வெந்தயகீரை தர்பூசணி சாலட் - Methi Leaves Watermelon Salad


வெந்தயகீரை உடலிற்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவினை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது.


கொண்டைகடலையில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் நல்ல carbohydrate மற்றும் polyunsaturated fat காணபடுகின்றது. (பொதுவாகவே unsaturated fat என்பது இரண்டு வகைப்படும். ஒன்று monounsaturated fat மற்றொன்று polyunsaturated fat. .இவை இரண்டுமே உடலிற்கு நல்லது. ஆனால் தவிர்க்கவேண்டியது saturated Fat)


தர்பூசணியில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் டயட்டில் இருப்பவர்கள் இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம். (தினமும் சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை)


இந்த சாலடில் நான் இந்த முன்று பொருட்களை சேர்த்து செய்து உள்ளதால் நமக்கு தேவையான பெரும்பாலுமான சத்துகளும் கிடைத்துவிடுகின்றது.


இதில் வெந்தயகீரையில் இருந்து Freshness , கொண்டைகடலையில் இருந்து crunchness , தர்பூசணியில் இருந்து sweetness, எலுமிச்சை சாறில் இருந்து புளிப்பு தன்மை(tart Flavor) கிடைத்துவிடுகின்றது.இதனால் இந்த சாலடின் சுவை அதிகமாக தெரிகின்றது.


எங்கள் வீட்டு தொட்டியில் நான் வளர்ந்த வெந்தயகீரையினை வைத்து செய்த சாலட் இது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சுத்தம் செய்த வெந்தயகீரை – 2 கப்
§ வேகவைத்த கொண்டைகடலை – 1 கப்
§ தர்பூசணி – 1/4 பழம்
கலந்து கொள்ள :
§ ஆலிவ் ஆயில் – 1 தே.கரண்டி
§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
§ உப்பு – சிறிதளவு
§ மிளகு தூள் – 1/4 தே.கரண்டி
செய்முறை :
v ஆலிவ் ஆயில் + எலுமிச்சை சாறு + உப்பு + மிளகுதூள் சேர்த்து ஒரு பவுலில் கலந்து கொள்ளவும்.
v ஒரு பெரிய பவுலில் வெந்தயகீரை + கொண்டைகடலை + கலந்து வைத்துள்ள சாஸ் சேர்த்து கலக்கவும்.

v கடைசியில் தர்பூசணியினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அத்துடன் சேர்த்து கலக்கவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய சாலட் ரெடி.
குறிப்பு :
இதனை 2 -3 மணி நேரம் முன்னரே செய்து ப்ரிஜில் வைத்து பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


தர்பூசணி இல்லையெனில் 2 தே.கரண்டி தேன் சேர்த்து கொள்ளலாம்.

9 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹீம்ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்கும் போல..

//இதனை 2 -3 மணி நேரம் முன்னரே செய்து ப்ரிஜில் வைத்து பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். //

நாங்க எல்லாம் ப்ரிஜ் இல்லாத ஏழைகள்.. என்ன செய்ய?

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா..

//நாங்க எல்லாம் ப்ரிஜ் இல்லாத ஏழைகள்.. என்ன செய்ய?//
உடனே சாப்பிட வேண்டியது தான்...இதில் என்ன கவலை...ஒ..ஓ இப்ப தான் தெரியுது ITயில் வேலை செய்ற நீங்க ஏழை என்று....

ப்ரிஜில் வைத்தால் தர்பூசணியில் இருந்து வெளிவரும் சாறு சாலடுடன் கலந்து சுவையாக இருக்கும். தர்பூசணி சேர்த்தவுடன் சாப்பிடுவது நல்லது அல்லது ப்ரிஜில் வைப்பது தான் நல்லது..

ஏனெனில் அதில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளிபட்டு சாலடுனை தண்ணியாககிவிடும். அதனால் சாலடில் freshness, crispness எல்லாம் குறைந்து காணப்படும்.(அதனால் தான் தர்பூசணி சேர்த்த பிறகு ப்ரிஜில் வைக்க சொன்னேன்...)

Ammu Madhu said...

அக்கா,

இந்த சாலட் இப்போ செஞ்சேன்.கீரை கசந்ததே!!நான் எதாவது செய்முறையில் தவறு செய்திருப்பேனோ?இல்லாவிட்டால் கீரையின் குறையாக இருக்குமா?

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogpot.com

குறை ஒன்றும் இல்லை !!! said...

இது போல பல டயட் சமையல்களை செய்வதால் உங்களுக்கு


இயற்கை வைத்தியர் இருளம்மா..

GEETHA ACHAL said...

//இந்த சாலட் இப்போ செஞ்சேன்.கீரை கசந்ததே!!நான் எதாவது செய்முறையில் தவறு செய்திருப்பேனோ?இல்லாவிட்டால் கீரையின் குறையாக இருக்குமா?//

செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்தற்கு மிகவும் நன்றி அம்மு.

பொதுவாக வெந்தயகீரை சிறிது கசப்பு தன்மையுடன் இருக்கும். இதனால் தான் இந்த சாலடுடன் தர்பூசணி அல்லது தேன் சேர்த்து கொள்ள சொன்னேன்..

ஒவ்வொரு கீரையின் தன்மையை பொருத்தது அது. இங்கு நானும் கடைகளில் வாங்கும் கீரையில் கசப்பே தெரியாது..ஆனால் வீட்டில் வளர்க்கும்
வெந்தயகீரையில் கசப்பு தன்மை தெரிகின்றது...

நான் வெந்தயகீரையினை பற்றி முந்தய பகுதிகளில் எழுதி இருந்ததால் அதன் கசப்பு தனமையினை பற்றி இதில் எழுதவில்லை...

ஆனாலும் புதிதாய் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அதனை இணைத்து விடுகின்றேன்.
நன்றி.

GEETHA ACHAL said...

//இயற்கை வைத்தியர் இருளம்மா..//கொஞ்சம் ஒவராக தெரியவில்லையா...நன்றி.

Menaga Sathia said...

//இது போல பல டயட் சமையல்களை செய்வதால் உங்களுக்கு இயற்கை வைத்தியர் இருளம்மா..//ஹா ஹா ஹா.ராஜ் சூப்பர்ப்பா.

கலக்கல் கீதா.இப்பதான் வெந்தயக்கீரை தொட்டில போட்டுருக்கேன்.செய்துவிட்டு சொல்றேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா. நீங்கவேற ராஜுக்கு சப்போர்டா...

கண்டிப்பாக செடி வளர்ந்த பிறகு செய்து பாருங்கள்...

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

Related Posts Plugin for WordPress, Blogger...