பூசணிக்காய் பச்சடிஇந்த பூசணிக்காய் பச்சடியினை, சப்பாத்தி, புலாவ், பிரியாணி போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
உடல் எடையினை குறைக்க விரும்பவர்கள் பூசணிக்காயினை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பூசிணிக்காயில், அதிக அளவு தண்ணீர் தன்மை உள்ளது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ பூசணிக்காய் – 1/4 கிலோ
§ தயிர் – 1 கப்
§பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
§ உப்பு – தேவையான அளவு
அரைத்து கொள்ள :
§ பச்சை மிளகாய் – 1
§ தேங்காய துறுவல் – 1 தே.கரண்டி
§ தயிர் – 1 தே.கரண்டி
தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ கருவேப்பில்லை – 4 இலை
செய்முறை :
v பூசணிக்காயின் தோலினை நீக்கி அதனை காரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
v அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v துறுவிய பூசணிகாய் + தயிர் + கொத்தமல்லி + அரைத்த பொருட்கள் + தாளித்த பொருட்கள் சேர்த்து கலக்கவும்.

v சுவையான பூசணிக்காய் பச்சடி ரெடி.
குறிப்பு :


தேங்காயினை விரும்பாதவர்கள் அதனை தவிர்த்துவிடவும்.

4 comments:

Pavithra Elangovan said...

hi geetha i too make this ..it makes body cool as well as good for diet peoples cos of water content and fibre

Nithya said...

Lovely dishes and nice pictures.

I am really glad to see a lovely blog in tamil. :)

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவி..

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்யா.
//I am really glad to see a lovely blog in tamil. :)//மிகவும் மகிழ்ச்சி.

Related Posts Plugin for WordPress, Blogger...