அவகடோ சால்சா (Avocado Salsa)அவகடோ கெட்ட கொலஸ்ட்ராலினை கட்டுபடுத்து நல்ல கொலஸ்ட்ராலினை உயர்த்துகின்றது. இதில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), விட்டமின்ஸ்(Vitamin K ,B & C) காணப்படுகின்றது. இது பழவகையினை சேர்ந்தது. எந்தஒரு பழத்திலும் இல்லாத அளவிற்கு இதில் monosaturated Fat இருக்கின்றது.
அவகடோவினை மெக்ஸிகன் சமையலில் அதிகம் உபயோகிக்கின்றனர்.
சால்சா செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ அவகடோ – 1
§ தக்காளி – 1
§ சிகப்பு வெங்காயம்(Red Onion) – 1/4
§ பூண்டு – 1 பல்
§ பச்சை மிளகாய் – 1
§ கொத்தமல்லி – சிறிதளவு
§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v அவகடோவினை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

v அதனுடைய சதை பகுதியினை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். (ஒரு ஸ்பூனை வைத்து எடுத்தால் சதை பகுதி தோலில் இருந்து எளிதில் வெளிவந்துவிடும்.)

v அவகடோவின் சதை பகுதியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.தக்காளி + வெங்காயம் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். (தக்காளியின் விதைகளை நீக்கிவிட்டு நறுக்கவும்.)

v பூண்டு + பச்சை மிளகாயினை ஒன்றும் பாதியுமாக நசுக்கி கொள்ளவும்.
v ஒரு பவுலில் அவகடோ + தக்காளி + வெங்காயம் + கொத்தமல்லி + பூண்டு + பச்சை மிளகாய் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து கலக்கவும்.

v இப்பொழுது சுவையான அவகடோ சால்சா ரெடி.

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

இதுக்கெல்லாம் நான் எங்க போக?

GEETHA ACHAL said...

அவகடோ , சென்னையில் reliance கடைகளில் கிடைக்கும் என்று கேள்விபட்டு இருக்கின்றேன்...அங்கு போய் பாருங்கள்...

SUFFIX said...

எங்க வீட்டில அவகேடா ஜூஸ் அடிக்கடி செய்வதுண்டு, இது புது ரெஸிப்பியா இருக்கு முயற்சி செய்து பார்க்கிறோம் மேடம். நன்றி!!

GEETHA ACHAL said...

//எங்க வீட்டில அவகேடா ஜூஸ் அடிக்கடி செய்வதுண்டு, இது புது ரெஸிப்பியா இருக்கு //

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஷஃபிக்ஸ்..

கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும். நன்றி.

Anonymous said...

i think avocado is a vegetable....

shri said...

here in singapore, avacado is a common fruit. the pulp can be mixed with sugar and can be taken a bread spread also. i make this pulp as an toppping for vanilla ice cream to my son. mrs.shri chandru

Related Posts Plugin for WordPress, Blogger...