வாழைப்பூ தயிர் பச்சடி


பெரும்பாலும் நிறைய வீட்டில் பார்த்து இருக்கின்றேன்…பச்சடி என்றால் பிரியாணி செய்யும் பொழுதுமட்டும் தான் செய்வாங்க… பச்சடியினை பிரியாணிக்கு மட்டும் இல்லாமல், ரொட்டி, சப்பாத்தி, கலந்த சாதம், சாம்பார் சாதம், காரகுழம்பு போன்றவையுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.
எங்கள் வீட்டில் தயிர் பச்சடி என்றால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவோம்…அதிலும் எனக்கு பச்சடி என்றால் மிகவிருப்பம். அதனை மட்டுமே சாப்பிட்டுவேன்…அவ்வளவு பிடிக்கும்…
நான் சின்னபொண்ணாக இருக்கும் பொழுது, நான் காரகுழம்பு, சாம்பார் சாப்பிடும் பொழுது அம்மா, என்னுடைய தட்டின் ஓரத்தில் ஒரு கரண்டி தயிரினை வைத்துவிடுவாங்க… காரமாக இருந்தால் தயிர் சாப்பிட… அதுவே இப்பொழுது வரை தொடர்ந்து வருகின்றது…(இப்பொழுது எல்லாம் எவ்வளவு காரம் இருந்தாலும் சாப்பிட்டுவிடுவேன்….என்பது வேறவிஷயம்….)… சாம்பார் சாதத்துக்கு கூட எனக்கு எதாவது பச்சடி இருந்தால் போதும்…அவ்வளவு பிடிக்கும்…
எப்பொழுதும் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், சுரைக்காய், பூசிணிக்காய் என்று எல்லாம் பச்சடி செய்து போராடித்து விட்டால் இந்த வாழைப்பூ பச்சடியினை செய்து பாருங்கள்…கண்டிப்பாக அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ வாழைப்பூ – 1 கப்
§ தயிர் – 1 கப்
§ கொத்தமல்லிசிறிதளவு
§ உப்புதேவையான அளவு
வாழைப்பூ வேகவைக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
அரைத்து கொள்ள :
§ பச்சை மிளகாய் – 2
§ தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
§ தயிர் – 1 தே.கரண்டி
செய்முறை :
v வாழைப்பூ சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு போட்டு வதக்கி வாழைப்பூ + உப்பு + 1/4 கப் தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
v கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைத்த கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்து வைக்கவும்.
v வேகவைத்த வாழைப்பூ + கொத்தமல்லி + அரைத்த விழுது + தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.
v இப்பொழுது சுவையான வாழைப்பூ தயிர் பச்சடி ரெடி.
குறிப்பு :
இந்த பச்சடியில் வாழைப்பூவினை நன்றாக வதக்கி சேர்க்கவேண்டும்.
இதில் தேங்காய் துறுவல் சேர்ப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். (தேங்காய் விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.)

11 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி.. செஞ்சு பத்திடுவோம்...

Unknown said...

nice cooking

dharshini said...

படத்தில் இருப்பது நீங்களும் உங்கள் குழந்தையுமா?


சூப்பர் பச்சடி...
[நார்த் இன்டியன்ஸ் ரொட்டி அயிட்டம் எல்லாவற்றிற்கும் ரெய்தா(தயிரில் ஆனியன்+குக்கும்பர்) மற்றும் ஊறுகாய் தொட்டுக் கொண்டுதான் சாப்பிடுகிறார்கள் கீதா மேடம்..]

GEETHA ACHAL said...

நன்றி அண்ணா..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லனமாக்கும்...

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி பொன்மலர். நேரம் கிடைக்கும் பொழுது (வாழைப்பூ கிடைக்கும் பொழுது) செய்து பாருங்கள்...வித்தியாசமாக சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தர்ஷினி.

எப்படி இருக்கின்றிங்க..(தமிழ்குடும்பம் தர்ஷினி தானே)

ஆமாம் பா, படத்தில் இருப்பது நானும் என்னுடைய பொன்னு (அக்ஷ்தா)வும் தான்...3 மாதத்திற்கு முன்பு எடுத்த போட்டோ அது.

அது கராக்ட் North Indian அதிகாமாக பச்சடி சாப்பிடுவார்கள். நான்...பார்த்தது நம்ம ஊர்காரங்களை...

Menaga Sathia said...

super recipe geetha!!
http://sashiga.blogspot.com/2009/07/blog-post_28.html.pls take it!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா.

GEETHA ACHAL said...

வந்துவிட்டேன் அண்ணா....இப்படி பயம்முறுத்த வேண்டாமே...

மிகவும் நன்றி...

vignesh said...

Dont need to use chilli for spicy in this Pachadi

Related Posts Plugin for WordPress, Blogger...