சில்லி டோஃபு - Chilli Tofu


இந்த சில்லி டோஃபு ,சில்லி பன்னீர் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும். டோஃபுவினை சோயாவின் பாலில் இருந்து தயாரிக்கின்றனர். டோஃபுவில் Omega 3 Fatty Acid இருக்கின்றது.(மீன் சாப்பிடாதவர்கள் இதனை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது).


டோஃபுவில் அதிக அளவில் ப்ரோடின்(Protein) காணப்படுகின்றது. எங்கள் வீட்டில் பன்னீருக்கு பதில் டோஃபுவை தான் உபயோகிப்பேன். எப்பொழுதும் பஜ்ஜி, போண்டா என்று செய்யாமல் இப்படி செய்து சாப்படுவது உடலிற்கு மிகவும் நல்லது…(நம்முடைய பர்ஸுக்கும் தான்..)


தீடீர் விருந்தினருக்கு இதனை செய்து கொடுத்து அசத்தலாம். அவர்களுக்கு ஹெல்தியான உணவு சாப்பிட திருப்தி இருக்கும்…


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ Extra Firm டோஃபு – 1 Packet
§ குடைமிளகாய் – 1
§ வெங்காயதாள் – 2
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
சேர்க்க வேண்டிய சாஸ் வகைகள் :
§ சில்லி சாஸ் – 2 தே.கரண்டி
§ சோயா சாஸ் – 1 தே.கரண்டி
§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 2 தே.கரண்டி
செய்முறை :
v டோஃபுவினை சிறிய க்யூபுகளாக வெட்டி கொள்ளவும். குடைமிளகாயினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயதாளினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v ஒரு அடி அகலமான நாண்ஸ்டிக் பானில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
v பிறகு அதில் டோஃபுவினை போட்டு 5 - 6 நிமிடங்கள் வறுக்கவும். (கவனிக்க : இந்த சமயத்தில் அடுப்பினை Highயில் வைக்கவும். அப்பொழுது தான் வறுத்த மாதிரி இருக்கும்.ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை டோஃபுவினை திருப்பிவிடவும்.)
v டோஃபு நன்றாக வறுபட்டவுடன் அத்துடன் சில்லி சாஸ் + சோயா சாஸ் + உப்பு சேர்த்து மேலும் 4 - 5 நிமிடங்கள் வதக்கவும்.
v அதன்பின், டோஃபுவினை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
v அதே கடாயில் வெட்டி வைத்துள்ள குடைமிளகாயினை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
v குடைமிளகாய் சிறிது வதங்கியபின் வதக்கிவைத்துள்ள டோஃபு + வெங்காயதாள் சேர்த்து கிளறவும்.
v சுவையான எளிதில் செய்ய கூடிய சில்லி டோஃபு ரெடி.

கவனிக்க:
டோஃபுவினை வாங்கும் பொழுது அதனை தண்ணீரில் ஊறவைத்து இருப்பாங்க. தண்ணீரை உபயோகிக்க வேண்டாம்.

12 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

//தீடீர் விருந்தினருக்கு இதனை செய்து கொடுத்து அசத்தலாம்.//

விடுங்க அக்கா.... வீட்டுக்கு ஆகாத விருந்தாளி யராச்சும் வரட்டும் நானே செஞ்சு அசத்திடுறேன்...

GEETHA ACHAL said...

இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம் தான் அண்ணா....
//வீட்டுக்கு ஆகாத விருந்தாளி யராச்சும் வரட்டும் நானே செஞ்சு அசத்திடுறே// அது காரக்ட் நீங்கள் எதாவது சமைச்சா அப்படி தான்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னமா பன்றது!!! உங்க சாப்பாட்ட சாப்பிட ஒரு அப்பாவி கிடைச்ச மாதிறி, என் சாப்பாட்ட சாப்பிட ஒரு பாவி கிடைக்க மாட்டாங்களா??

GEETHA ACHAL said...

அப்படினா...உங்கள் வீட்டிக்கு வர விருந்தாளியை "பாவி"னு சொல்லுறிங்களா அண்ணா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்படினா...உங்கள் வீட்டிக்கு வர விருந்தாளியை "பாவி"னு சொல்லுறிங்களா அண்ணா...//

வீட்டுக்கு ஆகாத விருந்தாளி யராச்சும் வரட்டும் நானே செஞ்சு அசத்திடுறேன்...

Kanchana Radhakrishnan said...

super receipe.I also like this.

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கஞ்சனா.
உங்களுடைய ப்ளாக் நன்றாக இருக்கின்றது.

Dr. R.Mohan Kumar said...

It is really a BLOG with more value and utility.I appreciate the author who has shown utmost interest and care in the preparation of the RECEIPE.All the best.Dr.R.Mohan Kumar.,Kanyakumari

Dr. R.Mohan Kumar said...

It is really an amazing experience to go thru the Blog of Geetha akka.Really she has taken great interest and care in the preparation.I am sure it is verymuch useful for many.All the best.R.R.Mohankumar

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி டாக்டர்.திரு. மோகன்.

உங்களை போன்றோரின் ஊக்கத்தினால் மேலும் பல நல்ல தகவலினை எழுத வேண்டும் என்ற உற்சாகம் எற்படுகின்றது. நன்றி.

Mythreyi Dilip said...

First time here, all ur recipes are unique and different! Excellent blog!

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மைத்ரேயி.

Related Posts Plugin for WordPress, Blogger...