எலுமிச்சை சாதம் (Lemon Brown Rice)


நான் இப்பொழுது டயட்டிங்கில் இருப்பதால் எங்கள் வீட்டில் பிரவுன் ரைஸ் தான். அதில் நான் செய்த எலுமிச்சை சாதம் இது. மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய பொண்ணும் மிகவும் விரும்பி சாப்பிட்டாள்.


எலுமிச்சை பழத்தில் அதிக அளவு விட்டமின் சி & (Citric Acid) உள்ளது. இந்த சிட்ரிக் அசிட், நம் உடலினை தாக்கவரும் கிருமிகளை அழிக்கின்றது. அதனால் இதனை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.


பிரவுன் ரைஸினை பற்றி என்னுடைய முந்தைய பதிவில் எழுது இருக்கின்றேன். இதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப்
· எலுமிச்சை பழம் – 1
· கருவேப்பில்லை – 5 இலை
· பச்சை மிளகாய் – 2
· காய்ந்த மிளகாய் - 1
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
· கடலை பருப்பு – 1/2 தே.கரண்டி
· பச்சை வேர்க்கடலை – 2 - 3 தே.கரண்டி
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· உப்புதேவையான அளவு
செய்முறை :
v வேகவைத்த பிரவுன் ரைஸினை சிறிது நேரம் ஆறவிடவும். எலுமிச்சைபழத்தில் இருந்து சாறினை பிழிந்து கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
v தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலை பருப்பு + உளுத்தம் பருப்பு + பச்சை மிளகாய் +காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
v அதன் பின் பச்சை வேர்க்கடலை + மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு + உப்பு அதில் சேர்த்து, அடுப்பினை நிறுத்திவிடவும்.
v தாளித்து வைத்துள்ள பொருட்கள் + பிரவுன் ரைஸ் சேர்த்து கிளறவும்.
v சுவையான எலுமிச்சை சாதம் ரெடி. இதனை வறுவலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
கவனிக்க :
பிரவுன் ரைஸ் வேக சிறிது நேரம் எடுக்கும். அரிசி வேகும் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் சாதம், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க இப்படி தட்டு நிறைய சாப்பிடுரது தான் டையட்டா?

GEETHA ACHAL said...

வாங்க அண்ணா.
//ஏங்க இப்படி தட்டு நிறைய சாப்பிடுரது தான் டையட்டா// நான் இதில் தட்டு நிறைய சாப்பிடுங்கள் என்று சொல்வில்லையே...

இரண்டு நபர்கள் சாப்பிடும் அளவிற்கு தான்,நான் எப்பொழுதும் குறிப்புகள் கொடுகிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அதாங்க.. ரெண்டு பேர் சாப்பாட்ட ஒருத்தர் சாப்பிரது தான் டையட்டா?

Geetha6 said...

பிரவுன் அரிசி என்றால் உடைத்த
சம்பா கோதுமையா? அல்லது கோதுமை ரவையா? சொலுங்க ப்ளீஸ் @

GEETHA ACHAL said...

நன்றி கீதா..

பிரவுன் ரைஸ் என்பது தோல் நீக்காத அரிசி...கோதுமை கிடையாது..

மேலும் தகவல் அறிய இந்த லிங்கினை பாருங்க...http://geethaachalrecipe.blogspot.com/2009/07/brown-rice-vs-white-rice.html

senthiil said...

வணக்கம் சகோதரி,
இப்பதான் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளேன், உங்க Web page ல் நன்றாக டீடயல்ஸ் கொடுத்துள்ளூர்கள். உபயோகமாக இருக்கிறது. நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...