பிரவுன் ரைஸ்(Brown Rice) Vs. வெள்ளை அரிசி(White Rice) ? நீங்கள் எந்த கட்சி…?பிரவுன் ரைஸ்(Brown Rice) Vs. வெள்ளை அரிசி(White Rice) ? நீங்கள் எந்த கட்சி…?

நான் முதலில் பிரவுன் ரைஸ் என்றால் பிரவுன் கலரில் இருக்கும் அரிசியை தான் குறிப்பிடுகின்றனர் என்று நினைத்து இருக்கின்றேன்(அதுவும் நிறம் விஷயத்தில் உண்மை தான்)….அதன் பிறகு தான் இதனை பற்றி தேடுதல் வேட்டையில் நான் தெரிந்து கொண்டதை இதில் எழுதுகிறேன்

பிரவுன் ரைஸில் சமைத்தால் நல்லதா என்று கேட்பவர்கள்..இதனை முதலில் படியுங்கள்..

பிரவுன் அரிசி கைகுத்துதல் அரிசி என்றே சொல்லலாம். நெல்லின் மேல் உள்ள உமி தோலினை நீக்கினால் அது தான் பிரவுன் ரைஸ். அதில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் சத்துகள் அடங்கி இருக்கின்றது.

ஆனால் நாமே அதனை மேலும் தோலுரித்து தவிடாக்கி, சத்துகளை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு சத்தற்ற வெள்ளை அரிசியினை சாப்பிடுகின்றோம்என்ன கொடுமை பாருங்கள்

பிரவுன் ரைஸும் , நாம் அன்றாடும் சமைக்கும் அரிசியும் ஒரே நெல்லில் இருந்து தான் கிடைக்கின்றது. பிரவுன் ரைஸுன் தோல் பகுதியினை திரும்ப திரும்ப நீக்கி பாலீஸ் செய்தால் வெள்ளை அரிசி கிடைத்துவிடும்ஆனால் சத்துகள்?

ஆம்..இப்படி ஒவ்வொரு முறையும் தோலினை நீக்கிவிடுவதால் வெள்ளை அரிசியில் பல சத்துகள் குறைந்து காணப்படுகின்றது. பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் கொளஸ்ட்ராலினை(Cholesterol) பெரிதும் குறைக்க உதவுகின்றது..ஆனால் வெள்ளை அரிசியில் தோலினை நீக்கிவிட்டதால் அதில் இந்த தன்மை காணாமல் போய்விட்டது.

இப்படி பிரவுன் ரைஸினை வெள்ளை அரிசியாக மாற்றுவதால் அதிகபட்சம் 65- 70% சத்துகள் காணாமல் போய்விடுகின்றது.

அதே போல நீங்கள் சில சமயம் பார்த்து இருந்தால் சில அரிசி பைகளில் “Enriched Rice” என்று எழுதி இருக்கும். அதாவது, தோலினை நீக்கி கிடைத்த வெள்ளை அரசியில் சில சத்துகளை செயற்கையாக சேர்பது தான். ஆனால், இப்படி செயற்கையாக சத்துகள அரிசியில் எற்றினாலும் எற்ற முடியாத சில சத்துகள் இருக்கின்றது….அவற்றில் ஒன்று தான் மேகனிஸியம் (Magnesium).

மேகனிஸியத்திற்கு அவ்வளவு என்ன மதிப்பு என்று நினைக்கின்றிங்களா?...

ஒரு கப் பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் நம்முடைய உடலிற்கு ஒரு நாளைக்கு தேவையான 88% மேகனிஸியம் கிடைக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் மேகனிஸியம் நமக்கு அதிக அளவு சத்தினை கொடுக்கின்றது. இதனால் எளிதில் சாப்பாட்டில் இருந்து Energy வெளிபடுகின்றத்து. மேகனிஸியம் + கல்கியம் சேர்த்தால் தான் நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்கின்றது என ஆய்வுகளில் கூறுகின்றனர். அதனால் தான் என்னவோ நம்முடைய நாட்டில் வயதனாபிறகு எல்லொருக்கும் கண்டிப்பாக மூட்டுவலி வருகின்றது…

பிரவுன் ரைஸில் அதிக அளவு நார்சத்து(Fiber) இருப்பதால் Colon Cancerயினை கட்டுபடுத்த அதிகம் உதவுகின்றது.அத்துடன் இதில் ஸெலினியம் என்பதும் காணப்படுகின்றது. இதனால் Thyroidயினை கட்டுபட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றது மற்றும் புற்றுநோயினை போக்கவும் வழி வகுகின்றது.

பிரவுன் ரைஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த அரிசி வேகவைக்க சிறிது நேரம் எடுக்கும் (சுமாராக 30 – 40 நிமிடங்கள்). அதே போல இந்த அரிசியில் இருக்கும் ஒரே ஒரு குறை என்றால் இதனை வாங்கியவுடன் சீக்கிரம் சமைத்து முடித்துவிட வேண்டும். (Expires Soon). அதனால் இதனை முட்டையில் வாங்காமல் சிறிய பக்கட்டில் வாங்கனால் மிகவும் நல்லது. (நான் சொல்வது 2 நபர் உள்ள குடும்பத்திற்கு..சிறிய பக்கட்)

பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,

oஉடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.

oஇதில் சக்கரை அளவு 0. அதனால் இதனை சக்கரை நோயளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியது.

o புற்று நோயினை வரமால் தடுக்கின்றது.

o Thyroidயினை கட்டுபட்டுகுள் வைக்கின்றது.

o கெட்ட கொழுப்பினை நீக்கிவிடுகின்றது.

oசிறுநீரக கல் வராமல் தடுகின்றது. (அதிக அளவு நார்சத்து இருப்பதால்)

o உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

நாளை பிரவுன் ரைஸினை வைத்து சில சமையல் குறிப்பினை பார்ப்போம்.

14 comments:

Mrs.Menagasathia said...

கீதா பேசாம நீங்க டயட்லயே இருங்க அப்பதான் நாங்க இந்த மாதிரி நல்ல விசயங்கள் தெரிந்துக்க முடியும்..மனசுக்குள்ள திட்டுறது புரியுது நான் ஓடிடுறேன் நீங்க வரதுக்குள்ள..

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.

//நீங்க டயட்லயே இருங்க அப்பதான் நாங்க இந்த மாதிரி நல்ல விசயங்கள் தெரிந்துக்க முடியும்//நீங்கள் மட்டும் இல்ல மேனகா, நானும் இப்படி டயட்டிங் இருப்பதால் தான் இத்தனை விஷ்யம் படித்து தெரிந்து கொள்ள முடிகின்றது..

Thamarai selvi said...

முன்னாலயும் கூட ப்ரொவுன் ரைஸ் பார்த்ததும் ஓட மட்டேன்னாலும் அவ்வளவு விருப்பம் இருப்பதில்ல..இத படிச்சதும் அட!!!னு இருக்கு..ரொம்ப நன்றி கீதா..ஆனால் குழந்தைக்கும் இத கொடுக்கலாம் இல்லையா???உங்களுக்கு தெரியும் சந்தோஷ்க்கு 3வயது முடிஞ்சது..ஆனால் பார்க்க 2வயது மாதிரிகூட இல்ல..அவனுக்கு இத கொடுத்தால் நல்லதா? அவனுக்கு கொஞ்சம் டைஜசன் பிராப்ளம் இருக்கு,திடீர்னு அவனுக்கு வயுறு அப்செட் ஆகிடும், அதான் கேட்க்கிறேன்..டைம் கிடைக்கும்போது பதில் எழுதுங்கள்..மீண்டும் நன்றி கீதா!!!

கீதா ஆச்சல் said...

தாமரை எப்படி இருக்கின்றிங்க.சந்தோஷ் குட்டி எப்படி இருக்காரு...
//குழந்தைக்கும் இத கொடுக்கலாம் இல்லையா???//கண்டிப்பாக குழந்தைக்கு இந்த அரிசியினை சமைத்து கொடுக்கலாம்.ஆனால் நன்றாக வேகவிட்டு கொடுக்கவும். பிரஸ்ர் குக்கர் என்றால் 4 - 5 விசில்விட்டு வேகவைத்து கொடுக்கவும்.

இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் கண்டிப்பாக எந்த பிரபளமும் வராது. தரலமாக இதனை கொடுக்கலாம்.

geetha said...

ungal samayal kuripu annithum arumai
pls carry on

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி கீதா...

Anonymous said...

Hi friends, I'm in chennai.Where can I get brown rice, that too in small quantities as mentioned in Geetha's post - Selva

Sudhar said...

We are trying your brown rice varities.

Is this the same rice Keralites using ?

Anonymous said...

hi madam, may i know which is brown rice and where can i get?

GEETHA ACHAL said...

நன்றி மேகலா...பழுப்பு நிறத்தில் இருப்பது தான் பிரவுன் ரைஸ்...

நீங்கள் வெளிநாடுகளில் இருந்தால் எல்லா கடைகளிலும் கிடைக்கும்...

இந்தியாவில் சில கடைகளில் கிடைக்கும்...கண்டிப்பாக கிராம பகுதியில் அதிகம் கிடைக்கும்...

subha said...

plz tell me how to prepare this brown rice? how much water needed to cook in cooker?

GEETHA ACHAL said...

நன்றி சுபா...இது வேக கொஞ்சம் நேரம் அதிகமாக எடுக்கும்.

பிரஸர் குக்கரில் என்றால் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி 4 - 5 விசில் விட்டு வேகவிடவும்.

அல்லது அரிசியினை வேகவைத்து வடித்தும் கொள்ளலாம்.

Anonymous said...

i have a question brown rice is also used in kerala let me know that is the brown rice u told...
Mattayarisi is called in kerala for brown rice

Anonymous said...

Kerala rice is different. thats not brown rice. thats called red rice. thats also polished.

Related Posts Plugin for WordPress, Blogger...