பார்லி பொங்கல் (Barley Pongal)

சுவையான சத்தான பொங்கல்…..


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி – 1 கப்
· பாசி பருப்பு – 3/4 கப்
· இஞ்சி – சிறிய துண்டு
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
· நெய் – 1 மேஜை கரண்டி
· மிளகு – 1/2 தே.கரண்டி
· சீரகம் – 1 தே.கரண்டி
· முந்திரி – சிறிதளவு
· கருவேப்பில்லை – 5 இலை
செய்முறை :
v பார்லி + பாசிபருப்பினை நன்றாக கழுவி அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி + மஞ்சள் தூள் + உப்பு + 4 – 5 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 4 – 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
v சிறிது நேரம் கழித்து, பிரஸர் குக்கரினை திறந்த வேகவைத்த பொருட்களை ஒருமுறை கரண்டியால மசிக்கவும்.

v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பார்லி பொங்கலுடன் சேர்க்கவும்.

v தாளித்த பொருட்களுடன் சேர்த்தும், திரும்பவும் ஒரு முறை நன்றாக கிளறவும்.
v சுவையான சத்தான பார்லி பொங்கல் ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

குறிப்பு :
விரும்பினால் தாளிக்கும் பொழுது பச்சை மிளகாயினை சேர்த்து தாளிக்கலாம். சுவையாக இருக்கும்.

26 comments:

Unknown said...

நிஜமாவே ரொம்ப எதிர்ப்பார்ப்பாக இருக்குங்க

இதை செய்து பார்க்க.

பொங்கல் ரொம்ப பிடிக்கும்

GEETHA ACHAL said...

//நிஜமாவே ரொம்ப எதிர்ப்பார்ப்பாக இருக்குங்க

இதை செய்து பார்க்க.

பொங்கல் ரொம்ப பிடிக்கும்//
கண்டிப்பாக செய்து பாருங்கள் ஜமால்...மிகவும் சுவையாக இருக்கும்...

எங்கள் வீட்டில் இதனை செய்தவுடன் காலியாகிவிட்டது...மிகவும் சூப்பராக இருக்கும்...

Menaga Sathia said...

பார்க்கவே சாப்பிட ஆசையா இருக்குப்பா!!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...

செய்து பாருங்கள் சுவையாக ருசியாக இருக்கும்..

S.A. நவாஸுதீன் said...

பார்லி பாயாசம் பார்த்த கையோட பார்லி பொங்கல். பொங்கல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். முயற்சி செய்து பார்ப்போம்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//எங்கள் வீட்டில் இதனை செய்தவுடன் காலியாகிவிட்டது...மிகவும் சூப்பராக இருக்கும்...//

நீங்களே எல்லாத்தையும் சாப்பிட்டீங்களா?

Priya Suresh said...

Barleyla kuda pongal'aa, nenachikuda pakkave mudiyala, romba superaa irruku Geetha...

ஸ்வர்ணரேக்கா said...

பொதுவா பொங்கலும், உப்புமாவும் நிறைய பேருக்கு பிடிக்காது.. ஆனா எனக்கு ரொம்ப புடிக்கும்... ஸோ.. உங்க பார்லி பொங்கல செஞ்சு, நல்லா ஒரு புடி புடிக்க வேண்டியது தான்....

இலா said...

it came out very nice.. i liked jeera/black pepper/chilli thalippu..

sury siva said...

barley is also a diuretic. It helps in particular pregnant women in the last tri-semester particularly those who are prone to genito-urinary infections. Added to protein, it helps in metabolism.
However, gynaecologists particularly in USA are a little hesitant about advising barley during the last month of pregnancy. Excessive barley may lead to dehydration, they fear. So it is preferred to consult one's gynaec before taking barley based products during the last month of pregnancy.
For others, no doubt, this is a good dish. May we visit you during our next trip to USA to taste this dish?
Meenakshi paatti.
http://arthamullavalaipathivugal.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

தெய்வசுகந்தி said...

பார்லியில நான் எதுவுமே செஞ்சதில்ல. பொங்கல் ட்ரை பண்ண போறேன். பார்க்கவே நல்லா இருக்கு.

sakthi said...

இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டேனே இந்த வலைப்பூவை

கலக்கல் உணவு வகைகள்

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் நவாஸுதின். சுவையாக இருக்கும்.நன்றி

GEETHA ACHAL said...

////எங்கள் வீட்டில் இதனை செய்தவுடன் காலியாகிவிட்டது...மிகவும் சூப்பராக இருக்கும்...//

நீங்களே எல்லாத்தையும் சாப்பிட்டீங்களா?//

நல்லா இருந்தா சாப்பிட வேண்டியது தானே...பின்ன என்ன சும்மா பார்க்கவா முடியும்...

GEETHA ACHAL said...

//Barleyla kuda pongal'aa, nenachikuda pakkave mudiyala, romba superaa irruku Geetha...//

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

//பொதுவா பொங்கலும், உப்புமாவும் நிறைய பேருக்கு பிடிக்காது.. ஆனா எனக்கு ரொம்ப புடிக்கும்... ஸோ.. உங்க பார்லி பொங்கல செஞ்சு, நல்லா ஒரு புடி புடிக்க வேண்டியது தான்.//

எனக்கும் எங்க அம்மா செய்யும் உப்புமா, பொங்கல் மிகவும் பிடிக்கும் (நான் செய்யும் உப்புமாவும் சிலசமயம்...பிடிக்கும்..)

கண்டிப்பாக செய்து பாருங்கள் ஸ்வர்ணா..நன்றி

GEETHA ACHAL said...

//it came out very nice.. i liked jeera/black pepper/chilli thalippu..//செய்து பார்த்துதற்கு நன்றி இலா.

எங்கள் வீட்டில் அம்மா, பொங்கலுக்கு எப்பொழுதும் பச்சை மிளகாயினையும் சேர்த்து தான் தாளிப்பாங்க...சுவையாக இருக்கும். நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மீனாட்சி பாட்டி. உங்களை போன்ற பெரியவர்கள் என்னுடைய ப்ளாகினை பார்த்துவிட்டு பின்னுடம் அனுப்பியது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது..

கண்டிப்பாக அடுத்த முறை US வரும் பொழுது , உங்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி

GEETHA ACHAL said...

//பார்லியில நான் எதுவுமே செஞ்சதில்ல. பொங்கல் ட்ரை பண்ண போறேன். பார்க்கவே நல்லா இருக்கு//கண்டிப்பாக செய்து பாருங்கள் சுகந்தி. நன்றி

GEETHA ACHAL said...

//இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டேனே இந்த வலைப்பூவை

கலக்கல் உணவு வகைகள்//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி.

அடிக்கடி இந்த பக்கம் வாங்க...அன்புடன் அழைக்கின்றேன்...

சாருஸ்ரீராஜ் said...

பார்கவே ரொம்ப நல்லா இருக்கு

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா.

shiyam said...

Hi Geetha,

I try your recipes like Oats pongal oats kolukattai,very nice, today i am going to make oats rava idly.

thank you very much for your recipes

i am
Shiyamala

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஷியாமளா.

தங்கள் என்னுடைய குறிப்புகள் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி.

நேரம் கிடைக்கும் பொழுது, கண்டிப்பாக ஒவ்வொரு குறிப்பாக செய்து பாருங்கள். அனைத்தும் நன்றாக இருக்கும்.

அன்புடன்,கீதா ஆச்சல்

Nithu Bala said...

Geetha, I tried this recipe..thanks for sharing..loved it:-) Just now posted it in my blog..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது..

Related Posts Plugin for WordPress, Blogger...