ஒட்ஸ் கொழுக்கட்டை - Oats Kozhukattai


ஒட்ஸினை வைத்து கொண்டு எப்பொழுதும் பால், தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து சாப்பிட போர் அடித்து விட்டது. ஆனாலும் என்ன செய்ய!..... எப்படியாவது அரிசியினை குறைந்து இப்படி ஒட்ஸ், பார்லி என்று சேர்த்து கொண்டால் உடல் எடை குறையுமே என்ற நப்பாசை தான்..(ஆனால் இப்படி டயட்டிங் இருப்பதால் உடல் எடை சிறிது குறைகின்றது என்பது நான் கண்ட உண்மை…)


ஆனாலும் எவ்வளவு நாள் தான் இப்படியே சாப்பிடுவது. ஒரு நாள் கொழுக்கட்டை சாப்பிட ஆசை வந்துவிட்டது... அந்த Temptation கூட இல்லாமல் எப்படி இருக்கும் சொல்லுங்க!!!!!..அதுவும் நாம டயட்டில் இருக்கும் பொழுது தான் எதே பல வருடம் சோறே பார்க்காத மாதிரி அப்படி ஒரு அலையா அலைவோம்.


சரி, இந்த ஒட்ஸினை வைத்து இந்த அரிசி மாவினை வைத்து கொழுக்கட்டை செய்வது போல கொழுகட்டைகள செய்து பார்க்கலாம் என்று நான் செய்த முயர்ச்சி. எதிர்பார்த்தற்கு அதிகாமாகவே மிகவும் சுவையாக ருசியாக இருந்தது.


நான் செய்து பார்த்த கொழுகட்டைகளை நீங்கள் செய்து பாருங்கள். கண்டிப்பாக அனைவரும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.
இதற்கு நான் உபயோகித்தது Old – Fashioned Oats.


சமைக்க தேவையான நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ ஒட்ஸ் – 2 கப்
§ உப்புதேவையான அளவு
வதக்க வேண்டிய பொருட்கள் :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ சின்ன வெங்காயம் – 5
§ பச்சை மிளகாய் – 2
§ கருவேப்பில்லை – 5 இலை
செய்முறை:

v ஒட்ஸினை வெறுமனே கடாயில் போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பில்லையினை பொடியாக வெட்டி வைக்கவும்.
v சிறிது நேரம் ஆறவைத்து 1 கப் ஒட்ஸினை மட்டும் தனியா எடுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். (மற்ற 1 கப் ஒட்ஸினை தனியா அப்படியே வைத்து கொள்ளவும்.அதனை பொடிக்க கூடாது. அப்பொழுது தான் கொழுகட்டை சாப்பிடும் பொழுது சுவையாக ஒட்ஸ் இருக்கும்.)
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

v வதக்கிய பொருட்கள் + ஒட்ஸ் (1 கப் பொடித்த ஒட்ஸ் + 1 கப் பொடிக்காத ஒட்ஸ்) + உப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பத்த்திற்கு பிசைந்து கொள்ளவும்.
v இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருண்டை கொழுக்கட்டை பிடித்து கொள்ளவும்.

v பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி இட்லி பானையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.

v இப்பொழுது சுவையான ஒட்ஸ் கொழுக்கட்டை ரெடி. இதனை அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும். விரும்பினால் இத்துடன் தேங்காய் சட்னி, கார சட்னி என்று சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
கொழுக்கட்டைக்கு மாவு கலக்கும் பொழுது கெட்டியாக இருக்க வேண்டும். (சாப்பத்தி மாவு பதத்திற்கு குறைவாக தண்ணீர் இருக்க வேண்டும் )
கொடுத்துள்ள அளவு தண்ணீர் போதவில்லை என்றால் 2 – 3 மேஜை. கரண்டி தண்ணீர் சேர்த்து கொண்டு பிசைந்து கொள்ளவும்.


கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கும் பொழுது தனி தனியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைக்கவும்.
கொழுக்கட்டைகளை இட்லியினை வேகவைப்பது போல இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும்.
விரும்பினால் இத்துடன் தேங்காயினை துறுவலினை சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

12 comments:

Menaga Sathia said...

உங்களுக்கு விருது குடுத்திருக்கேன் கீதா,ஏத்துக்குங்க
http://sashiga.blogspot.com/2009/07/blog-post_19.html

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா!!!!

Ammu said...

Very Nice blog
such a good blog too

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அம்மு...அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

சாருஸ்ரீராஜ் said...

கீதா இன்னைக்கு ஈவ்னிங் ஒட்ஸ் கொலுக்கட்டை செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது , பசங்க ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க , காலைல சென்னா மசாலா செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா...என்னுடைய குறிப்புகளை செய்து பார்த்துவிட்டு மேலும் என்னை ஊக்கம்படுவதற்கு நன்றிகள் அக்கா.

சென்னா மசாலாவும் செய்தீங்க...குழந்தைகள் விரும்பி சாப்பிட்டாங்க என்பதில் மிகவும் சந்தோசம்.நன்றி

இளமதி said...

சகோதரி கீதா! முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்!!
உங்கள் வலைத்தளம் தற்போது 2 வாரத்திற்கு முன்தான் பார்த்தேன். அழகாகவும் நல்ல பல குறிப்புகளோடும் இருக்கிறது.
சென்றவாரம் இந்த ஓட்ஸ் கொழுக்கட்டை செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. வீட்டிலும் அனைவரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். மிக்க நன்றி!

இளமதி said...

சகோதரி கீதா!
முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! 2 வாரத்திற்கு முன்புதான் உங்களின் இந்த இணையத்தளத்தினைப் பார்த்தேன். அழகாகவும் பயனுள்ள பல குறிப்புகளையும் தாங்கி உள்ளது மகிழ்வைத்தருகிறது.
சென்ற வாரம் இந்த ஓட்ஸ் கொழுக்கட்டையினை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வீட்டிலும் அனைவரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். குறிப்பினைதந்தமைக்கு மிக்க நன்றி!

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி இளமதி..

உங்கள் பெயர் அழகாக நன்றாக இருக்கின்றது.

கண்டிப்பாக அடிக்கடி இனிமேல் இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

Dershana said...

arumayana kurippu, geetha. ithu intha varame nan seyya pokiren!

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும் தர்ஷினி..நன்றி

reka said...

i am going to try this recipe today.i have already cooked many recipes from your blog.its really appreciable.thanks geetha.

Related Posts Plugin for WordPress, Blogger...