16 பீன்ஸ் தக்காளி அடை (16 Beans Tomato Adai)இந்த அடையில் 16 வகையான பீன்ஸ் வகைகளையினை சேர்த்து இருப்பதால் மிகவும் சத்துகள் நிறைய காலை நேர சிற்றுண்டி இது.


இது 16 விதமான பீன்ஸ் (பட்டாணி ) வகைகளினை சேர்த்து இருக்கின்றோம்…இதில் சேர்த்து இருக்கும் பருப்பின் பெயர்கள், பின்டோ பின்ஸ், கொண்டைகடலை, ராஜ்மா, கருப்பு கண் கொண்டைக்கடலை, பெரிய லிமாபீன்ஸ், குட்டி லிமா பீன்ஸ், பார்லி, பிங்க பீன்ஸ், கொள்ளு, சிவப்பு பருப்பு, முழு பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, உடைத்த பச்சை பட்டாணி, சின்ன சிவப்பு பட்டாணி,சோயா பீன்ஸ் ஆகிய 16 விதமான பருப்பினை இதில் சேர்த்து இந்த அடை செய்து இருப்பதால் அதிக சத்துகள் நிரம்பியது இந்த அடை.

இந்த பட்டாணி வகைகள் கிடைக்கவில்லை எனில், வீட்டில் இருக்கும் கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிபருப்பு, கொள்ளு, பச்சை பட்டாணி, கொண்டைக்கடலை, ராஜ்மா, போன்ற பருப்புகளில் குறைந்தது 3 – 4 விதமான பருப்புகளை சேர்த்து இதே போல அடை செய்யலாம்..

பருப்புவகைகளை ஊறவைக்க : 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· 16 வகையான பின்ஸ் மிக்ஸ்(16 Bean Mix) – 1 கப்
· பிரவுன் ரைஸ்/பச்சை அரிசி – 1/4 கப்
· தக்காளி – 1
· காய்ந்த மிளகாய் – 4
· தேங்காய துறுவல் – 2 தே.கரண்டி (விரும்பினால்)
· எண்ணெய், உப்புதேவையான அளவு
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/2 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு
· பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
v பருப்பு வகைகளை தண்ணீர் ஊற்றி 3 – 4 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியினையும் அதே போல தண்ணீர் ஊற்றி தனியாக ஊறவைக்கவும். தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v பருப்பு நன்றாக ஊறிய பிறகு, அதனை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அதன்பிறகு, அரிசி + காய்ந்த மிளகாய் + தக்காளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v அரைத்த கலவையுடன் தேவையான அளவு உப்பு + தேங்காய் துறுவல் + தாளித்த பொருட்கள் சேர்த்து கலக்கவும்.
v தோசை கல்லினை காயவைத்து, அடைகளாக ஊற்றவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, அடைகளை திருப்பி போட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.

v சுவையான சத்தான 16 பீன்ஸ் பருப்பு அடை ரெடி.

19 comments:

நட்புடன் ஜமால் said...

இந்த அடையில் 16 வகையான பீன்ஸ்
]]

சூப்பருங்கோ.

Pavithra said...

Wow thats protein loaded adai.. looks so good and delicious..

கீதா ஆச்சல் said...

இங்கு இந்த 16 வகையான பீன்ஸ் packet கிடைக்கும். அதனை வைத்து செய்தது தான்.

நிறைய சத்துள்ள பருப்பு வகைகள் என்றால் உடம்பு நல்ல்து தானே...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்.

கீதா ஆச்சல் said...

//Wow thats protein loaded adai..//ட்ஆமாம் பவி, இந்த அடை அதிக புரோட்டின் நிரம்பியது...அனைவருக்கும் எற்ற சத்தான அடை...

குறை ஒன்றும் இல்லை !!! said...

பார்ரா..எனக்கு வருசம் 16 தான் தெரியும் ஆனா இங்கே பீன்ஸ் 16 !!! கலக்குங்க!!!

Hema said...

Kudos to your work Geetha.. It is good to see a blog written all over in tamil.. Pleasure to read.. First time here.. Its a lovely space

யோ வாய்ஸ் said...

உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சந்ரு said...

ஆரோக்கியமான பதிவு, அதிக சத்தான உணவு என்று சொல்லுங்க...
இனி என்ன அம்மாவை செய்து தரச் சொன்னால் போச்சுது.

கீதா ஆச்சல் said...

//எனக்கு வருசம் 16 தான் தெரியும் ஆனா இங்கே பீன்ஸ் 16 !!! //ரொம்ப குசும்பு தான் ராஜ் அண்ணா உங்களுக்கு...எப்படியும் இப்ப பீன்ஸ் 16 பற்றி தெரிந்து இருக்கும்...உங்களுக்கு

கருத்துக்கு நன்றி...

கீதா ஆச்சல் said...

//It is good to see a blog written all over in tamil.. Pleasure to read.. First time here.. Its a lovely space//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா...

அடிக்கடி கண்டிப்பாக இந்த பக்கம் வாங்க..

கீதா ஆச்சல் said...

தங்கள் விருதுக்கு நன்றி யோகா.

கீதா ஆச்சல் said...

//ஆரோக்கியமான பதிவு, அதிக சத்தான உணவு என்று சொல்லுங்க...
இனி என்ன அம்மாவை செய்து தரச் சொன்னால் போச்சுது//

நன்றி சந்ரு...கண்டிப்பாக் அம்மாவை செய்து கொடுக்க சொல்லுங்க...சத்தான உணவு

டவுசர் பாண்டி said...

சகோதரி , அவர்களுக்கு இன்று எனது பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல் , உங்களுக்கு மிகவும் பயன் படும் , என நினைக்கிறேன் , சென்று பாருங்கள் பிடித்திருந்தால் , உபயோகப் படுத்திப் பாருங்கள் ,( சமையல் பற்றி , உள்ள
டிப்ஸ்களுக்கு ) நன்றி.

http://athekangal.blogspot.com/2009/08/blog-post_23.html

sarusriraj said...

geetha diet recipie pottu kalakunga

கீதா ஆச்சல் said...

தகவலுக்கு நன்றி டவுசர் பாண்டி அண்ணா.

கீதா ஆச்சல் said...

நன்றி சாரு அக்கா.

இலா said...

Geetha .. i made this adai.. nice one... i got the mix too from stop and shop

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி இலா.

asiya omar said...

அருமை.
இப்படி கலந்த தானியங்கள், பயறு மிக்ஸ் ஷாப்பில் கிடைக்கிறது,நான் வாங்கி முன்பு கிரேவி செய்திருக்கிறேன். நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...