பேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல் (Bachelors Vazhakkai Varuval)

வாழைக்காய் அதிக நார்சத்து கொண்ட காய். இதில் விட்டமின் சி & பி, Potassium மற்றும் Magnesium அதிகமாக காணப்படுகின்றது. இதனை வாரத்திற்கு ஒரு முறை சேர்த்து கொண்டால் நல்லது.


இந்த வாழைக்காய் வறுவல் செய்வது மிகவும் சுலபம். இதில் வாழைக்காயினை முதலில் தூள் வகைகளுடன் சேர்த்து பிரட்டி ஒரு நிமிடம் வதக்கிய பிறகு தண்ணீர் ஊற்றி வேகவைத்தால் 
காரம் அனைத்து வாழைக்காய் துண்டுகள் மீது ஒட்டி நன்றாக சுவையாக இருக்கும்.


இந்த வாழைக்காய் வறுவலினை, கலந்த சாதம் வகைகள், சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ வாழைக்காய் – 2
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ பூண்டு – 2 பல்
§ கருவேப்பில்லை – 4 இலை
§ கடுகு – 1/4 தே.கரண்டி
பொடி வகைகள்:
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
கடைசியில் சேர்க்க:
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை :
v வாழைக்காயினை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.
v ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கருவேப்பில்லை + நசுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும்.
v பிறகு வாழைக்காயினை சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின், பொடி வகைகளை சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.

v 2 கப் தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு முடி வாழைக்காயினை வேகவைக்கவும்.

v வாழைக்காய் நன்றாக வெந்த பிறகு, கொத்தமல்லி தூவி மேலும் 2 நிமிடங்கள் வறுக்கவும்.

சுவையாக வாழைக்காய் வறுவல் ரெடி.

15 comments:

Nithya said...

Super :)

இலா said...

you served vazakkai on baby spinach ?? Nice idea though

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்போ எனக்கில்லையா? இத சாப்பிடனும்னா வீட்டில இருக்கிற அம்மிணிய என்ன பண்ண?

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா

கீதா ஆச்சல் said...

ஆமாம் இலா. வாழைக்காயினை ஸ்பினாச் கீரையில் தான் வைத்து Serve செய்து இருக்கிறேன்..
இதனை சாலடுன் தான் சாப்பிட்டோம் இலா...நன்றாக இருந்தது..

Mrs.Menagasathia said...

சூப்பர் கீதா!!

வால்பையன் said...

கல்யாணம் ஆனவுங்க சாப்பிடலாமா! கூடாதா!?

கீதா ஆச்சல் said...

//கல்யாணம் ஆனவுங்க சாப்பிடலாமா! கூடாதா!?// இதனை சீக்கரத்தில் செய்துவிட முடியும்.பேச்சுலர்ஸுக்கு சீக்கிரத்தில் சமைக்க வேண்டும் என்பதால் அப்படி பெயர் வைத்தேனே அன்றி...இந்த வறுவலினை அனைவரும் சாப்பிடலாமே...
ரொம்ப வாலுதான்...

கீதா ஆச்சல் said...

//அப்போ எனக்கில்லையா? இத சாப்பிடனும்னா வீட்டில இருக்கிற அம்மிணிய என்ன பண்ண?//
அம்மணியை வெளியில கடைக்கு போக சொல்லி அவங்க வருவதற்கு முன் சமைத்து அசத்துங்க...கொஞ்சம் அவங்களுகாகவும் மிச்சம் வையுங்க...

கீதா ஆச்சல் said...

நன்றி மேனகா..

manjula said...

looks very colourful

தத்துபித்து said...

valaikkai vangumpothu "bachelor valaikai" ya illaiya nu eppadi kandupudikirathu?

கீதா ஆச்சல் said...

நன்றி மஞ்சுளா.

Thamarai selvi said...

ரொம்ப ஈஸியா இருந்தது, நல்ல டேஸ்ட் நன்றி கீதா!!!

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி தாமரை.

Related Posts Plugin for WordPress, Blogger...