நேரம் இல்லை என்றால் பரவாயில்லை. அரைத்த கலவையினை வாழைக்காயில் போட்டு பிரட்டி அதனை தோசைகல்லில் போட்டு அதனை தட்டு போட்டு மூடி சிறிய தீயில் வேகவைக்கவும். வாழைக்காய் வெந்த பிறகு தட்டினை எடுத்துவிட்டு 2 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
வேண்டுமானால் வெங்காயத்தினை சேர்க்காமலும் செய்யலாம்.

4 comments:

Menaga Sathia said...

//அது ஒரு காலம். இப்பொழுது எல்லாம் என்னத்த சொல்ல…நம்மூர் காய் மாதிரியா இங்கே இருக்கு..வாழைக்காயுக்கு எல்லாம் அரை மணி நேரம் கார் ஓட்டி கொண்டு போய் வாங்கி வர வேண்டி இருக்கு…இதுவே நம்மூர் என்றால் பக்கத்து அண்ணாச்சி கடை இருக்கும்.. அதிலே பேரம் பேசி வாங்கும் சுகமே தனி தான் போங்க…//
நல்லா சொன்னிங்க.
வறுவலும் நல்லாயிருக்கு கீதா!!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா. செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். அதிலும் இந்த ஊரில் கிடைக்கும் வாழைக்காய் பதிலாக நம்மூர் வாழையில் சுவையோ சுவை.

Anonymous said...

சமைக்கும் முறையைப் பார்த்தாலே நாவில் தேன் ஊறுகிறது. வாழைக்கயை இந்த முறையில் சமைக்க கற்றுக் கொடுத்ததற்கு நன்றி.

Mrs. shirdi.saidasan

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி திருமதி.shirdi.saidasan.

கண்டிப்பாக செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
உங்களுடைய வலைபகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...