பார்லி கட்லட் (Barley Cutlets)பார்லியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியமனது.
பார்லி என்றாலே கஞ்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல்..இப்படி கட்லட் செய்து பாருங்கள்…பிறகு எப்பொழுதும் கட்லட் தான் செய்வோம்…
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ வேகவைத்த பார்லி – 1 கப்
§ ஒட்ஸ் – 1 கப்
§ எண்ணெய் – சிறிதளவு
§ உப்பு – தேவையான அளவு
வதக்கி கொள்ள :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – தாளிக்க
§ வெங்காயம் – 1
§ பச்சை மிளகாய் – 1
§ கொத்தமல்லி,புதினா – சிறிதளவு
§ கரம்மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
செய்முறை :
v வெங்காயம் + பச்சை மிளகாய் +புதினா, கொத்தமல்லியினை பொடியாக வெட்டி கொள்ளவும். ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
v வேகவைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின், வெங்காயம் + பச்சை மிளகாய் + கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
v வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் கொத்தமல்லி,புதினா தூவி , சிறிது நேரம் ஆறவிடவும்.
v அரைத்த பார்லி + வறுத்த ஒட்ஸ் + வதக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.)
v இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கட்லடுகள் செய்யவும்.
v தோசை கல்லினை காயவைத்து, சிறிய சிறிய கட்லட்(விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.) தட்டி தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும்.
v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, கட்லடுகளை திருப்பி போட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.

v சுவையான சத்தான பார்லி ஒட்ஸ் கட்லட் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
இதில் வெஜிடேபுள்ஸ் சேர்த்து கட்லட் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
அவரவர் விருப்பதற்கு எற்றாற் போல மசாலாவினை சேர்த்து கொள்ளலாம்.
ஒட்ஸுனை விரும்பினால் ஒன்றும் பாதியுமாக பொடித்தும் சேர்த்து கொள்ளலாம்.

8 comments:

குட்டி பிரபு said...

ஹும்..நல்லா இருக்குங்க!சுவையான தகவல்னா அது இதுதானோ?

Nithya said...

Super sathana unavu.. kalakareenga as usual. :)

Mrs.Menagasathia said...

பார்லியில் கட்லட்டா?கலக்கலா இருக்கு கீதா.சூப்பர்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

Thxxxxxxxxxxxxxxxxx

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குட்டி பிரபு.

கீதா ஆச்சல் said...

//Super sathana unavu.. kalakareenga as usual. :)// நன்றி நித்யா...

கீதா ஆச்சல் said...

//பார்லியில் கட்லட்டா?கலக்கலா இருக்கு// ஆமாம் பார்லியில் கட்லட் தான்...செய்து பாருங்கள் மேனகா. நன்றாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

நன்றி ராஜ் அண்ணா.

Related Posts Plugin for WordPress, Blogger...