கொள்ளு துவையல்இந்த துவையினை என்னுடைய தோழி. திருமதி. சரஸ்வதி அவர்கள் எனக்கு சொல்லிகொடுத்தது. இந்த துவையல் சேலத்து ஸ்பெஷல் துவையல்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

§ கொள்ளு – 1 கப்

§ சின்ன வெங்காயம் – 5

§ காய்ந்த மிளகாய் – 5

§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

§ நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி

§ கடுகு – 1/4 தே.கரண்டி

§ சீரகம் – 1/2 தே.கரண்டி

§ புளி – சிறிதளவு

§ உப்பு – தேவையான அளவு

செய்முறை :

§ கொள்ளினை 4 – 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

§ கடாயில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சின்ன வெங்காயம் + சீரகம் போட்டு வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

§ இத்துடன் புளி + பெருங்காயம் சேர்த்து சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.

§ பிறகு கடாயில் கொள்ளினை போட்டு , அதனை தட்டு போட்டு முடி 5 – 6 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். இதனையும் சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.

§ ஆறவைத்த பொருட்கள் + தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

§ சுவையான கொள்ளு துவையல் ரெடி.

குறிப்பு :

கொள்ளினை ஊறவைக்க இல்லையெனில் அதனை Pressure Cookerயில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 – 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.

6 comments:

Ammu Madhu said...

கீதா அக்கா கொள்ளு தொகையல் சூப்பர்.கொள்ளு இந்தியன் ஸ்டோர்ல கிடைக்குதா?இல்ல வால்மார்ட்லையே கிடைக்குமா?

அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நனறிங்க.. இது கண்டீப்பா உபயோகப்படும்..

GEETHA ACHAL said...

நன்றி அம்மு. இந்த கொள்ளினை நான் இங்கு இருக்கும் American Groceryயில் தான் வாங்கினேன்.கொள்ளு இந்தியன் கடைகளில் கிடைக்கும். walmartயிலும் கூட கிடைக்கும் . செய்து பாருங்கள்.

GEETHA ACHAL said...

//நனறிங்க.. இது கண்டீப்பா உபயோகப்படும்//

தங்கள் கருத்துக்கு நன்றி...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

Anonymous said...

romba nalla taste ah erunthathu nanri

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி அனானி...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி..

Related Posts Plugin for WordPress, Blogger...