ரோஸ்டட் ஃஎக்பிளான்ட் (Roasted Eggplant/ கத்திரிக்காய்)


நான் ஊரில் இருந்தப்ப...அம்மா செய்யும் எண்ணெய் கத்திரிக்காய் மிகவும் விருப்பம்…ஆனால் இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்த ஊர் கத்திரிக்காய் அதாங்க பெரிசா உருட்டு கட்டை மாதிரி இருக்குமே அது…அது…….வந்ந்ந்ந்த்துதுது….ஆ……பெரிய கத்திரிக்காய்(EGGPLANT)…அதனை கண்டாலே அப்படி ஒரு கோபம் வரும் எனக்கு..இது எல்லாம் கத்திரிகாய் என்று சொல்லி இப்படி கொல்லுறாங்களே….

ஆனாலும் என்ன செய்ய முடியும் சொல்லுங்க….இதனை தான் கத்திரிக்காய் என்று நினைத்து கொண்டு சமைக்க வேண்டும்…(ஏன்னா…நம்மூர் குட்டி கத்திரிகாய் இந்தியன் கடையில் தான் கிடைக்கும்…அதும் விலையினை பார்த்தால் வாங்கவே மனசு இருக்காது…அவ்வளவு அதிகம்…)..அத வாங்குவதற்கு இந்த ஊர்கத்திரிக்காயினையே வாங்கி கொண்டு சமைத்துவிடலாம்…

இந்த பெரிய கத்திரிக்காயினை வைத்து நான் சாம்பார், சட்னி, துவையல், பச்சடி, கலந்த சாதம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்…(நம்மூர் கத்திரிகாய் போல் இதில் விதை அதிகமாக இருக்காது…..விலையும் கம்மி தான்…..)..ஆனால் என்னதான் சொல்லுங்க…எண்ணெய் கத்திரிகாய் விஷயத்தில் மட்டும் நான் எப்பொழுதும் குட்டி கத்திரிகாய் கட்சி தானுங்க…

கத்திரிகாயினை வாங்கும் பொழுது அது பலபலப்பாக(Shining) இருந்தால் இது புது கத்திரிகாய்…அதுவே கொஞ்சம் பலபலப்பு குறைந்தாலும் அது முத்தின கத்திரிகாயாம்…என்று அம்மா சொல்லி இருக்காங்க…

கத்திரிகாயில் அதிக அளவு நார்சத்து உள்ளது…, குறைந்த அளவில் Saturated Fat மற்றும் Cholestrol இதில் உள்ளது…ஆனால் என்ன..கத்திரிக்காயில் இருந்து கிடைக்கும் சக்திகள் பொரும்பாலும் சக்கரையாக மாறிவிடுகின்றது…

கத்திரிகாயினை பலரும் ஒவ்வொரும்விதமாக சமைப்பாங்க…ஒரு முறை இந்த முறையில் பெரிய கத்திரகாய் கிடைத்தால் செய்து பாருங்கள்… சாலடுடன் இந்த ரோஸ்டட் கத்திரிகாயினை சாப்பிட தான் பொருத்தமாக இருக்கும்...(விரும்பினால் இதனுடன் Baked Fish, Chicken கூட சாப்பிடலாம்…)

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

§ பெரிய கத்திரிக்காய் – 1

§ ஆலிவ் ஆயில் – 1 தே.கரண்டி

§ பெப்பர் – 1/2 தே.கரண்டி

§ உப்புதேவையான அளவு

§ புதினாசிறிதளவு (விரும்பினால்)

§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி (விரும்பினால்)

செய்முறை :

v அவனை 425 Fயில் மூற்சுடு செய்யவும். கத்திரிகாயினை 1 இன்ச் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

v வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய் + பெப்பர்+ உப்பு + ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

v இதனை அவனில் வைக்கும் ட்ரேயில் பரப்பி வைக்கவும்.

v மூற்சுடு செய்யபட்ட அவனில் 425 Fயில் 20 – 22 நிமிடங்கள் வைக்கவும். நன்றாக ரோஸ்ட ஆனவுடன் வெளியில் எடுக்கவும்.

v பரிமாறும் பொழுது எலுமிச்சை சாறு + புதினா இலைகள் (விரும்பினால்) சேர்த்து பரிமாறவும். சுவையான ரோஸ்டட் ஃஎக்பிளான்ட் ரெடி.

8 comments:

dharshini said...

இங்கேயும் அந்த மாதிரி பெரியகத்தரி கிடைக்கிறது... செய்து பார்க்கிறேன் கீதா..

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் தர்ஷினி...எப்பொழுது மசாலா, காரசாரமாக சாப்பிடும் பொழுது இப்படி ஒரு முறை சாப்பிடலாம்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//எண்ணெய் கத்திரிகாய் விஷயத்தில் மட்டும் நான் எப்பொழுதும் குட்டி கத்திரிகாய் கட்சி தானுங்க…//

நான் டிஆரின் லதிமுக..

//கத்திரிகாயினை வாங்கும் பொழுது அது பலபலப்பாக(Shining) இருந்தால் இது புது கத்திரிகாய்…அதுவே கொஞ்சம் பலபலப்பு குறைந்தாலும் அது முத்தின கத்திரிகாயாம்//

எனக்கு என்னமோ இது உள் குத்தா இருக்கும் போல இருக்கு..

Menaga Sathia said...

இந்த மாதிரி நான் செய்து பார்த்ததில்லை கீதா.நல்லாயிருக்கு.அவன் சரியானதும் செய்து பார்க்கனும்பா..

ஹர்ஷினி அம்மா said...

கீதா இந்த ரெசிபி புதுசா இருக்கே அதை விட உங்க கத்திரிகாய் கதை சூப்பர்.... நானும் இங்கு வந்த புதுசுலே கத்திகாயே தேடிட்டே இருப்பேன்... இப்போ எல்லாம் பழகி போச்சு.

GEETHA ACHAL said...

//நான் டிஆரின் லதிமுக.. ///ஹா..ஹா....நான் அந்த அரசியல் கட்சியினை பத்தி ஒன்னும் சொல்லனும்...

//எனக்கு என்னமோ இது உள் குத்தா இருக்கும் போல இருக்கு..//
இதுல என்ன இருக்கு உள்குத்து...

தங்கள் கருத்துக்கு நன்றி...அண்ணா...

GEETHA ACHAL said...

கண்டிப்பாக அவண் சரியானதும் செய்து பாருங்கள்...நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா....
மெயில் பார்த்திங்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...