பார்லி கோதுமை ரவா இட்லி / தோசை ( Barley Wheat Rava Idly / Dosai - Indian Barley Recipe / Idly Varieties

பார்லியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது… உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தினமும் அதிக அளவு நார்சத்து உள்ள ஒரு உணவினை சாப்பிடுவது நல்லது.
பார்லியில் கஞ்சி மட்டும் தான் செய்ய முடியும் என்றில்லாமல் , இட்லி, தோசை, அடை, கலந்த சாதம் என பல வகைகளிலும் இதனை செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி – 2 கப்
· கோதுமை ரவை – 1 கப்
· தயிர் – 2 மேஜை கரண்டி
· காய்ந்த மிளகாய் – 3 (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v பார்லியினை குறைந்த்து 3 – 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு ஊறவைத்த பார்லி + காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
v அரைத்த பார்லி + கோதுமை ரவை + தயிர் + உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொண்டு, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

இட்லிகள் செய்ய :
இட்லி தட்டுகளில், மாவினை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான சத்தான பார்லி இட்லி ரெடி.

தோசை செய்ய :
தோசை கல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக மாவினை ஊற்றி வேகவிடவும்.

ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, தோசையினை திருப்பி போட்டு மேலும் 1 நிமிடம் வேகவிடவும்.
சுவையான சத்தான பார்லி தோசை ரெடி.
இந்த இட்லி / தோசையுடன் சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
மாவினை இட்லிக்கு ஊற்றும் பொழுது கெட்டியாக இருக்கவேண்டும். இதுவே, தோசையாக ஊற்ற வேண்டும் எனில், சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
பார்லி + கோதுவை ரவை சேர்த்து கலந்துபின், கண்டிப்பாக குறைந்த்து 1 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். அப்பொழுது தான் கோதுமை ரவை மாவுடன் சேர்ந்து நன்றாக ஊறியிருக்கும்.

சுரைக்காய் பச்சடி ( Surakai / BottleGourd )சுரைக்காயினை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவது உடலிற்கு நல்லது. உடல் சூடினை தடுக்க உதவுகின்றது.
சுரைக்காயில் அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் (C & B) இருக்கின்றது. இந்த காயினை சாப்பிடுவதால், Cholesterolயினை குறைக்க வழிவகுகின்றது.
சுரைக்காயினை துறுவி அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரினை தினமும் குடித்தால், Ulcer குணமடையும்.
சுரைக்காயினை பொரியல், சாம்பார், கூட்டு மட்டும் செய்யாமல், சுலபமாக செய்ய கூடிய பச்சடி இது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· சுரைக்காய் – 1 சிறியது
· தயிர் – 1 கப்
· உப்பு – தேவையான அளவு
· கொத்தமல்லி – சிறிதளவு
· பச்சை மிளகாய் – 2
செய்முறை :
v பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v சுரைக்காயினை தோல் நீக்கி, கேரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
v துறுவிய சுரைக்காய் + தயிர் + உப்பு + கொத்தமல்லி + பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
v சுவையான சுரைக்காய் பச்சடி ரெடி. இதனை கலந்த சாதம், சாப்பத்தி, பிரியாணி, புலாவ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சென்னா பாலக் தோசை (Channa/Chickpeas Palak Dosai)

ஸ்பினாச் கீரையில் (பாலக்) அதிக இரும்பு, கல்சியம் இருக்கின்றது. இதனை தவிர இதில் அதிக அளவு விட்டமின்ஸ் (Vitamins A, B2, B6, B9(Folic Acid), C, E & K) உள்ளது. இந்த கீரையில் அதிக அளவு போகில் ஆசிட் இருப்பத்தால் உடலிற்கு மிகவும் நல்லது.

சென்னாவில் (கொண்டைகடலை) அதிக அளவு நார்சத்து, புரோட்டின் இருக்கின்றது. இதில் Polyunsaturated Fat இருக்கின்றது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் Cholesterolலினை குறைக்க உதவுகின்றது.

இந்த தோசை அதிக சத்துகள் கொண்டது…2 வாரத்திற்கு ஒரு முறை இப்படி சாப்பிட்டால் உடலிற்கு மிகவும் நல்லது.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கொண்டைகடலை – 1 கப்

· அரிசி () பிரவுன் ரைஸ் – 1/4 கப்
· ஸ்பினாச் கீரை – 1 கப்
· காய்ந்த மிளகாய் – 3
· உப்புதேவையான அளவு
தாளித்து சேர்க்க (விரும்பினால்) :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/2 தே.கரண்டி
· உடைத்த உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
v கொண்டைக்கடலை + அரிசியினை தனி தனியாக குறைந்த்து 4 – 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
v கீரையினை கழுவி கொள்ளவும்.
v கொண்டைகடலை + கீரை + காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரிசியினை கழுவி கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v அரைத்த கலவையுடன் உப்பு + தாளித்த பொருட்கள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

v தோசை கல்லினை காயவைத்து, தோசைகளாக ஊற்றவும். (சிறிது எண்ணெயினை விரும்பினால் தோசையினை சுற்றி ஊற்றவும்.)

v ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, திருப்பிபோட்டு மேலும் 2 நிமிடம் வேகவிடவும்.

v சுவையான கொண்டைகடலை ஸ்பினாச் தோசை ரெடி. இதனை பச்சடி, சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இந்த தோசையில் எந்த வகையான கீரையினை சேர்த்து கொள்ளலாம்.
அரிசியினை கொரகொரப்பாக அரைப்பதால், தோசை நன்றாக இருக்கும்.

பார்லி பொங்கல் (Barley Pongal)

சுவையான சத்தான பொங்கல்…..


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி – 1 கப்
· பாசி பருப்பு – 3/4 கப்
· இஞ்சி – சிறிய துண்டு
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
· நெய் – 1 மேஜை கரண்டி
· மிளகு – 1/2 தே.கரண்டி
· சீரகம் – 1 தே.கரண்டி
· முந்திரி – சிறிதளவு
· கருவேப்பில்லை – 5 இலை
செய்முறை :
v பார்லி + பாசிபருப்பினை நன்றாக கழுவி அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி + மஞ்சள் தூள் + உப்பு + 4 – 5 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 4 – 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
v சிறிது நேரம் கழித்து, பிரஸர் குக்கரினை திறந்த வேகவைத்த பொருட்களை ஒருமுறை கரண்டியால மசிக்கவும்.

v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பார்லி பொங்கலுடன் சேர்க்கவும்.

v தாளித்த பொருட்களுடன் சேர்த்தும், திரும்பவும் ஒரு முறை நன்றாக கிளறவும்.
v சுவையான சத்தான பார்லி பொங்கல் ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

குறிப்பு :
விரும்பினால் தாளிக்கும் பொழுது பச்சை மிளகாயினை சேர்த்து தாளிக்கலாம். சுவையாக இருக்கும்.

கிரீமி புரோக்கோலி சூப் (Creamy Broccoli Soup)புரோக்கோலியில் அதிக அளவு விட்டமின்ஸ்(Vitamin A, C & K) மற்றும் நார்சத்து இருக்கின்றது.
புரோக்கோலி சாப்பிடுவதால் எலும்புகள் வலுபெருகின்றது.
கர்பிணி பெண்கள் இதனை சாப்பிடவதால், குழந்தைக்கு சத்துகள் கிடைக்கின்றது. இதில் அதிக அளவு folic acid இருக்கின்றது. அதனால் குழந்தைகள் குறையில்லாமல்(Birth Defects) ஹெல்தியாக பிறக்கும். இது ஒரு நல்ல Birth Defect Fighter.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· புரோக்கோலி – 1 பூ
· வெங்காயம் – 1
· பூண்டு – 2 பல் நசுக்கியது
· பட்டர் – 1 தே.கரண்டி
· பால் () Heavy Cream – 1 கப்
· உப்பு, மிளகு தூள்தேவையான அளவு
· துறுவிய சீஸ்பரிமாறும் பொழுது
செய்முறை :
v புரோக்கோலியினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும்.வெங்காயத்தினை மிகவும் பொடியாக வெட்டிவைக்கவும்.
v புரோக்கோலி + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

v வேகவைத்த புரோக்கோலியினை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

v ஒரு பாத்திரத்தில் பட்டரினை போட்டு பூண்டு போட்டு வதக்கியபிறகு பொடியாக வெட்டிய வெங்காயத்தினை போட்டு 2 - 3 நிமிடம் வதக்கவும்.
v பிறகு, வதக்கிய பொருட்களுடன், அரைத்த புரோக்கோலி விழுது + பால் + உப்பு + மிளகு தூள் சேர்த்து 5 – 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

v பரிமாறும் பொழுது மேலும் சிறிது மிளகு தூள் + துறுவிய சீஸ் சேர்க்கவும்.

சுவையான ஹெல்தியான சூப்.

குறிப்பு :
டயடில் இருப்பவர்கள், Heavy Cream () பாலினை சேர்க்க வேண்டாம். அதற்கு பதிலாக தண்ணீரை மட்டும் சேர்த்து கொள்ளவும்.

100வது பதிவு - பார்லி பாயசம்(Barley Payasam)


இந்த பதிவு என்னுடைய 100வது பதிவு !!!! என்னுடைய ப்ளாகினை படிப்பவர்கள், பின்னுட்டம் அளித்து என்னை மேலும் ஊக்கவிக்கும் நண்பர்கள், பாலேவர்ஸாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி .

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

· பார்லி(Quick Cooking Barley) – 1/4 கப்

· பால் – 4 கப்

· கண்டன்ஸ்டு மில்க்– 1 சிறிய டின் (அ) சக்கரை(தேவையான அளவு)

· நெய் – 2 தே.கரண்டி

· முந்திரி, திரட்சை – சிறிதளவு

· ஏலக்காய் – 1

செய்முறை :

v 1 தே.கரண்டி நெய் + பார்லி சேர்த்து வறுத்து கொள்ளவும். அதன்பின் அத்துடன் 4 கப் பால் சேர்த்து பார்லி வேகும் வரை வைக்கவும். (Quick Cooking Barleyயாக இருந்தாலும் கூட வேகசிறிது நேரம் எடுக்கும் – குறைந்தது 15 - 20 நிமிடங்கள்)

v இப்பொழுது மீதம் உள்ள நெயில் முந்திரி , திரட்சையினை வறுத்து தனியாக வைக்கவும்.

v பார்லி நன்றாக வெந்து, பால் சுண்டி இருக்கும். பொடித்த ஏலக்காய் + கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.

v கடைசியில் வறுத்த முந்திரி + திரட்சை சேர்த்து பரிமாறவும். சுவையான ஹெல்தியான பார்லி பாயசம்.

குறிப்பு :

பார்லியினை பாலில் வேகவைக்க நேரம் அதிக எடுக்கும். அதனால் நேரத்தினை சேமிக்க, பார்லியினை பிரஸ்ர் குக்கரில் போட்டு வேகவைத்த பிறகு பாயசத்தில் சேர்த்து கொள்ளலாம்.


பீர்க்கங்காய் தோல் துவையல்


பீர்க்கங்காய் தோலினை தூக்கி எறியாமல், இப்படி துவையல் செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் தோல் – 1 கப்

· கருவேப்பில்லை – 1 கொத்து

· புளி –சிறிதளவு

· பெருங்காயம் தூள் – 1/4 தே.கரண்டி

· உப்பு – தேவையான அளவு

· எண்ணெய் – 2 தே.கரண்டி

· கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி

· உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி

· காய்ந்த மிளகாய் – 3

செய்முறை :

v பீர்க்கங்காய் தோலினை கழுவி சிறிது நேரம் காயவிடவும்.

v கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தமிளகாய் + கடலை பருப்பு + உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

v அதன்பின், பீர்க்கங்காய் தோல் + கருவேப்பில்லை + மீதம் உள்ள 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

v வறுத்த பொருட்கள் + வதக்கிய பொருட்கள் + உப்பு + புளி + பெருங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

v சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை, போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :

இந்த துவையலில் கொத்தமல்லி, புதினா சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

திரும்பவும் விருது..ஒன்று அல்ல...முன்று!!!!
திருமதி. அம்மு மதுவிற்கு எனது நன்றி.
ஒரு விருது கொடுத்தாலே சந்தோசம்...இதுல முன்று விருதுகள் என்றால் கேட்கவா வேண்டும்...மிகுந்த மகிழ்ச்சி...

இதனை மேலும் 5 நபர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்,
இதனை திருமதி. மேனகா சத்யா, திரு. குறை ஒன்றும் இல்லை (ராஜ்), திரு. யோகா, செல்வி .ஸ்வர்ணரேகா ,திருமதி. பவித்ரா மற்றும் ப்ளாக் நண்பர்கள் வழங்கின்றேன்.

அன்புடன்,
கீதா ஆச்சல்


Tag

Priya Raj has Tagged me for this wonderful questions.Thank u Priyaraj!!

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag

The Tag:

1. A – Available/Single? !!!!!!!!

2. B – Best friend? My Husband

3. C – Cake or Pie? Cake

4. D – Drink of choice? Apple Juice

5. E – Essential item you use every day? Laptop and TV Remote

6. F – Favorite color? Pink

7. G – Gummy Bears Or Worms? Gummy Bears

8. H – Hometown? Chennai

9. I – Indulgence? Playing with my Lovely Cute Akshata

10. J – January or February? January (Birthday of my Dear Mom and Brother Comes in Jan..)

11. K – Kids & their names? Akshata

12. L – Life is incomplete without? GOALS

13. M – Marriage date? 5th September 2005

14. N – Number of siblings?1 Sis & 1 Brother

15. O – Oranges or Apples? Apples

16. P – Phobias/Fears?!!!!!!!

17. Q – Quote for today? Be Happy and Make others too Happy

18. R – Reason to smile? Happy Life..

19. S – Season? Fall

20. T – Tag 4 People? Yoga, Ammu Madhu ,Harshini Amma, Swarnarekha.

21. U – Unknown fact about me? Unknown

22. V – Vegetable you don't like? I love to eat all veggies

23. W – Worst habit? !!!!!!!

24. X – X-rays you've had? No

25. Y – Your favorite food?Any food of Mom’s Cooking

26. Z – Zodiac sign?Virgo

சௌ சௌ பச்சடி (ChowChow - Chayote)சௌசௌயினை பெங்களூர் கத்திரிகாய் என்று சொல்லுவோம். சௌசௌயில் அதிக அளவு நார்சத்து,விட்டமின்ஸ், குறைந்த அளவு Saturated Fat, Cholestrol இருக்கின்றது.
இதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட சிறந்தது.
இந்த சௌசௌ பச்சடியினை சாப்பத்தி, நாண், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· சௌ சௌ – 1
· தயிர் – 1 கப்
· உப்பு – 1 தே.கரண்டி
· பச்சை மிளகாய் – 1
· கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :

v சௌசௌயினை தோல் நீக்கி கேரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
v பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
v துறுவிய சௌசௌ + பச்சை மிளகாய் + கொத்தமல்லி + தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.

v சுவையான சௌசௌ பச்சடி ரெடி.

16 பீன்ஸ் தக்காளி அடை (16 Beans Tomato Adai)இந்த அடையில் 16 வகையான பீன்ஸ் வகைகளையினை சேர்த்து இருப்பதால் மிகவும் சத்துகள் நிறைய காலை நேர சிற்றுண்டி இது.


இது 16 விதமான பீன்ஸ் (பட்டாணி ) வகைகளினை சேர்த்து இருக்கின்றோம்…இதில் சேர்த்து இருக்கும் பருப்பின் பெயர்கள், பின்டோ பின்ஸ், கொண்டைகடலை, ராஜ்மா, கருப்பு கண் கொண்டைக்கடலை, பெரிய லிமாபீன்ஸ், குட்டி லிமா பீன்ஸ், பார்லி, பிங்க பீன்ஸ், கொள்ளு, சிவப்பு பருப்பு, முழு பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, உடைத்த பச்சை பட்டாணி, சின்ன சிவப்பு பட்டாணி,சோயா பீன்ஸ் ஆகிய 16 விதமான பருப்பினை இதில் சேர்த்து இந்த அடை செய்து இருப்பதால் அதிக சத்துகள் நிரம்பியது இந்த அடை.

இந்த பட்டாணி வகைகள் கிடைக்கவில்லை எனில், வீட்டில் இருக்கும் கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிபருப்பு, கொள்ளு, பச்சை பட்டாணி, கொண்டைக்கடலை, ராஜ்மா, போன்ற பருப்புகளில் குறைந்தது 3 – 4 விதமான பருப்புகளை சேர்த்து இதே போல அடை செய்யலாம்..

பருப்புவகைகளை ஊறவைக்க : 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· 16 வகையான பின்ஸ் மிக்ஸ்(16 Bean Mix) – 1 கப்
· பிரவுன் ரைஸ்/பச்சை அரிசி – 1/4 கப்
· தக்காளி – 1
· காய்ந்த மிளகாய் – 4
· தேங்காய துறுவல் – 2 தே.கரண்டி (விரும்பினால்)
· எண்ணெய், உப்புதேவையான அளவு
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/2 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு
· பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
v பருப்பு வகைகளை தண்ணீர் ஊற்றி 3 – 4 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியினையும் அதே போல தண்ணீர் ஊற்றி தனியாக ஊறவைக்கவும். தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v பருப்பு நன்றாக ஊறிய பிறகு, அதனை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அதன்பிறகு, அரிசி + காய்ந்த மிளகாய் + தக்காளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v அரைத்த கலவையுடன் தேவையான அளவு உப்பு + தேங்காய் துறுவல் + தாளித்த பொருட்கள் சேர்த்து கலக்கவும்.
v தோசை கல்லினை காயவைத்து, அடைகளாக ஊற்றவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, அடைகளை திருப்பி போட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.

v சுவையான சத்தான 16 பீன்ஸ் பருப்பு அடை ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...